Posts

கண்ணிருந்தும் குருடர்களாய்....! சிறுகதை

Image
நான் அவளை பலமுறை இதே பேருந்தில் பார்த்திருக்கின்றேன்.அவள் அப்படியொரு அழகு.இருபதுமுதல் எழுபது வரை அவளை ஒருமுறையேனும் திரும்பிப்பார்க்கவைக்கும் அழகு.      அவள் எப்போதும் பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டுவருவாள் அது மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கை. எத்தனயோ இருக்கை காலியாக இருக்க அவள் ஏன் அதில் அமர வேண்டும் பார்த்தால் படித்தவள் போலத் தெரிகிறது. அதுவும் அலங்காரத்திற்கு குறைவில்லை. மடிப்பு கலையாத புடவையும் பொருத்தமான ப்ளவுஸும் அணிந்து “பை”பின்னல் போட்டு “பர்ப்யும்”மின் தூக்கலான வாசனை கண்களுக்கு கூட கூலிங் கிளாஸ் ,டம்பப்பை,சகிதமாக சர்வலங்கார பூஷிதையாக செல்லும் இவள் நிச்சயம் படிக்காதவளாக இருக்கமாட்டாள்.        பின் ஏன் ஊனமுற்றோர் இருக்கையில் அமரவேண்டும்?அழகிருக்கும் இடத்தில் அறிவு இருக்காது என்பார்களேஅது சரியாகத்தான் உள்ளது.       அன்று பேருந்தில் வழக்கதைவிட கூடுதலான நெரிசல்,நான் நிற்க இடமில்லாமல் தவிக்க வழக்கம்போல் அவள் முதலிருக்கையில் கூலிங்கிளாஸோடு அமர்த்தலான பார்வையில் அமர்ந்திருக்க அவள் அருகிலேயே ...

இந்தியாவின் கிளி யார் தெரியுமா? பொதுஅறிவுத் தகவல்கள்!

Image
இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? பொது அறிவுத் தகவல்கள்! 1. உலகின் பெரிய துறைமுகம் நியுயார்க் துறைமுகம்.  2.லோக்சபாவின் முதல்  சபாநாயகர் ஜீ.வி மாவ்லங்கர் 3. உலகின் உயர்ந்த கோபுரம் சி.என் .கோபுரம், கனடா. 4. மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர் ஆசார்ய வினோபாவே 5. இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கு தங்கம் தியேட்டர், மதுரை 2563 இருக்கைகள். (இடிக்கப்பட்டுவிட்டது) 6.உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் கிராண்ட் செண்ட்ரல் டெர்மினல், நியுயார்க் 7. கிரிக்கெட்டின் தந்தை  டபிள்யூ.ஜி. கிரேஸ் 8. ஈரானின் பழைய பெயர் பெர்சியா. 9. ஆண் தவளைகள் மட்டுமே சத்தமிடும். 10 உலகில் நீண்ட நாள் உயிர் வாழும் உயிரினம் முதலை, 300 ஆண்டுகள் உயிர் வாழும். 11. உலகிலேயே மிகவும் நீளமான பாலம் மகாத்மா காந்தி பாலம்- பாட்னா , நீளம்  ஐந்தரை கிலோமீட்டர்கள். 12 பேச்சுக் கலையின் தந்தை டெமஸ்தனிஸ் 13. இந்தியாவின் முதல் ஐ.சி. எஸ் பட்டதாரி சத்யேந்திர நாத் தாகூர் 14. உலகின் சிறந்த மீன்பிடி திட்டு கிராண்ட் பேங்க் 15 வேகமாக ஆவியாகும் திரவம் ஆல்க்ஹால் 16. ஜிம்பாப்வே நாட்டின் ப...

புகைப்பட ஹைக்கூ 79

Image
புகைப்பட ஹைக்கூ 79 விறகானாலும் விருட்சம் தந்தது நிழல்! சுமையை இறக்க சுமக்கின்றாள் சுமை! வறண்ட நிலம் வாழ்க்கைபோராட்டம்! வென்றது பலம்! உடைந்தவிறகுகள் அடைத்தது கிழவியின் பசி! காய்ந்தது விறகுகள் எரித்தது ஏழையின் பசி! கொளுத்தும் வெயில் எரிக்கவில்லை ஏழையின் பசி! நிழலாய் தொடர்ந்தது நீண்ட நாள் கனவுகள்! ஒடிந்தது விறகுகள் ஒடியவில்லை! மூதாட்டியின் நம்பிக்கை! சுமையான விறகுகள்! பாரம் இறக்கின மூதாட்டியின் சுமை! எரிக்கும் வெயில்! எரிக்கவில்லை ஏழையின் எரிபொருள் தேடல்! வீட்டுச்சுமையிறக்க விறகு சுமக்கிறாள் மூதாட்டி! உயிர்விட்ட மரங்கள் உயிர்கொடுத்தன மூதாட்டிக்கு! கூடவே வந்தது கொடுக்கவில்லை நிழல்! விறகுசுமை! காய்ந்தமரங்கள் வேய்ந்தன மூதாட்டியின் வாழ்க்கை! விலையில்லா விறகுகள் தலையில் சுமக்கின்றாள் மூதாட்டி! முதுமை விரட்டினாலும் முன்னுள்ள சுமை விரட்டவில்லை மூதாட்டி! குளிர்காய வெயிலில் காய்கின்றாள் மூதாட்டி! உலர்ந்தவிறகுகள் மலர்த்தின மூதாட்டியின் வாழ்க்கை! ...

பாகிஸ்தானில் உயிர்விட்ட பிஞ்சுகளுக்கு ஓர் அஞ்சலி!

Image
நண்பர் பரமு சிவசாமி அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி இந்த கவிதை எழுதி  இருக்கிறேன்!   அன்பு நண்பர் பரமு சிவசாமி அவர்களுக்கு, சிலசமயம் புகழ்கிறீர்! சில சமயம் இகழ்கிறீர்! சில சமயம் பூச்சாண்டி காட்டுகிறீர்! நல்லது. இந்த வலைப்பூவில் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வருகிறேன்! யாரும் கட்டாயப்படுத்தி வருவதல்ல எழுத்து. என்னை பாதிக்கும் எந்த ஒரு விசயமும் எழுத்தாகும். அது கவிதையோ கட்டுரையோ, அல்லது கதையாகவோ உருவாகும். அதே போல தீவிரவாதத்தை நான் ஆதரிக்கவும் இல்லை! அது எந்த மதமானாலும் சரி! மேலும் நீங்கள் கூறியது போல நான் பணக்காரனும் அல்ல! அந்த திமிர் எனக்கு கிடையாது. கஷ்டப்பட்டு இன்று ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்தவன். அதனால் யாரையும் அலட்சியப்படுத்தவும் மாட்டேன். என்னுடைய பணிச்சூழல், எழுதும் சூழல் பொருத்து எனது பதிவுகள் இடைவெளி விட்டு வரும். சிலநாட்களாக(மாதங்களாகவே) எனக்கு பணிச்சுமை அதிகரித்து விட்டது. இதனால் படைப்புக்கள் குறைவாகவே வருகிறது. கட்டாயப்படுத்தி எழுதவைத்தால் அது எழுத்தாக இருக்காது.ஆகவே இதை எழுதுங்கள் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். இதைத்தான் எழுத வேண்டும் என்று என்னை யார...

நன்றி இல்லா மனிதன்! பாப்பா மலர்!

Image
அரசன் ஒருவன் வேட்டையாடுவதற்காக காட்டுக்கு சென்றான். பெரும் படைகளுடன் சென்ற போதும் அவன் வழி தவறி தனியாக காட்டிற்குள் சிக்கிக் கொண்டான். பொழுதோ சாய்ந்து கொண்டு இருந்தது. காட்டிற்குள் வெகுதூரம் சென்று விட்ட அவன் வழி தெரியாது தவித்தான்.     காட்டிற்குள் இங்கும் அங்கும் சுற்றி சுற்றி வந்தானே தவிர வழி அகப்பட்ட மாதிரி இல்லை! இதற்குள் இருட்டிப்போய் விட்டது. சரி! இனி பிரயோசனம் இல்லை! இராப் பொழுதை காட்டிற்குள் தான் கழிக்க வேண்டும் போல! என்று அவன் முடிவு செய்து அங்கிருந்த ஒரு பெரிய மரத்தில் ஏறி பாதுகாப்பாக அமர்ந்து கொண்டான். தூங்கி விட்டால் கீழே விழுந்து விடுவோம் என்று கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு இருந்தான் அந்த அரசன்.     அப்போது கரடி ஒன்றை சிங்கம் விரட்டிக் கொண்டு வந்தது. அந்த கரடி மன்னன் இருந்த மரத்தில் ஏறியது. கரடியை கண்டு மன்னன் பயந்தான். மன்னன் பயத்தால் நடுங்குவதை கண்ட கரடி நண்பா! பயப்படாதே! என்னால் உனக்கு எந்த துன்பமும் வராது. என் மடியில் படுத்து உறங்கு. பிறகு நான் உன் மடியில் படுத்து தூங்குகிறேன்! இருவருக்கும் சிங்கத்தால் தான் ஆபத்து! நாம் ஒருவருக...

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 25

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 25 மன்னருக்கு இவ்வுலக வாழ்க்கை அலுத்துவிட்டது என்று எவ்வாறு சொல்கிறாய்?     பின்னே போருக்கு அழைப்பு விடுக்கிறாரே! அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்சே?      காலிலே ஆணின்னு போனா பிடுங்க கொறடா எடுத்துவரேன்னு சொல்றாரே! தலைவர் ஒவ்வொரு அடியையும் கவனமாத்தான் எடுத்து வைப்பாரு! அதுக்காக மேடையேறதுக்கு கூட அடிஅடியா  அரைமணிநேரம் நடந்துவரது கொஞ்சம் கூட நல்லா இல்லே! 4. ஒரு கழுதை கூட குடித்தனம் நடத்தறேன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சது…!      டூ லேட்! நீங்க பொண்ணு பாக்க வரப்பவே ஒரு கழுதைக்குத்தான் வாக்கபடறேன்னு எனக்கு புரிஞ்சுப்போச்சு! 5.       கோடீஸ்வரனானா இவருக்கு பெரிய சினிமா தயாரிப்பாளர் ஆவனும்னு ரொம்ப நாளாவே ஒரு ஆசை!      பிச்சை எடுக்கணும்னு அவர் ஜாதகத்துல எழுதி இருந்தா யாரால மாத்தமுடியும் விடுங்க! 6.       போலீஸ் ஏட்டு வீட்டுல எதுக்கு கன்னம் வச்சே? அவருதான் சார் என் பே...

வெறிபிடித்த தாலிபான்களும்! இன்ஷ்யூர் செய்த கணவனும்! கதம்பசோறு! 53

Image
கதம்பசோறு! பகுதி 53 தாலிபான்களின் வெறியாட்டம்!       பாகிஸ்தானில் உள்ள ராணுவப்பள்ளியில் புகுந்த தாலிபன் தீவிரவாதிகள் 132 பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 145 பேரை கொன்று குவித்து இருக்கிறார்கள். இன்னும் 150 பேருக்குமேல் காயம் அடைந்துள்ளனர். 6 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று இருக்கிறது பாகிஸ்தான் ராணுவம். தீவிரவாதிகளின் மூர்க்கத்தனம் கண்டிக்கத்தக்கது. ஒன்றும் அறியாத பிஞ்சுகளை கொன்று குவிப்பதால் அவர்களின் லட்சியம் நிறைவேறிவிடுமா? இதுபோன்ற செயல்களால் இந்த அமைப்பின் மீது இன்னும் கோபம்தான் மக்களுக்கு உண்டாகுமே தவிர ஆதரவு பெருகாது. பாகிஸ்தானில் ஒரு பகுதியில் 1700 பேருக்கு மேல் கொன்று குவித்துவரும் தாலிபான்கள் எங்களது வலி ராணுவத்திற்கு தெரியவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். மூடத்தனத்தின் முன்னோடிகளாக இருக்கும் இவர்களை விதைத்து பார்த்து இப்போது விபரீதமான அறுவடையை நடத்திக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இது போன்ற பழமைவாத மதவாத அமைப்புக்களை வளரவிட்டால் நாட்டை குழியில் தள்ளவேண்டியதுதான். இந்தியாவில் அந்த நிலை வரக்கூடாது. ரஜினியின் லிங்கா!     ...