பொதுத்தேர்வு மோசடிகள்! கதம்ப சோறு பகுதி 57

கதம்ப சோறு பகுதி 57

இந்த பகுதி எழுதி சில மாதங்கள் ஆகிவிட்டது. புதிய மாற்றம் செய்தபின் ஒரு பதிவுதான் எழுதினேன். அதன் பின் தொடர முடியவில்லை. இன்று எப்படியும் எழுதிவிட வேண்டும் என்று முயற்சித்து எழுதுகிறேன்.


பொதுத்தேர்வு  மோசடிகள்:

          தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகள் தொடங்கி நடந்துவருகின்றது. எந்த ஆண்டும் இல்லாதவகையில் இந்த ஆண்டு நிறைய குழப்பங்கள், முறையீடுகள், விதி மீறல்கள் என சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. ஆசிரியர்களே வாட்ஸ் அப்பில் கேள்வித்தாளை அனுப்பி உள்ளார்கள் அது ப்ளஸ் ஒன் பொது தேர்வுக்கு. ஒரு பள்ளியில் சரியாக படிக்காத ஆறு மாணவர்களை தலைமை ஆசிரியர் தேர்வெழுத அனுமதிக்க வில்லையாம். அது ஏதோ தனியார் பள்ளி அல்ல. அரசாங்க பள்ளியே! ஏன் இப்படி? 100 சதவித தேர்ச்சி என்ற அழுத்தம் தான் காரணம். இப்போது ஆசிரியர்களை குறை கூறி எந்த பிரயோசனமும் இல்லை. எட்டாம் வகுப்புவரை ஆல் பாஸ் ஆக்கிவிட்டார்கள். மக்கு மாணவர்களும் பத்தாம் வகுப்பு வந்துவிடுகிறார்கள். அப்புறம் தேர்ச்சி காட்ட வேண்டும். குறைந்த தேர்ச்சி என்றால் அதற்கும் பதில் சொல்ல வேண்டும். மாணவர்களை அடிக்கக் கூடாது முறைக்கக் கூடாது, கண்டிக்க கூடாது. ஆனால் தேர்ச்சி மட்டும் வந்துவிட வேண்டும் என்றால் எப்படி வரும்? இப்போதெல்லாம் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதை பார்த்தால் கூட சந்தேகமாக இருக்கிறது. ஒன்றுமே தெரியாதவன் கூட 200 மதிப்பெண்கள் எடுத்து பாஸ் ஆகிவிடுகிறான். இப்போது தேர்ச்சி கிடைத்துவிடுகிறது ஆனால் எதிர்காலம்? அரசு என்ன செய்யும்? முட்டாள் தனமான கல்விமுறை நம்முடையது! இதை நினைத்து வருத்தப்பட மட்டுமே நம்மால் முடியும்.

   நிலம் கையகப்படுத்தல் மசோதா:

                 இந்த மசோதாவை விரைவில் கொண்டுவர அரசு திட்டமிட்டுக் கொண்டுள்ளது. சாமனியனுக்கு ஏற்கனவே நில உரிமை இல்லை. அவனது வாழ்வாதாரம் பற்றி கவலைப்படாமல் அரசு நிலத்தை கையகப்படுத்திக் கொள்கிறது. இந்த சட்டத்தின் மூலம் அது இன்னும் விரிவு படுத்த படும் போலிருக்கிறது. இதைப்பற்றி விரிவாக இன்னும் படிக்கவில்லை! ஆனால் இப்போதே விவசாய நிலங்கள் குறைந்துவருகின்றன. இந்த மசோதாவால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்களா என்றால் பாதிக்கப்படுவார்கள். கூடுதல் விலைக்கு நிலத்தை விற்க முடியாமல் அரசு கொடுக்கும் விலைக்கு விற்று குறைந்த லாபம் ஈட்டுவதால் மட்டுமே என்று தோன்றுகிறது. பா.ஜ அரசு கொண்டுவரும் இத்திட்டம் எதிர்ப்புகள் இருந்தாலும் நிறைவேறி விடும் என்றே தோன்றுகிறது.

    வீறுகொண்ட இந்திய கிரிக்கெட் அணி:

                     உலகக் கோப்பையில் இந்திய அணி புதிய எழுச்சி கண்டிருக்கிறது. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு ஏழு போட்டிகளை தொடர்ச்சியாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. அதுவும் அனைத்து அணிகளையும் ஆல் அவுட் ஆக்கியிருக்கிறது. ஆனால் இந்தியா ஒரு முறை கூட ஏழு விக்கெட்டுகளுக்கு மேல் இழக்க வில்லை. பந்துவீச்சில் ஷமி, யாதவ், அஸ்வின், மோகித் என்று அசத்த பேட்டிங்கும் ஒருவரையே நம்பாமல் அனைவரும் சம அளவிற்கு கை கொடுக்கிறார்கள். பீல்டிங்கும் சிறப்பாக இருக்கிறது. இதுவரை அணியில் இருந்த குழப்பங்கள் களையப்பட்டிருக்கிறது. அணியில் ஓர் ஒற்றுமை காணப்படுகிறது. தோனியின் வழி நடத்துதலில் இந்த முறையும் கோப்பை வென்றால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

தேசியவிருது பெற்ற தமிழ் படம்:

       பிரம்மா இயக்கிய குற்றம் கடிதல் என்ற திரைப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது. பல திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டாலும் இன்னும் திரையரங்குகளில் வெளியிடப்பட வில்லை என்பது வருத்தமான ஒன்றாகும். விருதுபெற்ற படங்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. வந்தாலும் நீண்ட நாட்கள் ஓடுவதில்லை என்பது வேதனையான விஷயம். இப்படி நல்ல படங்களை மக்கள் கைவிடும் போதுதான் மசாலா படங்கள் கோலொச்சுகின்றன. அப்புறம் தரமான படங்கள் வருவதில்லை என்று கூப்பாடுகள் எழும். நல்ல படங்களை நல்ல இயக்குனர்களை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும். இந்த மாதிரி படங்களை திரையரங்குகள் திரையிட்டு ஆதரவு வழங்க வேண்டும். அப்போதுதான் நல்ல திரைப்படங்கள் வித்தியாசமான படங்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைக்கும்.

மன்மோகனுக்கு சம்மனும்: சவுதாலாவுக்கு சிறையும்.
         நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பி உள்ளது நீதிமன்றம். காங்கிரஸ் தலைவி சோனியா நேரில் சென்று மன்மோகனுக்கு ஆதரவு தெரிவித்தாலும் தலையாட்டி பொம்மையாக செயல்பட்டதிற்கு இப்போது பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மன்மோகன். பத்தாண்டு காலத்தில் நாட்டை படுகுழியில் தள்ளிய ஊழல்களில் இதுவும் ஒன்று. இதில் சம்பந்தம் ஏதும் இல்லை என்று மன்மோகன் ஒதுங்கிவிட முடியாது. ஜெண்டில் மேன் பிரதமர் என்ற இமேஜ் எதுவும் அவரைக் காப்பாற்றாது. பதில் சொல்லவேண்டிய கட்டத்தில் அவர் இருக்கிறார். அதே சமயம் ஹரியானா முன்னால் முதல்வர் சவுதாலாவிற்கு  உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டணையை உறுதி செய்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். இது ஆட்சி நம் கையில் இருக்கிறது என்று ஆட்டம் போடுபவர்களுக்கு ஒரு பாடமாகவே அமைந்து இருக்கிறது. நம்ம ஊர் தீர்ப்பு எப்படி வருமோ ஒத்தி வைத்து இருக்கிறார்கள்  எப்படியோ நீதி கிடைத்தால் சரிதான்.

வேளாண் துறை அதிகாரி தற்கொலை!

        அமைச்சர்களின் ஊழலுக்கு பலியாவது அப்பாவியான அரசு ஊழியர்கள்தான். இவர்கள் சாமர்த்திய சாலிகளாக இருந்தால் அமைச்சரையும் பகைக்காமல் தானும் மாட்டாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலர் அமைச்சர்களின் நெருக்கடிக்கு ஆளாகி  மாள்கிறார்கள். வேளாண்மைத் துறை அதிகாரியும் அப்படித்தான். இவர் தலைமைச்செயலருக்கு உறவாம். எனவேதான் அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டு இப்போது சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது. அமைச்சர்களின் கைப்பிள்ளைகளாக செயல்படும் அதிகாரிகள் இனியாவது கவனமாக இருக்க வேண்டும். இந்த அதிகாரியின் குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் அமைச்சர்?

பந்த்:
   முழு அடைப்பு என்பது எனக்கு ஒவ்வாத ஒன்று. தேவையில்லாமல் மற்றவர்களுக்கு இடையூறு செய்யும் இந்த மாதிரி போராட்டங்களை நான் வெறுப்பவன். ஆனால் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து நடத்தும் இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றே தோன்றுகிறது. காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்தும் விவசாய நிலங்களின் ஊடே  எண்ணெய் குழாய்கள் எடுத்து செல்வதை எதிர்த்தும்  நடத்தப்பட உள்ள இந்த அடைப்பு போராட்டம் மிக முக்கியமானது. எவ்வளவுதான் எதிர்ப்புக்கள் எழுந்தாலும் அண்டை கர்நாடக அரசு தமிழக விவசாயிகளின் நலனுக்கு புறம்பாகவே தன்னுடைய செயல்களை நியாயப்படுத்தி வருகிறது. தட்டிக்கேட்கவேண்டியவர்களும் சும்மா இருக்கின்றனர் ஓட்டுக்கு பயந்து. இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு இந்த முழு அடைப்பை விவசாயிகள் அறிவித்து உள்ளார்கள். இது வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

பதிவர் அறிமுகம்: பாலமகி பக்கங்கள்:
 மகேஸ்வரி பாலச்சந்திரன்.
கரந்தை ஜெயக்குமார் அவர்களை தன்னுடைய வலையுலக ஆசானாக கூறும் இந்த பதிவர் பல்சுவை பதிவுகளை அள்ளித்தருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை 26 பதிவுகள் எழுதி உள்ளார். இவர் ஓர் ஆசிரியர் என்று நினைக்கிறேன். கடந்தவாரம் முதல் இவரது பதிவுகளை படித்து வருகிறேன். அதில் பீச்சாங்கை என்ற பதிவு என்னை மிகவும் பாதித்த பதிவு. சிறப்பான அந்த பதிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது ஏனென்று தெரியவில்லை. இணைப்பு அந்த பதிவுக்கு கொடுக்கலாம் என்று நினைத்தேன். நீக்கப்பட்டதால் இந்த பதிவுக்கு இணைப்பு தருகிறேன்! இதுவும் அந்த பதிவுக்கு சளைத்தது அல்ல! படித்து வலைப்பூவில் இணைந்து புதிய பதிவரை வளர வாழ்த்துங்கள்!  பாலமகி பக்கங்கள்!



புட்ச கவிதை!

//அக்கரையில் தாயாய் என்னைப்பெற்றவள்!
இக்கரையில் என்னைத் தாயாய்ப் பெற்றவள்!
தலைமுறைப் புரிதல்களுக்கிடையில்
தடுமாறுகின்றன உறவுகள்!
கரைகளை இணைக்கும்
கவின்மிகுபாலமாய் இடையில் நான்!
நேற்று பாலமாயிருந்தவள்தான் 
இன்று அக்கரையேகியுள்ளாள்
ஏனோ அதை மறந்துபோனாள்!
இன்று இக்கரையானவளே 
நாளை பாலமாகுவாள்
பாவம் அதை அவள் அறியாள்!

இற்றுப்போகா வரம்பெற்றுவந்த பாலங்களால்
இறுக்கமாகும் இடைவெளிகள் யாவும்
இன்னும் பல தலைமுறைகள் கடந்தும்!//


  திருமதி கீதா மதிவாணன். அவர்கள் எழுதிய கவிதை என்று  நான் பேச நினைப்பதெல்லாம் சென்னை பித்தன் ஐயா அவர்கள் தன்னுடைய பக்கத்தில் பதிந்து இருந்தார். படிச்சதும் பிடிச்சது நானும் பகிர்ந்து கொள்கின்றேன்!

Comments

  1. கதம்பச்சோறு சுவையாய்...

    ReplyDelete
  2. மீண்டும் ஒரு முறை தாங்கள் ஒரு பன்முக சிந்தையாளர் என்று
    நிருபித்துக் காட்டி உள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
    தினமணி செய்தி
    தினமலர் செய்தி
    மாலை மலர் செய்தி
    தி இந்து செய்தி
    இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
    அனைத்து செய்திகளையும் உள்ளடக்கிய
    "தளீர்" என்ற ஒரு குடையின் கீழ் கண்டேன்.
    வாழ்த்துகள்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை... தொகுப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  4. ம்ம்ம....
    நல்ல சுவை..
    கதம்ப சோறு..

    ReplyDelete
  5. தீடீர் என்று தங்கள் தளம் வந்தேன். ஏற்கனவே வந்து சென்றதால், ஆனால் புதிய பதிவு. அனைத்து தகவல்களும் அருமை, அதனினும் இன்ப அதிர்ச்சி, என் தளம் தங்களால் பகிரப்பட்டது. தங்கள் போன்றவர்கள் தரும் ஊக்கம் என்னை மென்மேலும் சிறக்க செய்யும். எப்படியோ அந்த பதிவு அழிந்து விட்டது. நான் தான் என்ன செய்தேன் என்று தெரியல, திரும்ப வர என்ன செய்யனும்.மீண்டும் என் நன்றிகள் தங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி ப்ளாகரில் போஸ்டில் அந்தப் பதிவு இருக்கின்றதா பாருங்கள்! இருந்தால் அதை ரீபப்ளிஷ் செய்யுங்கள். இல்லை என்றால் தங்கள் பதிவுகளை சேமித்து வைக்கும் பழக்கம் உண்டுதானே! அதாவது வேர்டில் அடித்து காப்பி செய்து ப்ளாஅரில் பதிவு இடுவீர்களா? இல்லை ப்ளாகரில் அப்படியே நேரடியாகப் பதிவீர்களா? சேமித்து வைத்திருந்தீர்கள் என்றால் அதை ப்ளாகரில் மீண்டும் நியூ போஸ்ட் போய் பதிவு செய்து எந்த தேதியில் முன்பு பதிவு செய்திருந்தீர்களோ அந்த தேதி கொடுத்து பதிவு செய்து பாருங்கள் இல்லையேல் மீள் பதிவு என்று பதிந்து விடுங்கள்...

      Delete
  6. சுரேஷ் இந்தத் தேர்வு தில்லு முல்லுக்கள் மிகவுமே அதிகமாகி உள்ளனதான். ம்ம்ம் மாணவர்களை மக்கு என்றோ, ஒன்றும் தெரியாதவர்கள் என்றோ சொல்ல முடியாதுதானே! அதற்குக் காரணமும் நாம் தானே! எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...இல்லையா சுரேஷ்! பெற்றோர்களும், பள்ளிகளும் கொடுக்கும் ஆதரவிலும் அணைப்பிலும் அன்பிலும் தான் மாணவக் குழந்தைகள் வளர்கின்றனர். பள்ளிகள் ஒழுங்காக, அறிவுக் கண்ணைத் திறம்பட திறக்க வைக்கும் வகையில் செயல் பட்டால் அவர்கள் ஒவ்வொரு வகையிலும், அவரவர் திறமைக்கு ஏற்ப பளிச்சிடுவர்.

    நீங்கள் சொல்லியிருக்கும் திரைப்படம் இப்போதுதான் கேள்விப்படுகின்றொம் செய்தி மிஸ் ஆகிவிட்டது போலும். நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் சரியே. நல்ல படங்கள் திரையிடப்பட்டால்தானே மக்களும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்...நல்ல கருத்து.

    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் அந்தத் தற்கொலை மனதை வருத்துகின்றது...குற்றம் செய்பவர் தப்பிப்பதும்....ம்ம்ம்ம் என்ன சொல்ல....

    சகோதரி மகியின் பக்கங்களை தொடர்கின்றோம் நண்பரே! நல்ல படைப்பாளி....

    படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது...சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நாங்களும் தொடர வேண்டும் என்று நினைப்பதுண்டு நேரம் தான்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2