நம்பினால் நடக்கும்!
நம்பினால் நடக்கும்! மாவீரன் அலேக்சாண்டர் உலகத்தை வென்று வரப்புறப்பட்ட போது தம் சொத்துக்களையெல்லாம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். அப்போது ஒருவர், எல்லாவற்றையும் கொடுத்துவிட்டீர்களே உங்களுக்கு என்னதான் மிஞ்சபோகிறது? என்று கேட்டார். அலேக்சாண்டர் ஒரே சொல்லில் பதில் சொன்னார். ‘நம்பிக்கை’ ஆம் அவர் தன்னை நம்பினார்! வென்று காட்டினார். நம்பினால் எதுவும் நடக்கும்.ஆகவே எந்த ஒரு செயலிலும் எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். எதிலும் நம்பிக்கையோடு செயல்படுங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை எனும் போது அதனை இழந்தால் வாழ்க்கையையும் இழப்பது போலத்தானே? யானைக்கு பலம் தும்பிக்கையால் என்றால் மனிதனுக்கு பலம் அவனது நம்பிக்கையால்! நம்பிக்கை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று பிறரை நம்புவது! மற்றொன்று தன்னை நம்புவது! பிறரை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைத்தபின் அவர்மீது நம்பிக்கை இல்லாமல் அந்த காரியம் நடக்குமோ நடக்காதோ என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள் சிலர். ஒரு காரியத்தை இவர் செய்வார் என்று நம்பிக் கொடுத்தபின் அது நடக்குமோ நடக்காதோ என்று எண்ணம் வரும் எனில்...