Posts

பொங்கல் வாழ்த்து

Image
பொங்கல் வாழ்த்து  எழுபரித் தேர் ஏறி ஏழுலகம் வலம்வரும் கதிரோன் மகரத்தில் உதிக்கும் பொன்னாள்! அகரத்தின் அழுக்குகளை விலக்கி அகத்தினை வெள்ளையாக்கி அன்புடனே சுற்றம் சூழ உவப்புடன் பொங்கலிட்டு தரணி தோறும் தமிழர்கள் கொண்டாடும் தமிழர்களின் திருநாள்! தைமாத முதல் நாள்! தைப்பொங்கல் திருநாள். மங்கலப் பொங்கலிலே மகிழ்ச்சி பொங்கட்டும்! மண்ணிலே விளையுள் பெருகட்டும்! விண்ணும்  வசமாகி  மதியுள் தடம் பதிக்கும் மதிநுட்பம் சிறக்கட்டும்! பொல்லாத நொய்கள் எல்லாம் இல்லாது போகட்டும்! எங்கும்  தேன்மதுர  தமிழோசை இசைக்கட்டும்! எல்லோர் இல்லங்களிலும் இன்பம்பொங்கட்டும்! என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! அன்புடன். நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

திருடா! திருடி!

Image
    திருடா ! திருடி !   நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு .   சென்னை மெரினா பீச் . வழக்கம் போல களை கட்டியிருந்த்து . வீக் எண்ட் நாளான ஞாயிறு . ஜூலை மாத வெப்பத்தை ஈர்த்து குளிர்காற்றாய் வீசிக்கொண்டிருந்தது கடற்கரை காற்று . கடலுக்கு செல்லும் பாதை எல்லாம் கடைகளாய் மாறி இடத்தை அடைத்துக்கொண்டு இருந்த்து கரும்புசாறு முதல் கலர் கலரான காதணிகளும் பாசிமணிகளும் , அலங்கார பொம்மைகளும் இன்னும் பலவும்       கடைகளில் ஆக்ரமித்து விற்பனைக்கு காத்திருந்தது .   பொன்னியின் செல்வன் வந்த நேரமது என்பதால் பழங்கால வாட்களும் வேல்களும் பழங்கால காலணிகள் , காதணிகள் உடுப்புகள் என்று ஓர் கடை புதிதாக முளைத்து அங்கு கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது . ஆதித்த கரிகாலனின் அன்பு ரசிகையான நிலா அங்கே அந்த கடைக்குள் பேரம் பேசிக்கொண்டிருந்தாள் .     ” இந்த வாள் என்ன விலை சொல்லுங்கண்ணா !”   ” இது சில்வர் கோட்டீங்க் ஸ்வார்ட் ! கைப்பிடியிலே லெதர் வைச்சு தைச்சிருக்கோம் ! தவுசண்ட்   பைவ் அண்ட்ரட...