Posts

Showing posts from April, 2015

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 35

Image
  கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 35 1.    தலைவர் எதுக்கு ரூபாய் நோட்டுல மாலை போட வேண்டாம்னு சொல்றார்?   கள்ள நோட்டா அடிச்சு கோர்த்து போட்டுடறாங்களாம்! 2.    தலைவர் முன்னெ வச்ச காலை பின்னே வைக்க மாட்டார்!   அதுக்காக மூணு மாடி ஏறி வந்தப்புறம் இறங்க மாட்டேன்! தூக்கிக்கிட்டு போங்கன்னு சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லே! 3.    அந்த டாக்டர் பேஷண்ட் கிட்ட அதிர்ச்சி தர மாதிரி எதுவும் சொல்ல மாட்டாராமே! ஆமா! பீஸைக் கூட இவ்ளோன்னு சொல்லமாட்டாரு எழுதித்தான் வாங்குவாரு! 4.    மாப்பிள்ளைக்கு சர்க்கரை நோய் இருக்குன்னு சொல்லவே இல்லையே தரகரே! நான் அப்பவே சொன்னேனே மாப்பிள்ளை கட்டிக் கரும்புன்னு! 5.     இவ்ளோ மருந்து எழுதிக் கொடுக்கறீங்களே டாக்டர் உங்களுக்கு கை வலிக்காதா?   அதுக்குத்தான் கீழே ஆயிண்ட்மெண்ட் எழுதியிருக்கேன்! அதை வாங்கி என்கிட்டே கொடுத்திட்டு போங்க! 6.     மன்னா! எதிரியிடம் இருந்து ஓலை வந்திருக்கிறது! அப்படியானால் ஓடி ஒளியவேண்டிய வேளை வந்துவிட்டது என்று சொல்லுங்கள்...

நேபாள பூகம்பமும் சர்ச்சை வாரமும்! கதம்ப சோறு பகுதி 59

Image
கதம்ப சோறு பகுதி 59 நேபாள பூகம்பம்:          அண்டைநாடான நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுவிட்டது சோகம். இன்னும் அதிகாரப்பூர்வமாக இத்தனைபேர் என்று தகவல் வராவிடிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சியான தகவலை அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இயற்கையின் சீற்றங்கள் எப்போது வரும் என்று சொல்லவும் முடியாது கணிக்கவும் முடியாது. இயற்கையை மாசு படுத்துகையில் அது பொங்கி எழும்போது நம்மால் தாங்கமுடிவதில்லை! நேபாளத் தலைநகரையே இந்த சீற்றம் மாற்றிப் போட்டுவிட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் உணவின்றி உடையின்றி இருப்பிடம் இன்றி அடிப்படைவசதிகள் இன்றி தவித்துவருகின்றனர்.தமிழர்கள் 37 பேரின் நிலை தெரியவில்லை. தொலைதொடர்பு நிறுவனங்கள் சில சலுகைகளை மனிதாபிமானத்துடன் அறிவித்துள்ளதும் இந்திய அரசு உதவ முன் வந்திருப்பதும் பாராட்டுக்குரியது. இயற்கையின் சீற்றத்தில் இருந்து மீண்டுவர பிரார்த்திப்போம்! மீண்டும் ஆச்சார்யா!     கர்நாடாகவில் நடைபெற்றுவரும் அம்மா வழக்கில் அரசு வழக்கறிஞராக...

ஆடுகளம்!

Image
ஆடுகளம்! உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே இருந்த ஒற்றை பனைமரங்களின் நிழல்களில் சிலர் இளைப்பாற ஆட்டம் களைகட்டியிருந்தது. கிராமத்தான்களின் கிரிக்கெட் ஆட்டம் அது. சச்சின் டெண்டுல்கராகவும், கபில்தேவாகவும், விராத் கோலியாகவும், தோனியாகவும் தம்மை கற்பனை செய்து கொண்டு அவர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள்.     புல் மைதானம் அல்ல அது! அப்போதுதான் அறுவடை முடித்திருந்த வயல்! பிட்ச் வரை கொஞ்சம் சமனப்படுத்தி இருந்தார்கள். மற்ற இடங்கள் வெயிலில் வெடித்து துருத்தி நின்றன. காலில் ஷு இல்லை! ஜெர்கின்ஸ் இல்லை! எந்த பாதுகாப்பு அரணும் இல்லை! தேய்ந்து போன ஒரு மட்டை! கிழிந்து போகும் பந்துகள்! ஆனால் அவர்கள் ஆட்டத்தில் ஓர் உத்வேகம் இருந்தது. பந்தயம் தொகை கோடிகள் அல்ல! ஆனாலும் வென்றே ஆகவேண்டும் என்ற கொள்கையோடு ஆடிக்கொண்டிருந்தார்கள்.     அதோ பாருங்கள்! குள்ளமான ஒருவன்! சச்சின் மாதிரி நாசுக்காக புட்வொர்க் வைத்து பந்துகளை விளாசிக்கொண்டிருக்கின்றானே அவன் தான் மகி! செல்லமாக தாத்தா என்பார்கள். இவனை நம்பியே இந்த அணி இருக்கிறது. ஓப்பனிங் ஆடுவான். சுழல்பந்தும் ...

புகைப்பட ஹைக்கூ 82

Image
புகைப்பட ஹைக்கூ உடைபட்டதும் உருக்குலைந்தது நாடு! பூகம்பம்! ஆடியதும் ஆட்டம் முடிந்து போனது பூகம்பம்! இடிந்த கட்டிடங்கள் ஒடித்தன நம்பிக்கை! பூகம்பம்! சிலநொடி கோபம்! சிதறுண்டது நாடு! நேபாளபூகம்பம்! சீறியதும் சிறகொடிந்தது நாடு! பூகம்பம்! பசியெடுத்த பூமி! பலியாகின உயிர்கள்! பூகம்பம்! இயற்கையின் பாடம் ஈடில்லா விலை! பூகம்பம்! சிலநொடிகள் குலுங்கியதும் சிதைந்து போனது நகரம்! பூகம்பம்! சுமந்தவர்களை சுவைத்துப்பார்த்தது பூமி! பூகம்பம்! தாங்கமுடியாத துயரம் உருவாக்கிய தாங்கமுடியா துயரம்! ஆசையே துன்பத்திற்கு காரணம்! அழிகையில் அறிவித்தது புத்தரின் பூமி! பாரம் இறக்கிய பூமி! பாரமாயின நெஞ்சங்கள்! பூகம்பம்! வெடிபட்ட நிலம் விழுங்கியது கட்டிடங்கள்! பூகம்பம்! வீடே பகையானது வீணர்களான மக்களுக்கு! பூகம்பம்! அழிகையில் பிறப்பெடுக்கிறது மனிதம்! முரணாண உண்மை! மலைபோல நம்பியும் சிலையாக நின்றது! பூகம்பம்! இடிபாடுகள் இரைத் தேடின! பூகம்பம்! நடுங்கியதும் நடுங்கிப் ப...

எமகாதகர்கள்!

  நான் பூஜை செய்யும் கோயில் உள்ள ஊரில் வயதான பெரியவர்  ஒருவர் தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பார். எப்படியும் எழுபதை கடந்த வயதிருக்கும். கருத்த தேகம், குரல் கணீரெண்று ஒலிக்கும், தள்ளுவண்டியில் காய்கறிகளை  கூர் கட்டி கொண்டுவந்து விற்பார். சில சமயம் எடைக்கு விற்பார். பெரிதாய் லாபம் ஒன்றும்  அவருக்கு கிடைக்காது என்றுதான் எனக்குத் தோன்றியது.         ஏழ்மை! முதுமை, இந்த தள்ளாதவயதில் இப்படி சம்பாதிக்க வேண்டுமா? என்று தோன்றும். இந்த பெரியவரிடம் பேரம் பேசாமலே காய்கறிகள் வாங்கலாம். ஆனால் அவர் சொல்லும் விலையில் ஒன்றோ இரண்டோ குறைத்துதான் கேட்பார்கள் மக்கள். அவரும் சொல்லிப் பார்ப்பார். கடைசியில் கொடுத்துவிட்டுப் போய்விடுவார். குறைவான காய்கறிகளே கொண்டுவருவார். இதில் விற்று என்ன கிடைக்கும் என்று பலமுறை எண்ணியதுண்டு.       இவர் இப்படி என்றால் ஓர் முதியவர் எங்கள் ஊருக்கு  வருவார் தலையில் அல்லது இடுப்பில் ஒரு மூட்டை சுமந்து வருவார். அது முழுக்க தலையணை உறைகள், குழந்தைகளுக்கான சிறிய உடைகள், ஜாக்கெட்டுகள், உள்பாவாடைகள் என்று அடைத்து ...