”பாச்சா”ஸ் ஃபன் க்ளப்!


பாச்சாஸ் ஃபன் க்ளப்!
                நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.


பாச்சாமாமா! என்று எல்லோராலும் அழைக்கப்படும் பார்த்தசாரதிக்கு வயது 60 கடந்துவிட்டது. அவரது சகதர்மிணிசச்சுஎன்ற சரஸ்வதியிடம் வைத்த பயம் இன்னும் விலகவில்லை. கொரானா ஊரடங்கில் இப்போது ஊர் அடங்கியிருக்கிறது என்றால் இவர்சச்சுவின் கழுத்தில் தாலி கட்டியதுமே அடங்கிப்போனார்.
    கொரானாப் பொழுதுகளில் ஒரு நாள் கிழமை தெரியாத மத்தியான வேளையில் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்த பாச்சாவை எழுப்பினார் சச்சு மாமி!  ஏன்னா! சித்தே எழுந்து மாடியிலே வடாம் காயப்போட்டிருக்கேன்! போய் பார்த்துக்கங்க! கையிலே மொபைல் எடுத்துட்டு போங்கோ! உள் கதவை தாழ்ப்போட்டுக்கங்க! நான் எங்க லேடிஸ் கிளப் செக்ரட்டரி வீடுவரை போய் வரனும்.” என்றாள்.
  மதிய தூக்கம் கெட்டுப்போன கண் எரிச்சலில் பாச்சா மாமா சற்று உச்சஸ்தாயியில்இப்போ எதுக்கு செகரெட்டரி வீட்டுக்கு போகனும் இந்த வேகாத வெயிலிலே?” அதுவும் ஊரடங்கு வேற போட்டிருக்கு?  என்று கொஞ்சம் சுருதி குறைத்து கேட்டார்.
 மரியாதை காணாமல் போய்விட்டது மாமாவுக்கு  நான் செகரெட்டரி வீட்டுக்கு எதுக்குப் போறேன் ஏன் போறேன் இதெல்லாம் சொல்லணூமா? ஒல்ட் மேன்! யூ ஷுட் இன்ஸல்ட் மீ! ஐயம் ஃப்ரிடம் வுமன்? யூ நோ? என்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்ததும் பாச்சாவுக்கு வியர்த்து போனது.
 சச்சு கோச்சுக்காதே! வெயிலாயிருக்கேன்னு…!”
 ஸ்டுப்பிட்! நோ! ப்ளீஸ் டு இட் சே..! என்று விளாசிவிட்டு ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
  சச்சுப் பாட்டி அந்தக்காலத்து இங்கிலீஷ் டீச்சர். அதை அவ்வப்போது இப்படி பேசித் தீர்த்து கொள்வார்.  மாமி வெளீயே சென்றதும் கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டு மொட்டை மாடிக்கு படிகளில் ஏறினார். கைகளில் செல்போனோடு.
 போடிக் கியவி! ஏசி ரூம்ல சுகமான தூக்கம் போட்டுக்கிட்டு இருந்தவனை இப்படி வேகாத வெயில்ல வத்தலுக்கு காவல் வச்சு வறுத்தா எடுக்கிறே! எனக்கும் ஒரு காலம் வரும்டி அப்போ வைக்கிறேண்டி உனக்கு ஆப்பு…!” மைண்ட் வாய்சில் சொல்லிக்கொண்டே பேஸ்புக்   ஓப்பன் செய்தார்.
  பேஜ் ஓப்பன் ஆனதுமே கொரானாத் தகவல்கள் வந்து கொட்டிக் கொண்டே இருந்தது. அதில் ஒரு பத்துவயது சிறுவன் தான் சேர்த்து வைத்த 1400 ரூபாயை வீதியில் ஆதரவற்றிருப்போருக்கு உணவுக்கு பயன்படுத்துமாறு காவல்துறையிடம் பணத்தை கொடுக்கும் காட்சி பாச்சாவுக்கு பிடித்துப் போனது.
 தம்மாத்தூண்டு பையன்என்னமா சேவை பண்றான்? நாம பண்ணக் கூடாதா? என்று சத்தமாகவே கேட்டுவிட்டார்.
     பண்ணலாம் தலை…!  குரல் கீழே சாலையிலிருந்து கேட்டது.
அட நம்ம  தபேலாவாய்ஸ் போல இருக்கே என்று எட்டிப் பார்த்தார். ஆம் தபேலாவேதான்!  கூட  ரெட்டித்தெரு பிகிலும் நின்றிருந்தான்.
    ஏய் தபேலா! பிகிலு!” என்ன்ங்கடா இந்த பக்கம்?”
  எல்லாம் தலையை பார்த்துசொகம்விசாரிச்சுட்டுப் போலாம்தான்! கொரானா தடை போட்டதுலே இருந்து உம் ஊட்டாண்ட வர்லாங்காட்டியும்! அதான் ஜல்தியா ஒரு விசிட் போட்டுக்கனூ போலாம்னு வந்தேன்!”
  தபேலா! கரெக்டா கியவி இல்லா நேரமாத்தான் வந்திக்கினே.. இரு.. டோர் ஓப்பன் பண்றேன்…!
  வேகமாக கீழே இறங்கி கதவைத்திறந்து அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் போய் படிக்கூண்டில் அமர்ந்தார். டேய் தபேலா! நீ ஏதாவது சோஷியல் சர்வீஸ் பண்ணீயிருக்கியாடா? என்றார்
  வர்தா புயல் வந்தங்காட்டியும் நான் எங்க பேட்டையிலே நிறைய பேருக்கு சோறு வாங்கி கொடுத்திருக்கேன்.
   உம் பணத்தை போட்டா?
 எங்கிட்ட ஏது பணம்? அந்த சமயம் யாரோ ஒரு பணக்காரன் கொடுத்த சோத்து பொட்டலத்தை எடுத்துட்டு போய் பங்கு போட்டு கொடுத்தேன்
   அதே தாண்டா!
நானும் சோஷியல் சர்வீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணீட்டேண்டா!
மாம்ஸூ அதுக்கு நெறய துட்டு வேணூம்!  நீயே சிங்கிள் பைசாவுக்கு மாமிக்கிட்டே கை ஏந்திக்கிட்டு நிக்கறேஎன்றான் பிகில்
 டேய் பிகிலு…! இதான் சான்ஸூன்னு என்னை கலாய்க்கிறே இல்லே! இந்த பாச்சா மாமா! யாருன்னு காமிக்கறேன்! நாளைக்கு பேஸ்புக்கிலே நான் சேவை பண்ற வீடியோத்தான் வைரலா வரப் போவுது…!
   அதாங்காட்டியும் இப்பவேதான் வைரஸ் பரவிக்கிணூ கீதே…!
வைரஸ் இல்லேடாஅது வைரல்…!
தோ சும்மாங்காட்டியும் நீ உடான்ஸ் விட்டுக்கிட்டு கிடக்காதே…! இன்னா பண்ணப்போறே அத அவுத்து வுடு…! என்றான் தபேலா..!
 டேய் தபேலா…! நாளைக்கு மத்தியானம் உங்க பேட்டையிலே இருக்கிறவங்களூக்கு நான் சாப்பாடு கொடுக்கப் போறேன்! அதை வீடியோவுலே எடுத்து பேஸ்புக்கிலே போடப் போறேன்! வைரல் ஆவப் போறேன்!
  எல்லாம் ஓக்கே தல! ஒரு நூறு பேருக்கு சாப்பாட்டு பொட்டலம் போடணும்னா கூட ஒரு பொட்டலம் வாட்டர் பாட்டலு எல்லாம் சேர்த்து 40 ரூபா ஆகுமே அப்ப நாலாயிரம் ரூபா வேணுமே! உன்கிட்ட இருக்கா தல..!
    என்கிட்டே இல்லே…! ஆனா கியவிகிட்டே இருக்குடா?
 கெயவி…! சேமாமி உனக்கு அவ்ளோ துட்டு கொடுக்குமா தல?
கொடுக்கமாட்டா! எடுத்துட வேண்டியதுதான்…!
 டேய் தபேலா! கியவியோட .டி.எம் கார்டு ஒண்ணை ஆட்டைய போட்டுடலாம்னு  நினைச்சிருக்கேன்! ஒருசமயம் என்கிட்டே கொடுத்து அவசரமா பணம் எடுத்துவரச்சொன்னா அப்ப பாஸ்வேர்டும் சொன்னா! அதை மறக்காம எழுதியும் வைச்சிருக்கேன். அந்த கார்டையும் பாஸ் வேர்டையும் நாளைக்கு காத்தாலே ஆட்டையை  போட்டு உங்கிட்டே கொடுக்கிறேன் நீ பேங்க் போயி ஐயாயிரம் ரூபா எடுத்துக்க..
  ஃபைவ் தவுஸண்ட் எதுக்கு தல? நூறூ பேருக்கு ஃபோர் தவுஸண்ட் தான் ஆகும்!
   என் கைச்செலவுக்கு  ஆயிரம் வேணும்டா..!
தலஇவ்ளோ கஷ்டப்பட்டு ஒனக்கு ஹெல்ப் பண்றோம்! எங்களூக்கு எதுவும் கிடையாதா? கடைவேற மூடிக்கெடக்கு  சரக்கு அடிச்சு எவ்ளோ நாள் ஆவுது தெரியுமா?
   குடிகாரப் பசங்களா?  சரி உங்களூக்கு ஒரு தவுஸண்ட் எடுத்துக்கோங்க ஆத்துல போறத் தண்ணீதானே…! ஆளுக்கு கொஞ்சம் அள்ளிக் குடிப்போம்!
  தலை ஒனக்கு ரொம்போ பெரிய மன்சு தலை…! பிகில் பாச்சாவின் கையை பிடிக்கவர  ஸ்டுப்பிட் பெலோ! கொரானா காலத்துலே கை கொடுக்க கூடாதுடா! இப்படி லெக் ஷேக் தான் பண்ணனும்  முதல்ல கர்சீப் எடுத்து முகத்தை கட்டு
 சரி தலை அப்புறம் ப்ளானைச் சொல்லு…!
  உங்க பேட்டையிலே இட்லி சுட்டு விக்குதே பொன்னம்மா அதுங்கிட்டே சொல்லி ஒரு நூரு பொட்டலம் லெமன் ரைஸ் கட்டச்சொல்லு! அண்ணாச்சி மளிகை கடையிலே நூறூ கால் லிட்டர் வாட்டர் பாட்டில் வாங்கிக்க  நாளைக்கு மத்தியானம் 12 மணிக்கு கியவிகிட்டே எதாவது சாக்கு சொல்லிட்டு நான் உங்க பேட்டைக்கு வந்துடறேன். பேட்டையில இருக்கிற ஜன்ங்களூக்கு நான் பொட்டலம் கொடுக்கிறேன் அத நீ போட்டோ எடுக்கிறே பேஸ்புக்லே போடறோம் லைக்கும் கமெண்டும் அள்றோம்!
      அல்லாம் சரி..! நூறு பொட்டலம் போடறதுக்கு அட்வான்ஸ் கேக்குமே பொன்னம்மா கியவி அப்புறம் மளீகை கடை அண்ணாச்சி கடன் தரமாட்டாரே
   இங்கதான் உன் ஹெல்ப் தேவைப்படுது தபேலா…!
என்னா ஹெல்ப் மாம்ஸூ ? உனக்குன்னா உயிரைக் கூட கொடுப்பான் இந்த தபேலா…!
    உன்னோட தபேலா இருக்குல்லே அதை சேட்டுகிட்ட அடமானம் வச்சி கொஞ்சம் பணம் புரட்டிக்க.. நாளைக்கு ஏடி.எம்ல பணம் எடுத்த்தும் மூட்டுக்கலாம்..!
பார்த்தியா மாம்ஸூ அடிமடிலெயே கை வைக்கிறியே !
வேற வழியே இல்லே தபேலா..! உன் மாம்ஸூக்கு இது கூட செய்ய மாட்டியா?
சரி தலை..! என் வ்வுத்துக்கு சோறு போடறதே அந்த தபேலாதான்! உனக்காக நான் அதை அடகு வைக்கிறேன்.. தபேலா தம்ஸ் அப் செய்யவும் வாசலில் காலிங் பெல் ஒலித்தது. நல்ல சகுனம் மாம்ஸூ!
  கியவி வந்துட்டாடா! கத்தப்போறா!”
பூனை நடை நடந்து கதவை ஓப்பன் செய்தார் பாச்சா மாமா!
உள்ளே நுழைந்த சச்சு மாமி!  அப்பப்பா! என்ன வெயில்! தீஸ் க்ளைமேட் ஹீஸ் வெரி ஹாட்…! வாட் ஆர் யூ டாக்கிங் அபவுட் ஃப்ரம் திஸ் சில்லி பீப்புள்ஸ்? என்று தபேலாவையும் பிகிலையும் பார்த்துக் கேட்டார்..
  டீச்சர்.. சில்லி நோ! ஐயம் கில்லி பாய்ஸ்! பாச்சா அங்கிளை கண்டுக்கிணூ போலாம்னு வந்துக்கனோம்!
   வாட் லாங்க்வேஜ் திஸ்! டோண்ட் லைக் திஸ்..
இன்னா மாமி..! தஸ் புஸ்ஸுன்னு நீ இங்கிலிபீஷ்லே பேசுறேஅதே நாங்க தமில்ல பேசுனா ராங் காட்டிக்கிறே…!
மாமிக்குசுள்ளென்ற கோபம் தலைக்கேறியது..! ரெடிக்குலஸ் பீப்பீள்ஸ்! யூ ஸ்பீக் டமிள்.. திஸ் இஸ் நாட் டமிள்.. சே கெட் அவுட் ப்ரம் திஸ் ஹவுஸ்…!
தபேலாவும் பிகிலும்திருதிருவென முழிக்க.
  முதல்ல இவங்களை அனுப்பித்தொலையுங்க! வயசுக்கேத்த சகவாசம் வச்சுக்கனூம்! பேர பாரு.. தபேலா 
பாச்சா சைக காட்ட தபேலாவும் பிகிலும் நழுவினர்.
அன்றிரவு
மாமி அசந்த நேரம் பார்த்து  ஹேண்ட் பேகிலிருந்து ஏடிஎம் கார்டை சுட்டு பொழுதுவிடிந்த்தும் பிகிலை அழைத்து அதை  கொடுத்து அனுப்பிவிட்டு தபேலாவுக்கு கால் செய்தார்.
  நீ கவலைப் படாதே மாம்ஸு! எல்லாம் செம பேஜாரா போய்க் கிட்டிருக்கு! என் தபேலாவை அடகு வைச்சுக்க மாட்டேன்னு சொல்லிட்டான் சேட்டு! விடுவனா..என் பொண்டாட்டி போட்டிருந்த கால்சவரனை ஆட்டைய போட்டு அடமானம் வைச்சு துட்டு வாங்கிட்டேன்! அண்ணாச்சிக்கிட்டே நூறு வாட்டர் பாட்டில் வாங்கி வீட்டுல வைச்சிட்டேன்! பொன்னம்மா கியவிகிட்டே ஒரு ஆயிரத்தை கொடுத்து லெமன் ரைஸ் பாக்கெட் போட சொல்லிட்டேன். நீ வர வேண்டியதுதான் பாக்கி..
   சரி சரி..பிகில் கால் பன்றான் கட்பண்ணு!
  மாம்ஸே…! என்னா மாம்ஸே இப்படி பண்ணீட்டே!
 என்னடா ஆச்சு பிகிலு.. இப்படி வயித்துலே புளீயை கரைக்கிறே?
மாம்ஸ் ஏடிஎம் பாஸ்வேர்ட் ராங்க்னு சொல்லுது மிசினு! இதுவரைக்கும் அஞ்சு ஏடிஎம் தேடிப்போய் போட்டு பார்த்துட்டேன்!
  அப்ப பணம் வரலியா?
ஏடிஎம் வாசல்லே செக்யூரிடி முறைச்சதுதான் மிச்சம் வாத்யாரே..!
 இப்ப என்னடா பண்றது?
பேசாம நான் தபேலாவோட பேட்டைக்கு வந்துடறேன் அவங்கிட்ட பணம் எடுக்கலைன்னு சொல்லாதே! எப்படியாவது சமாளிப்போம்..நீயும் வந்துடு!
அடுத்த அரைமணியில் பேட்டையில் இருந்தனர் இருவரும்
   எங்கடா பிகிலு! பணம் எடுத்திட்டியா? கியவிக்கு பணத்தை கொடுத்துட்டு  டெலிவரி எடுக்கணும்.
பிகிலு பாச்சாவைப் பார்க்க, பாச்சா ட்ராபிக் போலீசிடம் மாட்டிய லைசென்ஸ் இல்லாத ஆசாமி போல பரிதாபமாக முழித்தார்.
  தபேலா! ஏடிஎம்ல துட்டு எடுக்க முடியிலே.. பிகில் சொல்லவும்.
என்னாது…! துட்டு வர்லியா  தபேலாவுக்கு அவன் சம்சாரம் துடைப்ப கட்டையுடன் துரத்தும் காட்சி கண்முன்னே வந்து அபாயச்சங்கு ஊதியது
   என்னாடா ஆச்சு? என்றான் கலவரமாய்!
ஏடிஎம் பின் தப்பா கொடுத்துட்டாருய்யா மாம்ஸூ
  யோவ்! ஒழுங்கா கரெக்ட் பின் கொடுக்கவேண்டியதுதானேய்யா!
தபேலா! போனமாசம் நான் இந்த கார்டிலே இந்த பின் போட்டுதான் கேஷ் எடுத்தேன்..
  அப்போது அங்கே அது போனமாசம்! என்ற சச்சுவின் குரல் கேட்டது
 நீயா…? பென் ஸ்டோக்சிடம் அடிவாங்கிய பவுலர் போல வெளிறிப்போனார் பாச்சா மாமா!
    என்ன நடக்குது இங்கே?
சோஷியல் சர்வீஸூங்க டீச்சர்..  தபேலா பவ்யமா சொல்ல!
ஸ்டாப் இட்! நீங்க சொல்லுங்க!
பேஸ்புக்கில் வீடியோ போட  இப்படி ஏடிஎம் கார்ட் திருடி மாட்டிக்கிட்ட கதையை புலியிடம் சிக்கிய நரி குரலில் பதவிசாய் சொல்லி முடித்தார் பாச்சா
 சில்லி பீப்புள்ஸ்!
இதை முதல்லேயே சொல்லியிருந்தா நானே பணம் கொடுத்திருப்பேனே.. ஆனா பேஸ்புக்கிலே போடறது லைக் கமெண்ட்டுக்கு ஆசைப்படறது இதெல்லாம் நல்லா இருக்கா…! இவங்களும் நம்ம மக்கள்தானே…! நம்ம சேவையை நாமே படம் பிடிச்சி விளம்பர படுத்திக்கனூமா?
  தப்புதான்  சச்சு! மன்னிச்சிரு…!
தபேலா! செலவு எவ்வளவு ஆச்சு! வில் பே…!
ஃபோர் தவுசன் டீச்சர்…!
இந்தா இதுல டென் தவுசன் இருக்கு! நாளைக்கும் இவங்களுக்கு மதியம் லன்ச் கொடுத்திடு.. மீதம் இருந்தா வயசானவுங்களூக்கு மருந்து மாத்திரை ஏதாவது வாங்கிக் கொடு! வாங்க போலாம்..!
   சச்சு! ஒரே போட்டோ?
நோ வாங்கப் போலாம்…!
கிளம்பும் போது கேட்டார் மாமா! அந்த ஏடிஎம் பின் ஏன் வொர்க் ஆகலை!  அதை நான் நீங்க பணம் எடுத்துவந்த மறுநாளே மாத்திட்டேனே என்றார் சச்சு எகத்தாளமாய்.

பின் குறிப்பு:  லாக்டவுன் ஆரம்ப சமயத்தில் இந்த கதையை முகநூலில் பதிந்தேன். ஓரளவு வரவேற்பு இருந்தது. அப்புறம் தேன்சிட்டு மின்னிதழில் வெளியிட்டேன். பின்னர் முகநூல் மத்யமர் குழுவில் பதிந்த போது சிலர் பாக்கியம் ராமசாமியை காப்பி அடிக்கிறேன் என்று சிலர் சொன்னார்கள். அவர்களுக்கு நான் பாக்கியம் ராமசாமி ஸ்டைலை கொஞ்சம் பின்பற்றியுள்ளேன் கதைக்கரு என்னுடையதுதான் என்று சொன்னேன். பாராட்டு எதிர்ப்பு இரண்டும் இருந்தது. இங்கே வலைப்பூ நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இந்த வகையில் இன்னும் இரண்டு கதைகள் எழுதியுள்ளேன். தொடரலாமா? அவற்றோடு நிறுத்திக் கொள்ளலாமா? என்றும் தெரிவிக்கவும். நன்றி!




Comments

  1. கதைக்கருவினை ரசித்தேன். ஜெ..யின் ஓவியத்தை சேர்க்காமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். ஏனென்றால் ஒன்றின் தாக்கத்தை வைத்து படிப்பதைப் போன்ற ஓர் எண்ணத்தை இந்த ஓவியம் நினைவூட்டுகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2