கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 97



அரண்மணை விதூஷகனை மன்னர் எதற்கு வேலையை விட்டு நீக்கிவிட்டார்...?

   பத்திரிக்கையில் வரும் ஜோக்குக்களை காப்பியடித்து சொல்கிறானாம்!
 

 பணிப்பெண்களிடம் “இடைவெளி” தேவை என்று ராஜா கூறிவிட்டாராமே...!
    இடை தெரியும் படி உடை உடுத்துவதைத்தான் அப்படி கூறி யிருக்கிறார்!
 

எட்டுத் திக்கிலும்  என் கொடி பறக்கிறது என்று நம் மன்னர் தம்பட்டம் அடித்துக் கொள்கிறாரே அனைவரையும் வென்று விட்டாரா?
   ஊகும்...! எட்டு திசையிலும் சமாதான கொடி காட்டி பிழைத்து வந்ததைத்தான் அப்படி சொல்லி பெருமைப் பட்டு கொள்கிறார்!
 

நம் மன்னருக்கு அறுபது மொழிகள் தெரியுமாமே...?

   ஆமாம்! அத்தனை மொழியிலும்  “அபயம்! சரணடைகிறேன்!” என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்!

 

இத்தனை நாள் சொகுசா வாழ்ந்துகிட்டிருந்தார்! இப்ப பாவம் ரொம்பவும் கஷ்டப்பட்டுகிட்டிருக்கார்..!
      அப்படியா இத்தனைநாள் எங்க இருந்தார்..!

   ஜெயில்ல தான்...!

 

பெட்ரோல் விலை உயர்வு  கபாலியை ரொம்பவே பாதிச்சிருச்சாமே...!
    ஆமாம்! முன்னே மாதிரி பைக் திருடி விக்க முடியலையாம்..!

 

பிள்ளை வீட்டுக்காரங்க பெட்ரோல் பங்க் ஓனருங்களாம்!
    இருக்கட்டுமே...! அதுக்காக வரதட்சணை பணத்தை தினம் தினம் ஏத்தி கேட்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!
 

பெட்ரோல் விலை கூடி விட்டது என்று கூச்சலிடும் எதிர்கட்சி காரர்களிடம் ஒன்று கேட்கிறேன்...! இதே நாட்டில் தான் ரூபாய் மதிப்பும் குறைந்து கொண்டே இருக்கிறது! அதை பாராட்டாமல் விலை வாசி உயர்ந்துவிட்டது என்று கத்தும் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்!

 

 தலைவர் வீட்டுல ரெய்டு வந்ததும் செம குஷியாயிட்டாரா...? ஏன்?
     கட்சியிலே புதுசா நல்ல பதவி கிடைக்கப் போவுதுங்கிற சந்தோஷம்தான்...!
 

தலைவர் போட்ட  மான நஷ்ட வழக்கை கோர்ட் தள்ளுபடி பண்ணிடுச்சாமே...!
    அப்படி கேட்க எந்த “முகாந்திரமும்”  இல்லேன்னு சொல்லிருச்சாம்!

 

எதிரியின் வாலாட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது உடனே ஒட்ட நறுக்கிவிட வேண்டும் மந்திரியாரே...!
   முதலில் உங்கள் வாள் ஆட்டத்தையும் நடுக்கத்தையும் நிறுத்துங்கள் மன்னா...!


என் பொண்டாட்டி எப்பவும் ”பட்டு பட்டு”ன்னு முடிவெடுத்துடுவா!
     அடடே!
    என்ன அடடே! நான் இல்ல” துட்டு துட்டு”ன்னு அலைய வேண்டி இருக்கு!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! 


 

Comments

  1. அனைத்தும் இரசிக்க வைத்தன நண்பரே

    ReplyDelete
  2. பத்திரிகைகளில்...வரும் ஜோக்குகளைவிட இது நன்றாக சிரிக்க வைத்தது நண்பரே!

    ReplyDelete
  3. பத்திரிகைகளில்...வரும் ஜோக்குகளைவிட இது நன்றாக சிரிக்க வைத்தது நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. இது பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வெளிவராதவை நண்பரே!

      Delete
    2. அருமையான ஜோக்ஸ் அய்யா..

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2