தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

ஆடை தொலைத்தன மரங்கள்
முகம்திருப்பின பறவைகள்!
இலையுதிர்காலம்!

குறுத்துக்கள் முளைக்கையில்
இடம்பெயர்ந்தன
பழுத்த ஓலைகள்!

பூத்தூவிய மேகங்கள்!
வாசமான பூமி!
சாறல்மழை!

இறப்புக்கு நாள் குறித்தும்
வருந்தவில்லை  
பூ ஈன்ற வாழை!

ஒட்டிக்கொண்டு பிரிய மறுக்கிறது
ஒவ்வொரு குழந்தையிடமும்
மண்!

எண்ணெய் குடித்து
இறந்து போனது
விளக்குத்திரி!

ஒளிகொடுக்க
உயிரைக் கொடுத்தது
விளக்குத்திரி!

வெளிச்சம் போட்டு காட்டியது
விளக்குகள்
இரவு நேரத்தில் தூரத்து கிராமம்!


மண்சோறு ஊட்டிக்கொண்டது பாப்பா!
பசியோடு தூங்கிப்போனாள்
சோறுட்டிய தாய்!

நெருப்பாய் சுட்டது!
ஈரத்தை விழுங்கிய
மணல்!

இரவு முழுதும் பயணம்!
இலக்கினை எட்டவில்லை!
நிலா!

குழந்தை தவழ்ந்துவருகையில்
ஈரமாகிறாள்
பூமித்தாய்!

வானம் கறுக்கும் முன்
வானிலை அறிவித்தன
தும்பிகள்!

ஓடும் குதிரைகளை
ஒழுங்குபடுத்தின ஒளிரும் விளக்குகள்!
டிராபிக் சிக்னல்!

அலைகள் அழிக்குமென்றாலும்
வளை தோண்டின
நம்பிக்கை இழக்கா நண்டுகள்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. வணக்கம்
  ஐயா
  ஒவ்வொன்றும் ஒரு விதம் மிக அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அட அட அட சும்மா சொல்லக் கூடாது அனைத்தும் சூப்பர். அதில் எனக்கு மிகவும் பிடித்தது
  இரவு முழுதும் பயணம்!
  இலக்கினை எட்டவில்லை!

  அலைகள் அழிக்குமென்றாலும்
  வளை தோண்டின
  நம்பிக்கை இழக்கா நண்டுகள்!
  நிலா!
  தொடர வாழ்த்துக்கள் ...!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும் ....!

  ReplyDelete
 3. ரொம்ப அருமையா இருக்கு சுவாமிகளே
  வாட்சப்பில் போட்டிருக்கிறேன்
  உங்கள் முகவரியோடு

  ReplyDelete
 4. நீங்கள் நண்டு என்றதும் நண்டு நொரண்டுகூட வந்து விட்டாரே ,சபாஷ் :)

  ReplyDelete
 5. நண்பரே!
  ஓவ்வொரு குறுங்கவிதையும் குன்றாத சிறப்புக்குரியவை!
  அதிலும் அந்த.....

  இரவு முழுதும் பயணம்!
  இலக்கினை எட்டவில்லை!
  நிலா!

  அலைகள் அழிக்குமென்றாலும்
  வளை தோண்டின
  நம்பிக்கை இழக்கா நண்டுகள்!

  மன தில் ஜில்!

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 6. அலைகள் அழிக்குமென்றாலும்
  வளை தோண்டின
  நம்பிக்கை இழக்கா நண்டுகள்!

  நம்பிக்கைதானே வாழ்க்கை
  அருமை நண்பரே

  ReplyDelete
 7. அனைத்தும் மிக அருமையாக உள்ளது ரசித்தேன்

  ReplyDelete
 8. ஹைக்கூ என்றால் என்னன்னு தெரில..ஆனால் அனைத்தும் அருமையான சிந்தனை கவனிப்புகள்

  ReplyDelete
 9. இலையுதிர்காலம்
  பழுத்த ஓலைகள்
  சாறல்மழை
  பூ ஈன்ற வாழை
  மண்
  விளக்குத்திரி
  விளக்குத்திரி
  தூரத்து கிராமம்
  மணல்
  நிலா
  பூமித்தாய்
  தும்பிகள்
  டிராபிக் சிக்னல்
  நம்பிக்கை இழக்கா நண்டுகள்
  தங்கள் கவியில் எது விடுபட்டது?
  எல்லாம் அடக்கம்.
  வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 10. அட! அட! அனைத்தும் அருமை! ரசித்தோம் நண்பரே!

  ReplyDelete
 11. அனைத்துமே அருமை. மேலும் தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெற்றி உன் பக்கம்! கவிதை!

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!