தமிழர்களின் தங்க மோகம்! கதம்ப சோறு பகுதி 58
கதம்ப சோறு பகுதி 58
தமிழர்களின் தங்க மோகம்! அட்சய திருதியை விற்பனை 3200 கிலோ!
தமிழர்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம்
இன்னும் குறையவில்லை. அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கினால் நல்லது என்று எந்த புண்ணியவான்
கிளப்பிவிட்டானோ தெரியவில்லை. நகை கடைகள் அன்று மட்டும் செம கல்லா கட்டுகின்றன. இந்த
வருடம் தமிழகத்தில் மட்டும் 3200 கிலோ தங்கம்
அட்சயதிருதியைக்கு விற்றுள்ளதாம். அப்புறம் தமிழன் எப்படி ஏழை ஆகிறான் என்று
தெரியவில்லை. ரோட்டோரத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத மக்களையும் இதே தமிழகத்தில்தான்
பார்த்துக் கொண்டிருக்கிறோம். நகை வாங்க வேண்டியதுதான் ஆனால் இப்படி யாரோ அவிழ்த்துவிடும்
புளுகுகளுக்கு எல்லாம் இரையாகி நகையை வாங்கி குவிக்க கூடாது. ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு
சேமிப்பு என்ற ஒரு நல்ல விஷயம் மட்டும் இதில் உண்டு. மற்றபடி கணக்கில் வராமல் பில்
போடாமல் எவ்வளவு விற்றார்களோ தெரியாது. இதில் கூட தந்தியில் 2500 கிலோ என்று போட்டிருந்தார்கள்.
வெளிநாடுகளில் 30 லட்சத்துக்கு வாங்கப்படும் தங்கம் இந்தியாவில் ஒரு கோடி ரூபாய் வரை
விற்கப்படுகிறதாம். எவ்வளவு லாபம் பாருங்கள். இதனால்தான் தங்கக் கடத்தல் அதிகரித்து வருகிறது. இப்படி கடத்தி வரும்
தங்கத்தை பிடித்து பாதுகாத்து வைக்கும் பெட்டகத்தில் இருந்து ஒரு பதினைந்து கிலோ வேறு
மாயமாகிவிட்டதாம். யார் வீட்டு சொத்து? அள்ளி முடிக்கிறவன் அள்ளி முடிக்கிறான். முடியாதவன்
தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறான். சரி நீங்க என்ன வாங்கினீங்க என்று கேட்கிறீர்களா?
உப்பு வாங்கினேன். ஏன் அது வளரக் கூடாதா? உண்மையிலேயே உப்புதான் பெரிய செல்வம் அது
தெரியுமா உங்களுக்கு?
ராகுலின்
மறுவிஜயம்!
எந்த
கட்சிக்கு வேண்டுமானாலும் தலைவராக இருந்துவிடலாம். காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தலைவராக
இருப்பது என்பது உரலுக்குள் விரும்பி தலையை விடுவது போல. காரணம் அத்தனை கோஷ்டிகள்.
யாரையும் திருப்தி படுத்தவே முடியாது. இத்தனை நாள் இவர்களை மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளையும்
கட்டி மேய்த்து பிரதமராக இருந்ததற்கே மன்மோகன் சிங்கிற்கு ஓரு அவார்டு கொடுக்கலாம்.
அத்தனை பெருமைமிக்க காங்கிரஸ் கட்சியில் சொல்லாமல் கொள்ளாமல் 57 நாள் விடுப்பு எடுத்து
விட்டார் ராகுல். எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. விடுவார்களா? ஆளாளுக்கு வறுத்து
எடுத்துவிட்டார்கள். சொந்த கட்சியிலேயே சிலர் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு இப்போது
ராகுல் ரீ எண்ட்ரி ஆனதும் வாயடைத்து போய் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் ஒரு தனிப்பட்ட
மனிதரின் ஓய்வை கிண்டல் செய்வது கூடாது இல்லையா? மனிதர் திரும்பி வந்ததும் விவசாயிகள்
பிரச்சனையை கையில் எடுத்து நில கையகப்படுத்தும் மசோதாவை எதிர்க்கிறார். பயபுள்ள இதிலாவது
தேறுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
அம்மா
கேஸின் தீர்ப்பு:
பவானி சிங் அரசு வக்கிலாக நியமிக்கப்பட்டது
செல்லாது என்று ஒருவரும் செல்லும் என்று ஒருவரும் சொல்ல இப்போது மூன்று நீதிபதிகள்
குழுவிடம் சென்றுள்ளது அந்த கேஸ். இதற்கிடையில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து
அப்பீல் செய்த வழக்கின் தீர்ப்பு முடிவுக்கு காத்திருக்கிறது. இந்த மூன்று
நீதிபதிகள் குழு அளிக்கும் முடிவைப் பொருத்தே இந்த கேஸின் தீர்ப்பு இருக்கும்.
பவானி சிங் நியமனம் செல்லாது என்றால் புதியதாக ஒருவரை நியமித்து மீண்டும் முதலில்
இருந்து விசாரிக்க வேண்டும். இதற்கிடையில் நீதிபதி வேறு ஓய்வு பெற உள்ளாராம்.
அடுத்த எலக்ஷன் வரை ஜவ்வாக இழுப்பார்களா என்று தெரியவில்லை. இதற்கிடையில்
ரத்தத்தின் ரத்தங்கள் கோயில் கோயிலாக யாகங்கள் அபிஷேகங்கள், பூஜைகள் பரிகாரங்கள்
என்று வெளுத்து கட்டுகிறது. பிரபலமான கோயில்களின் குருக்கள்களுக்கு கல்லா
நிரம்புகிறது. அதே சமயம் இந்த ரத்தத்தின் ரத்தங்களின் தொல்லையால் டென்சனும்
எகிறுகிறது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு காலமும் கடந்து கொண்டிருக்கிறது.
ஐ.பி.
எல் 2015
இந்த
முறையும் வழக்கம் போல சென்னையும் ராஜஸ்தானும் அசத்துகின்றன. கொல்கத்தாவும்
கோதாவில் இறங்கியுள்ளது. 16 கோடி கொடுத்து யுவராஜை வாங்கிய டெல்லி அணி முதலில்
தோல்விகளை சந்தித்து இப்போது வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது. மும்பை அணி நன்றாக
விளையாடியும் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்து கடைசியில் ஒரு போட்டியில்
ஜெயித்து நம்பிக்கை பெற்றுள்ளது. ஆனாலும் ஐபிஎல் போட்டிகளின் மீது இருந்த
சுவாரஸ்யம் இப்போது குறைந்துள்ளதாகவே கருதுகிறேன். இந்த முறையும் மேட்ச்
பிக்சிங்கிற்கு ராஜஸ்தான் வீரர்களை சிலர் அணுகியதாக ஓர் செய்தி கிளம்பி
இருக்கிறது. மும்பையின் போலார்டு அம்பயரின் எச்சரிக்கையை அடுத்து வாயில்
பிளாஸ்திரி அணிந்து விளையாடி சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதற்கு ஹர்பஜன் ஆதரவு
தெரிவித்து உள்ளார். ஆனால் எனக்கு போலார்டின் செயல் ஒழுங்கீனமாகவே தோன்றுகிறது.
நடுவரின் எச்சரிக்கையை கிண்டல் செய்வதாக இந்தசெயல் அமைந்துள்ளது. மேட்ச் ரெப்ரி
இதை அனுமதித்து இருக்கக் கூடாது. இன்னும் ஒரு மாதத்திற்கு இந்தியர்களுக்கு
கிரிக்கெட் திருவிழாதான்.
கிச்சன்
கார்னர்!
இதை சில பகுதிகளாக பகிராமல் நிறுத்தி
வைத்திருந்தேன். தனிப்பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். சொந்த சமையல் குறிப்பாக இருந்தால் தனிப்பதிவு
எழுதலாம். நாம் போடுவதோ பிறர் பத்திரிக்கைகளில் எழுதியதை பகிர்வது. அதை
தனிப்பதிவாக போடவேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே இதிலேயே பகிர்கிறேன்.
அவல் கீர்.
தேவையான பொருட்கள்: பேரிச்சைபழங்கள் 10
அரிசி
அவல் வெள்ளை - 100 கிராம்
பால்
அரை லிட்டர்
நெய்
3 டீஸ்பூன்
முந்திரி
10
ஏலக்காய்
3
சர்க்கரை
தேவையான அளவு.
வாணலியில்
1 டீஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பை வறுத்துக்கொள்ளவும். அவலை சுத்தம் செய்து
அதை மீதியிருக்கும் நெய்யில் போட்டு சூடாக்கி எடுக்கவும். அவலில் நிறம்
மாறக்கூடாது. பேரிச்சையை நீளவாக்கில் சின்ன சின்னதாக வெட்டவும். பாலைக்
காய்ச்சவும் அதில் பேரிச்சைத் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். பிறகு வறுத்த
அவல், தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். கலவை சேர்ந்து வந்ததும் மீதியிருக்கும்
நெய் ஏலக்காய் பொடி வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். அவல் கீர் ரெடி.
டிப்ஸ்!
டிப்ஸ்! டிப்ஸ்!
தலைக்கு
அதிக உயரமான தலையணைகள் வைத்து படுப்பதால் நீண்ட கால சளித்தொல்லைக்கு ஆளாக
நேரிடும். மேலும் தலைச்சுற்றல், பிடரி வலி போன்றவையும் ஏற்படலாம். சமதரையில்
தலைவைத்து படுப்பதே நல்லது.
தொண்டைப்
புண் உள்ளவர்கள் மஞ்சள் பொடி போட்டு
கொதிக்கவைத்த நீரை வாயில் ஊற்றிக் கொண்டு தொண்டையில் படும்படி சற்று நேரம்
வைத்திருந்து பிறகு கொப்பளித்து விடவும். இப்படி சில வேளைகள் செய்துவர தொண்டைப்
புண் போயே போச்!
சிறுநீரகத்தில்
உள்ள கற்களை கரைக்கவல்லது துளசிச் சாறு. ஒரு தேக்கரண்டி தேனுடன் துளசி சாறு அரை
டம்ளர் சேர்த்து அருந்தி வர ஆறுமாத காலத்தில் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறி
விடும்.
அரிசி
வைத்திருக்கும் டப்பாவில் எறும்புகள் புகுந்துவிட்டதா? ஒரு கட்டி கற்பூரத்தை
டப்பாவில் போட்டுவைத்தால் எறும்புகள் அண்டாது. வசம்பு துண்டை அரிசியில் போட்டுவைத்தால்
வண்டுகள் பிடிக்காது.
உணவில் தலை முடி சேர்ந்து அருந்தியதால் வயிற்று
போக்கு ஏற்படும். அப்போது வாழைப்பழ துண்டுடன் ஒரு நெல்மணி வைத்து முழுங்கினால்
வயிற்று போக்கு குணமடையும்.
டீவி
கார்னர்:
முரசு என்று ஒரு சேனல். பழைய படங்களாக
போடுகிறார்கள். விளம்பரம் இருப்பதில்லை. சென்ற மாதத்தில் தெனாலிராமன், மாயத்தீவு
ரகசியம் என்று பழைய படங்கள்
ஒளிபரப்பினார்கள். இரவு வேளையில் தூக்கம் வரும் வரை இந்தப் படங்களை பார்த்து
கொண்டிருந்து விட்டு தூக்கம் வருகையில் நிறுத்திவிட்டுத் தூங்கிவிடுவதுண்டு. மற்ற
சமயங்களில் மோட்டு பத்துலுவும், சோட்டா பீமும் ஆக்ரமித்துவிடுகிறார்கள். அதிலும்
என் இரண்டாவது பெண்ணுக்கு மோட்டு பத்துலு என்றால் செம கொண்டாட்டம். அப்பா எனக்கு
மோட்டு பத்துலு வேண்டும். இப்ப கரண்ட் இல்லை அப்புறமா! என்று சொன்னால் போதும்
கரண்ட் வந்துவிட்டதா என்று பார்த்துக் கொண்டே இருப்பாள். பின்னர் வந்ததும் அப்பா
கரண்ட் வந்துருச்சு என்று மோட்டு பத்துலு வைச்சு விடு என்பாள். இப்படியே பொழுது
கழிந்து போகிறது. அதனால் பகல் பொழுதில் டீவி பார்ப்பது இல்லை! பார்த்தாலும் மோட்டு
பத்துலு தான் என்றாகிவிட்டது.
பதிவர்
அறிமுகம்:
காவியக்
கவி இனியா.
இலங்கை
தமிழரான இவர் தற்சமயம் புலம்பெயர்ந்து வாழ்கிறார் என்று நினைக்கிறேன். உள்ளத்தை
உருக்கும் கவிதைகளை அட்டகாசமாக எழுதுகின்றார். கவிதை பிரியர்கள் விரும்பி வாசிக்க
வேண்டிய தளம். 2013ல் இருந்து எழுதி வருகிறார்.
தற்சமயம் இவர் எழுதியுள்ள பதிவின் இணைப்பு இங்கே! காவியக் கவி
படிச்சதில் பிடிச்சது!
அற்புதப்
பொருள்!
ஒரு
நாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கே தன்னுடைய வீட்டில் அமர்ந்து பழைய சோறு
சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் என்.வி நடராசன் வந்தார்.
கலைவாணர் பழைய சோறு சாப்பிடுவதைப் பார்த்து, “ என்னங்க! மதுரம் உங்களுக்கு டிபன்
எதுவும் செய்து தரலையா? பழைய சோறு சாப்பிடறிங்க?” என்று கேட்டார்.
கலைவாணர்
எதுவும் பேசாமல் வேலைக்காரனை அழைத்து, “ இந்தா இந்த ஒரு ரூபாய்க்கு பழைய சோறு
வாங்கிட்டுவா! என்றார். ரொம்ப நேரம் கழித்து திரும்பிய வேலைக்காரன், “ஐயா! நானும்
எங்கெங்கோ அலைஞ்சிட்டேன் ஒரு இடத்திலேயும்
பழைய சோறு கிடைக்கலை” என்றார்.
“கேட்டீங்களா நடராசன், “எவ்வளவு பணம்
கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள் பழைய சோறு. அதனால்தான் இதை சாப்பிட்டேன்
என்றார் கலைவாணர். இதைக்கேட்டு நடராசன் மட்டுமின்றி மதுரமும் அசந்து போனார்.
(ப்ரியா
பாலு எழுதிய கலைவாணர் என்.எஸ்.கே வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் என்ற நூலில்
இருந்து)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
சோறு இனித்தது நண்பரே அருமை.
ReplyDeleteம்..ம்..ம் கதம்பச் சோற்றில் காவியக் கவி ம்..ம்..ம்.. பேஷ் பேஷ் .....மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ அறிமுகத்திற்கு நீங்கள் கூறுவது சரியே இப்போ கனடாவில் தான் கழிகிறது காலம். கதம்ப சோறு யம்மி வழமை போல் அனைத்தும் அருமை! பதிவுக்கு நன்றி ! தொடர்ந்து அசத்துங்கள் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன். பழையதை அதிகம் ருசித்தேன். இப்பொழுதும் நான் பழையதைச் சாப்பிடுகிறேன். நகை மோகத்திற்காக நாம் அனைவருமே வெட்கப்படவேண்டும்.
ReplyDeleteகலைவாணர் கலைவாணர்தான்
ReplyDeleteஅனைத்தும் அருமை தோழரே...
ReplyDeleteஅய்யா தங்கள் தளத்திற்கு இப்போதுதான் முதன் முறையாக வருகிறேன்.
ReplyDeleteபல்வேறு தகவல்களை ஒன்றாக சேர்த்து செய்த கதம்ப சோறு சுவையாக இருந்தது.
வணக்கம்
ReplyDeleteஐயா
படித்ததை ரசிக்கதந்தமைக்கு நன்றி..
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அரசியல் தொடங்கி கவிதையுடன் கலைவானர் பேச்சு முடிய அத்துனையும் அருமை.அவல் கீர் செய்து சாப்பிட்டு சொல்கிறேன். றன்றி.
ReplyDeleteகதம்பம் அருமையான தொகுப்பு தங்கத்தின் மீது பணம் ஓதுக்கும் நிலை மாறினால் நல்லது எனலாம்!
ReplyDeleteகதம்பச் சோறு சுவையோ சுவை..தோழி
ReplyDeleteஇனியாவின் தள அறிமுகம் மகிழ்வு .
கலைவாணர் பற்றிய பகிர்வுக்கு நன்றி சகோ..
குழந்தைகள் உலகமே இனிமை.. உங்க குட்டீசுக்கு வாழ்த்துகள் சகோ
அருமையான கதம்பம்! கீர் சுவை சேர்க்க...கம...கம....
ReplyDeleteஅருமையான கதம்பம். பாராட்டுகள்.
ReplyDeleteருசியான கதம்பம். நன்றி.
ReplyDelete