குருவருள் பெறுவோம்! திருவருள் கிடைக்கும்!
குருவருள் பெறுவோம்! திருவருள் கிடைக்கும்! நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான் . தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும் , வியாழ பகவான் என்றும் அழைப்பர் . சிவ வழிபாடு நீங்கலாக , கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி குரு பகவானை ( வியாழன் ) வழிபாடு செய்வதும் அவசியம் . குருபெயர்ச்சி நேற்று 4-10-18 அன்று துலா ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு பெயர்ந்துள்ளார். குரு பார்க்க கோடி நன்மை! குருபலன் இருந்தால் விவாகம் செய்யலாம் என்ற வழக்குகள் ஜோதிடத்தில் உண்டு. குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்றும் இன்றும் ஆலயங்களில் தக்ஷ்ணா மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நவகிரகங்களில் ஒன்று குருபகவான். அவர்தான் வருடம் ஒருமுறை பெயர்ச்சி ஆகிறார். தக்ஷ்ணா மூர்த்தி சிவாம்சம். ஞானக் கடவுள். குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை அவருக்கு செய்து வருகின்றனர் பக்தர்கள். அது தவறு. மஞ்சள் ஆடை, மஞ்சள்பூ, கொண்டைக் கடலை எல்லாம் நவகிரக குருவுக்குத்தான். தக்ஷ்ணா மூர்த்திக்கு அல்ல. எல்லோரும் குருபெயர்ச்சி என...