Posts

அலட்சியத்தால் பலியான இளம் பிஞ்சுகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

Image
பள்ளிகளின் அலட்சியமும் பரிதாப மரணங்களும்! வருடா வருடம் பள்ளிகளின் அலட்சியத்தால் பிஞ்சுகள் இறப்பது தொடர்கதையாகிவிட்டது. ஆயிரக்கணக்கில் வேன் ஃபீச் வாங்கும் பள்ளிகள் முடிந்த வரை பெற்றோரின் பர்ஸை காலியாக்குவதில் செலுத்தும் கவனத்தில் சிறிதுகூட அந்த வேன்களின் பராமரிப்பில் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் பரிதாபமான உண்மை!    வேன்களில் அளவுக்குமீறி பிள்ளைகளை திணித்துக்கொண்டு புளிமூட்டைகளாய் செல்லும் வேன்களின் டிரைவர்களுக்கு பெரும்பாலும் ஓட்டுனர் உரிமம் கூட இருப்பதில்லை!ஆனால் இதெல்லாம் பள்ளிகளின் தாளாளர்களுக்கோ முதல்வர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ அவசியம் இல்லை! அவர்களுக்கு வேண்டியது பணம்! பணம்!     இவர்களின் அலட்சியத்தால் நேற்று மேலும் ஒரு பிஞ்சு தன் இன்னுயிரை ஈந்து இருக்கிறது! பஸ்ஸில் இருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்து பின் சக்கரத்தில் அடிபட்டு பலியான அச்சிறுமியின் வயது நான்கு.சென்னை தாம்பரம் அடுத்துள்ள  சேலையூர் பகுதியில் இயங்கி வரும் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி. மாணவியின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். ஏழையாக இருந்தாலும் தன் மகளை நன்கு படிக்க வைத்துபெரிய...

கண்ணகி பத்தினின்னு கம்ப்யூட்டருக்கு தெரியாதா? ஜோக்ஸ்!

Image
5ரூபாவுக்கும் 100ரூபாவுக்கும் என்ன வித்தியாசம்? ? ? ? 95ரூபாய்தான் வித்தியாசம்! by Abdul kalam kitta award vanga thudippor sangam! நிலவையும் விண்ணையும் பிரிப்பது அம்மாவாசை! என்னையும் அவளையும் பிரிப்பது அவள் அம்மா ஆசை! பையன்: நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! பொண்ணு: தேங்க்ஸ்! பையன்: உங்களை விட உன் தங்கச்சி இன்னும் அழகா இருக்கா! பொண்ணு: போடா நாயே! பையன்: அது உங்க ரெண்டு பேரவிட சூப்பரோ சூப்பர்! முதலிரவுக்கும் கடைசி இரவுக்கும் என்ன வித்தியாசம்! ரொம்ப சிம்பிள்! பூ மேலெ நீ விழுந்தா அது முதல் இரவு! உன் மேல பூ விழுந்தா அது கடைசி இரவு! என்ன தான் கண்ணகியை ஊரெல்லாம் பத்தினின்னு சொன்னாலும் கண்ணகி போட்டோவை டவுன் லோடு பண்ணும் போது கம்ப்யூட்டர்  சொல்றது ஒன் ஐட்டம் டவுன்லோடுன்னுதான்! இதில் எது புத்திசாலி!? வட்டம், சதுரம்? சதுரம்தான்! ஏன்னா அதுக்கு நாலு மூலை இருக்கே! மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம்? 1 2 3 4  மழையில ஸ்ரேயா டேன்ஸ் ஆடுவா! வெயில்ல பாவனா டேன்ஸ் ஆடுவா? சர்தார் ஒரு பிரஷர் குக்கர் வாங்கினார். மறுநாள் அதை...

தெருக்குடிமக்கள்! கவிதை!

Image
சாலை ஓரங்களே எங்கள் வீடு! சேலைத் துணிகளே எங்கள் கூடு! வானமே எங்களுக்கு கூரையானதால் வரும் விருந்தாளிகளுக்கு அளவில்லை! தெருவோரக்குழாயில் குளித்து உருவாகும் பசியை மறைத்து உழைக்கத் தேடுவோம் பிழைப்பு! அழைப்பவன் தரும் அரைக்கூலியில் பிழைப்புக்கு கால் போக மீதிகால் கட்டாயம் அரசுக்கு ஏகுவோம்! உருவாகும் நோய்கள் எங்கள் முதல் விருந்தாளி! தெருவோர நாய்கள் எங்கள் தோழன்! மழை வந்தால் வருத்தப்படும் மரபுப் பிழைகள் நாங்கள்! வாகனங்களின் தாலாட்டில் வசதியாய் குழந்தைகள் தூங்க அசதி அடித்துப் போடுகையில்ஆனந்தமாய் வருகிறது கொசுவைமீறிய தூக்கம்!! மேம்பாலங்கள் எங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றன! புழுதிபடிந்த எங்களை கழுவிப்பார்க்க போட்டத் திட்டங்கள் அழுக்காகிப் போனது!  வறுமைக் கோடு எங்களை பிரித்துள்ளதால்  வளர்ச்சிகள் எங்களை எட்டவில்லை!  உயரத்தில் ஏறும் விலைவாசி மட்டும்- எங்கள்  துயரத்திலும் வந்து நிற்கும்!  தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை எரிக்க சொன்னவன் பூமியில் ஜடங்களாய் திரியும் எங்களை காக்க- ஒரு ஜனம்...

செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி!

Image
பெங்களூர்: 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் கடந்த 3 மாதமாக செங்கல் சூளையில் கூலி வேலை பார்க்கிறார். கடந்த 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் அவர் நாடு திரும்பிய பிறகு அவர் பெண்ணா, ஆணா என்ற பிரச்சனை எழுந்தது. அது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுகளும் அவருக்கு எதிராக இருந்தன. இதையடுத்து அவர் வாங்கிய பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பறிக்கப்பட்டதுடன் அவர் இனி எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாதவாறு இந்திய தடகள கூட்டமைப்பு அவருக்கு தடை விதித்தது. பெர்லின் உலக சாம்பியன்ஷிப் 2009 போட்டி ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற தென்னாப்பிரிக்க தடகள வீராங்கனை செமன்யா இதே போன்று சர்ச்சையில் சிக்கிய பதக்கத்தை இழந்தார். அவர் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று சர்வதேச தடகள போட்டிகளுக்கான கூட்டமைப்பு சங்கம் அவருக்கு தடை விதித்தது. ஆனால் தென்ன...

எழுத படிக்க தெரியாதவங்க முதல்வரா இருக்கலாமா? மண்ணாங்கட்டியின் கேள்வி? கதையல்ல நிஜம்!

Image
இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்... “அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா த ேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார். ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி ...

பேய்கள் ஓய்வதில்லை!

Image
பேய்கள் ஓய்வதில்லை!   உங்கள் பிரிய “பிசாசு” பகுதி 1. ரெண்டுங்கெட்டான் வயசு என்று சொல்வது போல பொன்னேரியும் ஒரு ரெண்டுங்கெட்டான் நகரம். அதை நகரம் என்றும் சொல்லமுடியாது. கிராமம் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. அனைத்து வசதிகளும் இருக்கிறது என்று சொல்ல முடியா விட்டாலும் ஓரளவு வசதிகள் உள்ள நகரம் அது. ஊருக்கு ஒதுக்குபுறமாய் ஒரு ரயில் நிலையம், மையத்தில் பேருந்து நிலையம். பல்பொருள் அங்காடிகள் என நிறைந்து நின்றாலும் புழங்கும் மக்கள் எல்லோருமே பெரும்பாலும் கிராமவாசிகளே. ஏனெனில் பொன்னேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்களே அதை விடுத்து நாலாபுறமும் கிராமங்களே இருந்தன. இந்த கிராமங்களில் ஒன்றில்தான் நமது கதை துவங்கி இருக்கவேண்டும் நான் நேற்று எழுதியிருந்தால். எதிர்பாராதவிதமாக இன்று எழுதுவதால் பொன்னேரியில் நமது கதை துவங்குகிறது.    பொன்னேரியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வீட்டுக்குத்தேவையான பொருட்களை பார்த்துபார்த்து எடுத்து ட்ராலியில் போட்டுக்கொண்டிருந்தான் ராகவன். அப்போதுதான் அவனது அலைபேசி ஒலித்தது. அட கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டானுங்களே என்றவாறு செல்லின் ...

அவரும் .. இவரும் சில வித்தியாசங்கள்!

Image
அவரும் .. இவரும் சில வித்தியாசங்கள்! எப்படியோ இந்தியாவின் 13வது ஜனாதிபதியை தேர்ந்தெடுத்து முடித்துவிட்டார்கள். பிரதமர் பதவியை கேட்டு ராகுலுக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்று சோனியா பயந்த பிரணாப் இன்று நாட்டின் அதிகாரப்பூர்வ ரப்பர் ஸ்டாம்ப் ஆகிவிட்டார். ஒரு காலத்தில் இந்த ஜனாதிபதி பதவிகள் கவுரவமானதோடு முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருந்தன. பாபு ராஜேந்திரபிரசாத் முதல் ராதாகிருஷ்ணன் என்று தொடங்கிய இந்த வரிசையில் சஞ்ஜீவ ரெட்டியார் வந்தபின் தான் இந்த பதவி ரப்பர் ஸ்டாம்ப் ஆகிப்போனதாக படித்துள்ளேன்.    நேற்றைய தினமலர் இது உங்கள் இடத்தில் ஒரு வாசகர் எழுதியிருந்த கடிதம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த தகவல் நான் எப்போதோபடித்ததுதான்! ஆனால் இதை அந்த வாசகர் எழுதி பிரதீபா பாட்டீலோடு ஓப்பிட்ட விதம் ரசிக்க வைத்தது. அவரது வரிகளை அப்படியே தருகிறேன்.    இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் ராஜாஜி, கவர்னர் ஜெனரல் என்னும் பதவிதான் ஜனாதிபதி அல்லது ராஷ்டிரபதி என பிறகு அழைக்கப்பட்டது. இந்த பதவியை லார்ட் மவுண்ட் பேட்டனுக்குப்பிறகு ராஜாஜி அலங்கரித்தார். பிறகு ராஜ...