சுட்டுப் போட்டு விட்டால் எல்லாம் சரி ஆகிவிடுமா?


  எதற்கெடுத்தாலும் என்கவுண்டர் என்ற மோசமான முன்னுதாரணம் இப்போது பெருமையாக பேசப்படுகிறது. திருடினானா சுட்டுவிடு! கொள்ளையடித்தானா? கொலை செய்தானா? சுட்டுவிடு! ரவுடியா? சுட்டுவிடு! இது ஓர் மோசமான பழக்கம்! மனித உயிர்களின் மதிப்பு அறியாதவர்கள் நடத்தும் இந்த வேட்டை தடுக்கப்பட வேண்டிய ஒன்று.

     வயிற்றுப் பிழைப்புக்கு மரம் வெட்டும் கூலியாட்களை  கொன்று போட்டுவிட்டால் மர மாஃபியாக்கள் ஒழிந்துவிடுவார்களா? அந்த கூலித்தொழிலாளர்கள் கல்லெடுத்தே அடித்திருக்கட்டுமே! அதற்காக இப்படி கொன்றுதான் ஆகவேண்டுமா? காயப்படுத்தி பிடித்து இருக்க முடியாதா? சில ஆயிரக்கணக்கான மரங்களை மீண்டும் பயிரிட்டு வளர்த்துவிட முடியும். ஆனால் இழந்த உயிர்களை மீண்டும் உயிர்பித்துவிட இந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுக்களால் முடியுமா?

       வாழ்வாதாரம் இல்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காக அரைஜான் வயிற்றை கழுவ குறைந்த கூலிக்கு இப்படி மரம் வெட்டச் சென்று அடிமைகளாகி அவர்களிடம் அடிவாங்கி உதைபட்டு  ஏதோ சில ரூபாய்களை குடும்பத்திற்கு சம்பாதிக்க இந்த அப்பாவித் தொழிலாளர்கள்  மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்கிறார்கள். செய்வது திருட்டு என்று தெரிந்தும் அவர்களுக்கு வேறு வழியில்லை!

     வறண்ட மாவட்டம்! விவசாயம் பொய்த்துவிட்டது! ஆலைகள் மூடிக்கிடக்கின்றன. படிப்பறிவு கிடையாது! என்ன செய்வார்கள் பாவம்! இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய அரசு என்ன செய்துவிட்டது? செத்து போனபின் தரும் இந்த மூன்று லட்சத்தை முதலிலேயே தந்து ஏதாவது தொழில் செய்ய உதவி இருக்கலாம் அல்லவா?

      இன்னும் ஒருவாரம் ஊடகங்களில் இந்த செய்திகள் அடிபடும்! அப்புறம் வழக்கமான பரபரப்பில் ஐ.பி. எல் மோகத்தில் இதை எல்லோரும் மறந்துவிடுவார்கள். இன்னும் ஓர் ஆறுமாதமோ இல்லை ஒருவருடம் கழித்தோ மீண்டும் ஓர் என்கவுண்டர் வரும்போது மீண்டும் மீடியாக்கள் பற்றிக்கொள்ளும். அப்புறம் அதே பழைய கதை!

     இறந்து போன கூலித்தொழிலாளிகளின் குடும்பங்களை சுட்டவர்கள் நினைத்து பார்ப்பார்களா? இவர்களுக்கு  இருக்கும் குடும்பம் போலத்தானே அவர்களுக்கும் இருக்கும். அவன் திருடனாய் இருந்தால் என்ன? அவனுக்கும் ஓர் குடும்பம் ஒன்று உண்டல்லவா?
    
        தவறுகளை திருத்த இப்படி தவறுகளை செய்து கொண்டிருப்பது ஏன்?  தவறு ஏன் நடக்கிறது? எங்கு நடக்கிறது அதை கண்டறியாமல் எய்தவன் இருக்க அம்பை நொந்து  என்ன பயன்? 

   மரங்களை வெட்டக் கூடாது என்றால் தக்க பாதுகாப்பு போடுவது? இதில் ஈடுபடும் முக்கிய தலைகளை விட்டுவிட்டு இப்படி அப்பாவி மக்களை கொன்றதில் கொஞ்சமும் நியாயம் இல்லை! இரு மாநில அரசுகளுமே இதில் பொறுப்பு உண்டு.

   மரங்களை வெட்டினார்கள் என்று கொன்று போட்டதும் தவறு. இப்படி கூலித்தொழிலாளர்களை செல்லவிட்டதும் தவறு. வாழ்வாதாரம் இல்லாதவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை பெருக்கித்தராமல் இப்படி சட்ட விரோதமாக செல்பவர்களை கண்டும் காணாமல் விட்டது தமிழகத்தின் தவறு.

வடக்கத்திய மாநிலங்களில் இருந்து எல்லாம் பஞ்சம் பிழைக்க தமிழகம் வருகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் வேலை தமிழகத்தில் இருப்பவர்களுக்கு கிடைப்பது இல்லையா? ஏன் ஆந்திர கூலித்தொழிலாளர்கள் எத்தனையோ பேர் தமிழகத்தில் பிழைக்கவில்லையா? அப்படி இருக்கும் போது இவர்கள் ஏன் வேலை தேடி ஆந்திரம் போக வேண்டும்?

      அதிக வருமானம்! வருமானம் கிடைக்கிறதே என்று இன்று வாழ்க்கையை இழந்து கிடக்கிறது இருபது குடும்பங்கள். இவர்கள் செய்தது தவறாகவே கூட இருக்கலாம்.  இருப்பினும் இவர்களின் கண்ணீர் இரு மாநில அரசுகளையும் சும்மா விடாது.

    இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் தமிழக அரசு செயல் படவேண்டும். இல்லையெனில் உயிருக்கு விலை கொடுக்கும் கொடுமையான அரசாகத்தான் மக்கள் பார்ப்பார்கள். 

சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்தாலும்  அவர்களுக்கு வந்தது இயற்கைக்கு மாறான ஓர்  இறப்பு! இப்புவியில் ஓர் இரக்கமில்லா அரக்கனாக உலா வரும் இந்த என்கவுண்டர் அரக்கன்களை கொல்ல எந்த கடவுள் அவதாரம் எடுத்து வருவாரோ தெரியவில்லை!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து  ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. வணக்கம்
  ஐயா
  பசியின் கொடுமை யாரை விட்டுவைத்தது.... உழைப்புக்காக சென்றவர்கள்...
  தமிழன்னாக பிறந்தது.. குற்றமா?,...ஆழ்ந்த அனுதாபங்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. இன்னும் ஒருவாரம் ஊடகங்களில் இந்த செய்திகள் அடிபடும்! அப்புறம் வழக்கமான பரபரப்பில் ஐ.பி. எல் மோகத்தில் இதை எல்லோரும் மறந்துவிடுவார்கள்.
  உண்மைதான் நண்பரே சரியாக சொன்னஈர்கள்

  ReplyDelete
 3. //செத்து போனபின் தரும் இந்த மூன்று லட்சத்தை முதலிலேயே தந்து ஏதாவது தொழில் செய்ய உதவி இருக்கலாம் அல்லவா?//
  நியாயமான கேள்வி

  ReplyDelete
 4. அப்பாவிகள் எல்லாம் பாவிகள் பல... அடப்பாவிகளா...

  ReplyDelete
 5. ஆறறிவுடையோர் என்போர் சிந்திக்கட்டும்.

  ReplyDelete
 6. ஜோசிக்க வேண்டும் இனியும் இவ்வாறு நடக்காமல் இருக்கும் வழிகளை.

  ReplyDelete
 7. அன்புள்ள அய்யா,

  சுட்டுப் போட்டு விட்டால் எல்லாம் சரி ஆகிவிடுமா? இதே நிலை வேறு மாநிலத்தவருக்கு நிகழ்ந்திருந்தால் சும்மா விடுவார்களா?

  தமிழன் கேட்க நாதியின்றி...கேட்பாரின்றிக் கிடக்கும் இழிநிலையில் உள்ளான்.

  வருமானம் கிடைக்கிறதே என்று இன்று வாழ்க்கையை இழந்து கிடக்கிறது இருபது குடும்பங்கள். இவர்கள் செய்தது தவறாகவே கூட இருக்கலாம். அதுக்காக சுடுவதுதான் நியாமா?

  மனித உரிமை மீறல் என்று அண்டை நாட்டைப் பற்றி கைநீட்ட என்ன அருகதை இருக்கிறது இந்தியாவிற்கு...?

  -நன்றி.


  ReplyDelete
 8. விலங்கினும் கீழா செயல்
  உரியவர்கள் தண்டிக்கப் பட்டே ஆகவேண்டும்

  ReplyDelete
 9. வருந்தத் தக்க ஒரு செய்தி

  ReplyDelete
 10. அக்குடும்பங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது...... இனிமேலும் நடக்காமல் இருக்கட்டும்....

  ReplyDelete
 11. சில நாட்கள் உச் கொட்டி விட்டு வேறு வேலைப் பார்ப்போம், பிறகு மற்றொரு செய்தி. இது தான் வாடிக்கை. தெரிந்தே செய்த தவறு இது. தண்டனைக் கிடைக்குமா? பார்ப்போம்.

  ReplyDelete
 12. நியாயமான கேள்விகள் சுரேஷ்! இழந்த உயிருக்கு ஈடுகட்ட முடியாது. னீங்கள் சொல்லி இருப்பது போல் அந்த லட்சங்கள் கொடுத்து தொழில் செய்து பிழைக்க வழி செய்திருக்கலாம்.....ம்ம்ம் இது மீடியாக்களில் சில நாட்கள்...பின்னர் ஐபிஎல் மோகம் அப்பி இதைப் பின்னுக்குத் தள்ளும். இது மட்டுமல்ல நண்பரே எல்லா வஷய்முமே இப்படித்தானே...சில நாட்க்ள் பேசப்படும்...அவ்வளவே..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெற்றி உன் பக்கம்! கவிதை!

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!