பொங்கல் வாழ்த்து
பொங்கல் வாழ்த்து
எழுபரித் தேர் ஏறி ஏழுலகம் வலம்வரும் கதிரோன்மகரத்தில் உதிக்கும் பொன்னாள்!
அகரத்தின் அழுக்குகளை விலக்கி
அகத்தினை வெள்ளையாக்கி
அன்புடனே சுற்றம் சூழ
உவப்புடன் பொங்கலிட்டு
தரணி தோறும் தமிழர்கள் கொண்டாடும்
தமிழர்களின் திருநாள்!
தைமாத முதல் நாள்!
தைப்பொங்கல் திருநாள்.
மங்கலப் பொங்கலிலே
மகிழ்ச்சி பொங்கட்டும்!
மண்ணிலே விளையுள் பெருகட்டும்!
விண்ணும் வசமாகி மதியுள் தடம் பதிக்கும்
மதிநுட்பம் சிறக்கட்டும்!
பொல்லாத நொய்கள் எல்லாம்
இல்லாது போகட்டும்! எங்கும் தேன்மதுர தமிழோசை
இசைக்கட்டும்!
எல்லோர் இல்லங்களிலும்
இன்பம்பொங்கட்டும்!
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
அன்புடன்.
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
மகிழ்ச்சி தோழர்
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும், தங்களது தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லா நாளும் இனிதாக அமைந்திடட்டும்.
ReplyDelete