ராணி வார இதழில் வெளிவந்த எனது பரிசு பெற்ற கதை!

மூக்குமுட்ட குடித்துவிட்டு கையில் பாட்டிலுடன் உள்ளே நுழைந்தான் சண்முகம். அஞ்சி நடுங்கி சுவரின் மூலையில் பதுங்கிய செல்வியைப் பார்த்து கேட்டான் சண்முகம், ஏம்மே பயப்பட்றே?! நான் என்ன பேயா? பிசாசா? உங்கப்பன் மே…! ”அப்பா நான் ஒண்ணு கேட்கட்டுமா? ” கேளும்மே! ”பேயும் பிசாசையும் நான் பார்த்தது இல்லேப்பா! பயப்படமாட்டேன்! அப்படியே அது என்னை பிடிச்சாலும் என்னைத்தான் அழிக்கும்! . உன்னை பிடிச்சிருக்கிறது குடிப்பா…! அது நம்ம குடும்பத்தையே அழிக்குது! அதான் பயப்படறேன்!..” செல்வி சொல்லவும் பதில் பேச முடியாது தலை குனிந்தான் சண்முகம்.

முக நூலில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் வைத்த குடி விழிப்புணர்வு கதைப்போட்டியில் பரிசு பெற்ற என்னுடைய கதை. சென்றவார ராணியிலும் இந்த கதை பிரசுரம் ஆனது. எனக்கு பெருமகிழ்ச்சி தந்தது. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது நூல் ஒன்றை கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தார். ராணி வார இதழில் வந்ததை கீழே புகைப்படமாக பகிர்ந்திருக்கிறேன்.


நன்றி! 

நண்பர் நீச்சல்காரன் அவர்களின் எழுத்துருவை பயன்படுத்தி நண்பர் திண்டுக்கல் தனபாலன் வழிகாட்டுதலின் படி எழுதியுள்ள முதல் பதிவு.


தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!  



Comments

  1. மிக நல்ல கதை.பாராட்டுகள்.

    தொடர்ந்து எழுதுங்கள்.சாதிக்கலாம்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!