சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்!
சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்! ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையாரின் வாக்கு. தமிழகம் எங்கும் சிவாலயங்கள் நிறைந்த பூமி. சிவ சிவ என்கையிலே நம் தீவினைகள் எல்லாம் ஓடிவிடும் என்பது பெரியோர் வாக்கு. சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து செய்துவந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும் என்பது ஐதீகம். பிரதோஷம் என்பது மாதம் இரண்டுமுறை ஆலயங்களில் அனுஷ்டிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரயோதசி, மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் ஆறு மணிவரை பிரதோஷ காலம் என்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த திரயோதசி திதி கார்த்திகை மாதத்தில் சனிக்கிழமைகளில் வந்தால் சனிமஹாப்பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. அன்றுதான் சிவன் ஆலகால விஷத்தை உண்டதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே சனிக்கிழமைகளில் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது. இருப்பினை மாதப்பிரதோஷமும் அதிலும் சனிப்பிரதோஷமும் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகி...