புகைப்பட ஹைக்கூ 81

புகைப்பட ஹைக்கூ 81



1.      மேகம் கறுக்காமல்
பெய்தது மழை!
பனி!

2.      வெள்ளை பூசிய
வீதிகள்!
பனிமழை!

3.      உறைந்து போனது
ஊர்!
பனிமழை!

4.      உருகி வழிவிட்டதும்
உதயமானது சூரியன்!
பனிமழை!

5.      நனைந்த மரங்கள்!
உறைந்தன!
பனிமழை!

6.      விதவையாகாமலே
வெள்ளுடை தரித்தன மரங்கள்!
பனிமழை!

7.      எதிரியே இல்லை!
நடுங்கிக் கொண்டிருந்தனர்!
பனிமழை!

8.      உதிர்ந்த பூக்கள்!
உருகிக் கரைந்தன!
பனிமழை!

9.      வெண்குடையானது
வெறும் குடை!
பனிமழை!

10.  படையெடுத்து வந்தது
தடைபட்டது இயல்பு வாழ்க்கை!
பனிமழை!

11.  மழை பொழிந்தும்
நீரோடவில்லை!
பனிமழை!

12.  வெள்ளை உடுத்திய பூமி!
வெட்கத்துடன் வெளிப்பட்டான்
சூரியன்!

13.  தடுப்பரண்கள் கட்டியும்
தடையைமீறி புகுந்தது
குளிர்!

14.  வெண்பஞ்சு பொதிகள்!
வீதியில் சிதறின!
பனிமழை!

15.  கண்கள் குளிர்கையில்
காட்சி மறைந்தது!
பனிமழை!

16.  மூடுபனியில் சிக்கி
முடி இழந்தன மரங்கள்!
பனிமழை!

17.  கொட்டித் தீர்த்ததும்
வாரி இறைத்தார்கள்!
பனி மழை!

18.  அள்ளித் தந்த வானம்!
துள்ளவில்லை மக்கள்!
பனிமழை!

19. கிளைத்த மரங்களில்
     துளிர்த்தது 
       பனி!

20. பஞ்சுமெத்தையான வீதிகள்!
     பாதங்களை சுட்டன!
     பனி மழை!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும்! நன்றி!


Comments

  1. பனிமழையில் குளித்து நனைந்தேன் நண்பரே....

    ReplyDelete
  2. எல்லாமே அருமை, வழக்கம் போல! நானும் ஒன்று முயற்சிக்கவா?!!!

    வெள்ளையடித்திருக்கிறார்கள்
    பூமிக்கு.
    பனி.

    :))))))))))))

    ReplyDelete
  3. புதிய வானம்
    புதிய பூமி
    எங்கும் பனி மழை பொழிகிறது

    "தளிர் "வருகையிலே!
    குளிர் வரவேற்க!

    இங்கு "குடையில்"

    வெண் மழை பொழிகிறது!

    ஒஹோ!

    லா! லா! லா!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    இரசித்தேன் ஐயா.. அருமையாகஉள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அருமை
    அருமை
    ரசித்தேன்
    நண்பரே நன்றி

    ReplyDelete
  6. ரொம்பக் குளிர்ச்சியாய் இருக்கிறது நண்பரே

    ReplyDelete
  7. தங்களின் பனி கவி அருமை. நம் பழைய நாட்டுப்புற பாடல் முங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே, எனக்கு நினைவு வந்தது. அழகிய வரிகள். நன்றி. என் பக்கத்தில் பீச்சாங்கை படித்துப் பாருங்களேன்.

    ReplyDelete
  8. மிக அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி...

    மலர்
    https://play.google.com/store/apps/details?id=com.ezdrivingtest.me.bdl.app.android

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!