இந்த வார கவிதை மணியில் என் கவிதை!

தினமணி கவிதை மணியில் என்னுடைய கவிதை!

இந்தவாரம் திங்களன்று 17-7-17 அன்று தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதை!

இன்றைய தாலாட்டு: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி  |   Published on : 17th July 2017 04:36 PM  |   + -   |  
தூளியே தொலைந்த காலத்தில்
கொஞ்சம் தள்ளியே நிற்கிறது
இன்றைய தாலாட்டு!
அம்மாக்கள் அரவணைப்பில்
பாட்டி தாத்தா பாசத்தில்
பயணித்த தாலாட்டு
இன்று தேய்பிறையாய்
தேய்ந்து கிடக்கிறது!
நிலா முற்றங்களில் நீண்டு ஒலித்த
தாலாட்டுப் பாடல்கள்
அப்பார்ட்மெண்ட் அடுக்ககங்களில்
அமிழ்ந்து கிடக்கிறது!
சோறுட்டும் போதும்  தாலாட்டும் போதும்
இசையூட்டிய அம்மாக்கள்
பசை தேடி பயணிக்கையில்
திசை தெரியாமல் திணறி
மூச்சிழந்து முடங்கி கிடக்கின்றன!
அலைபேசிகளும் தொலைக்காட்சிகளும்
தோழனாக உலாவும்
தோற்றப்பிழை காலத்தில் பிள்ளைகளுக்கு
கிடைப்பதில்லை
பெற்றவளின் தாலாட்டு!
திரையிசையும் தெருவசையுமே
இன்றைய பிள்ளைகளுக்கு
என்றும் தாலாட்டு!
வசதிகள் எல்லாம் வழக்கமாக
வழுவிப் போய் வெறும்
தழுவலோடு நின்றுவிட்டது
இன்றைய தாலாட்டு!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! 


                                

Comments

  1. வலையுலகில் இருந்து ஊடக உலகிற்கு சென்றவர்கள் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைத்திருக்கும் எங்கள் சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்

    கவிதை அருமை

    ReplyDelete
  2. சுரேஷ் வாழ்த்துகள்! அருமையான கவிதை!

    ReplyDelete
  3. அருமையான கவிதை . வாழ்த்துக்கள் சுரேஷ்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!