கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 102

1.ஓட ஓட  தூரம் குறையலை...!  மந்திரியாரே!

    நாசமாப் போச்சு!  மன்னா! நீங்க இப்போ அரண்மனையில் சைக்ளிங் பயிற்சியில் இருக்கிறீர்கள்!


2.   பேஸ்புக் “லைவ்”ல தலைவர்  பேசப் போறாராமே...!

   நேரடியா திட்டு வாங்கினவர் இப்ப நேரலையிலே திட்டு வாங்கப் போறார்னு சொல்லு!


3. கொரானா நிவாரணப்பணிகளில் எங்களை பங்கேற்க விடாமல் இந்த அரசே அனைத்தையும் செய்து விடுகிறதுன்னு தலைவர் கோபப்படறாரே...!

   எல்லாம் “பங்கு” கிடைக்காத கோபம்தான்!


 4. ட்ரோன் கேமராவை பார்த்ததும்  மாப்பிள்ளை ஏன் ஓடறார்...!

    அவருக்கு கிரவுண்ட்ல இருக்கிற ஞாபகம் வந்துடுத்து போல...!


5.  என்னது கொரானாவுக்கு தேங்க்ஸ் சொல்லணுமா ஏன்?
  கொரானாவாலே டீவி சீரியல் வாரத்துக்கு நாலு நாலா குறைஞ்சி போச்சு மூணு நாள்  நேரத்துக்கு சாப்பாடு போட்டுடறாளே என் பொண்டாட்டி அதுக்குத்தான்!


  6. எதிரி நம் எல்லைக்கு  மோப்பம்  பிடிக்க வந்திருக்கிறான் என்று எப்படி சொல்கிறீர் மந்திரியாரே...!
  முகத்தில் மாஸ்க் அணியாமல் எவனோ ஒருவன் நம் எல்லையில் சுற்றிக் கொண்டிருக்கிறானாம்  மன்னா!


 7.ஆன்லைன்ல பாடம் எடுக்கிறப்போ பசங்க க்ளாஸ் கட் பண்ணிட்டு  சுத்தறாங்களா எப்படி/

   க்ளாஸை கட் பண்ணிட்டு ஓடிடியிலே சினிமா பார்க்கிறாங்க சார்!


 8.காலையிலே வீட்டுக்கு வரும்போது “ கபசுரக் குடிநீர்” கொடுத்தீங்க ரொம்ப தேங்க்ஸ் சார்!

     ஐயையோ  அது    “காபி” சார்!

9.  எதிரி நான்கு பக்கமும் சுற்றி வளைத்துவிட்டான் மன்னா!

          சுரங்கப்பாதை வழியே “கம்பி நீட்டி”விட தயாராகுங்கள் மந்திரியாரே!


10.   தலைவருக்கு பொது அறிவே இல்லையா எப்படி சொல்றே?

         பத்தாம் வகுப்புவரை ஆல் பாஸ் பண்ணியது போல  எல்லோருக்கும் இ- பாஸ் வழங்க வேண்டும்னு அறிக்கை விடறாரே!


11.   தலைவர் சுத்தமான கரங்களுக்கு சொந்தக்காரரா மாறிட்டாராமே கமிஷன் வாங்கிறதை நிறுத்திட்டாரா?
     அட நீ வேற  அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவறதைத்தான் அப்படி சொல்லிக்கிட்டுத் திரியறாரு!


12.  கொரானா நிவாரணம் வழங்கப் போன   இடத்துலே  தலைவர் மானத்தை வாங்கிட்டாரா எப்படி?

  டோக்கனை வாங்கிட்டு எல்லோரும் மறக்காம எங்களுக்கே ஓட்டுப் போடனும்னு  பேசிட்டாரு!


13.  ஊரடங்கு போட்டிருக்கு  பைக்ல சுத்திட்டிருக்கியா? எடு சாவியை?

           சாவி இல்லை சார்?
      ஏண்டா?
   இது திருடிட்டு வந்த பைக் சார்...!

14.  அவர் பிராணிகள் நல ஆர்வலராம்!
     இருக்கட்டுமே...! அதுக்காக “சாம்பிராணி” கூட கொளுத்தக் கூடாதுன்னு சொல்றது நல்லா இல்லை!

15.   கவர்ச்சி நடிகையை  கொரானா விழிப்புணர்வு பிரசாரத்துக்கு எதுக்கு கூப்பிடறாங்க?
   அவங்க படங்கள்ல  சமூக “இடைவெளியை” அதிகமா  காட்டறாங்களாம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னுட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே! நன்றி!


   
     Comments

  1. ஹா.. ஹா.. அனைத்தும் ஸூப்பர்.

    ReplyDelete
  2. ரசித்தேன்... சிரித்தேன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?