Posts

பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தியால் தேங்காய் விலை ஏறியது!

Image
திருப்பூர்: பிறந்த குழந்தை பேசியதாகவும், குழந்தைகள் உயிருக்கு ஆபத்து என வதந்தி பரவியதாலும் தமிழகத்தில் பலரும் தங்களுடைய குழந்தைக்கு தலையை சுற்றி தேங்காய் உடைத்தனர். இதனால் தேங்கி கிடந்த தேங்காய்க்கு மவுசு ஏற்பட்டதுடன் சில மாவட்டங்களில் தேங்காய் தட்டுப்பாடும் ஏற்பட்டது. தர்ம்புரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல் முளைத்த பிறந்த குழந்தை பேசியது என்பது தான் அந்த செய்தி : தகவல் விவரம் வருமாறு: ஒரு குழந்தை பிறந்தவுடன் இதற்கு பல் முளைத்து இருந்தது. பிறந்த உடன் பேசியது. நான் இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவேன் . என்னுடன் ஆயிரத்து 500 குழந்தைகளை உயிரோடு அழைத்து செல்வேன். இவ்வாறு கூறியது. இந்த தகவல் எல்லா ஊர்களுக்கும் பரவியது. அவரவர் உறவினர்களுக்கு இந்த தகவலை சொல்லி பரிகாரம் செய்து கொள்ளவும் கேட்டுக்கொண்டனர். அதாவது குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால் தேங்காய் வாங்கி மஞ்சள் குங்குமம் தடவி, தலையை சுற்றி முச்சந்தியில் உடைக்க வேண்டும். இந்த பரிகாரம் செய்தால் குழந்தை உயிருக்கு ஆபத்து வராது என்று நம்பப்பட்டது. இதனால் திருப்பூரில் கரும்பாளையம், மங...

சித்துண்ணி கதை! பாப்பாமலர்!

Image
சித்துண்ணி கதை! நாடோடிக் கதைகள் வரிசையில் இதுவும் ஒரு சிறப்பான கதை! என்பாட்டி சிறிய வயதில் சொன்னது இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் இந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு. ஒரு நாள் அவரு காட்டுல நடந்து போயிகிட்டிருந்தாரு. நல்ல வெயிலானதால அவருக்கு ரொம்ப களைப்பு ஆயிருச்சு. ஒரு மரத்துக் கீழ அப்படியே படுத்து தூங்க ஆரம்பிச்சாரு. கண் அசருர சமையத்துல வெறுங்கொட்டையா அவரோட தலை மேல விழுந்துச்சு. ‘தலையில என்னடா இப்படி விழுதேன்னு’ மேல பார்த்தாரு.     ஒரு சின்ன சித்துண்ணி பறவை மரத்து பழத்தையெல்லாம் தின்னுட்டு கொட்டைங்களை கீழ துப்பிக்கிட்டு இருந்துச்சு. ராஜாவுக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. இவ்வளவு சின்ன பறவைக்கு அவ்வளவு திமிரா? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா நான் ஒரு ராஜான்னு கூட பார்க்காம என் தலைமேல கொட்டைய போடுவேன்னு அதட்டுனாரு.    ஆனா அது பயப்படாம அப்படியே உக்காந்துகிட்டு இருந்துச்சு! ராஜா அவசர அவசரமா மரத்துல ஏறினாரு சித்துண்ணி கழுத்தை பிடிச்சுதூக்கிக்கொண்டுபோய் சேறும் சகதியுமா இருந்த இ...

அஷ்டமி நாயகன் பைரவர்!

Image
அஷ்டமி நாயகர் பைரவர்!    எல்லா சிவ ஆலயங்களிலும் வடக்கு பாகத்தில் பைரவர் சன்னதி இருக்கும். இங்கு நாய் வாகனத்தில் நிர்வாண கோலத்தில் பைரவர் எழுந்தருளி இருப்பார். இவரை க்ஷேத்திர பாலகர் என்று அழைப்பார்கள். இன்றைக்கு பெரும் கம்பெனிகளை  காக்க வாட்ச் மேன்களை நியமிப்பது போல ஆலயங்களின் காவல்  தெய்வம்  பைரவப் பெருமான்.       இவரை  வணங்காது உள்ளே செல்ல கூடாது. அதே சமயம் வரும் போதும் வணங்கி வர வேண்டும். அந்த காலத்தில் பூஜை செய்து முடித்தபின் கோயிலை பூட்டி சாவியை பைரவரிடம் சமர்ப்பிப்பார்கள். மறுநாள் காலை வந்து பைரவருக்கு பூஜைகள் செய்து சாவியை எடுத்துச் சென்று கோயிலை திறப்பார்கள்.     ஆதிகாலம் முதலே பைரவர் வழிபாடு சிறப்பாக நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை பல்வேறு தல புராணங்களும் கோயில் கல்வெட்டுக்களும்  தெரிவிக்கின்றன. "கோபுரத்தின் வடக்கே க்ஷேத்திரபாலகர்  ஆலயம் அமைக்க வேண்டும் என்று காரணாகமம் கூறுகிறது.    பைரவர் சிவ அம்சம். இதற்கு 64 மூர்த்த பேதங்கள் உண்டு என்றாலும் சிறப்பாக எட்டு...

ஒரு வில்லன்!ஒருஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!

Image
 வில்லன்  108 காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதியில், நேற்று பகல் 12 மணிக்கு நடந்து சென்ற மூதாட்டி, வெயில் தாங்க முடியாமல் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த வியாபாரி ஒருவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. வெயிலில் சுருண்டு கிடந்த மூதாட்டியின், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ஆகியவற்றை ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் பரிசோதித்தனர். பரிசோதனை முடிவை சென்னை திருவல்லிக்கேணி தலைமை அலுவலகத்தில் உள்ள மருத்துவருக்கு தெரிவித்தனர். உத்தரவு: அவர், ""மூதாட்டியை மருத்துவமனையில் சேர்க்க, யாராவது உடன் வருவதாக இருந்தால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள், இல்லை என்றால் அங்கேயே விட்டுச் செல்லுங்கள்' எனக் கூறியுள்ளார். அதன்படி ஊழியர்கள், அருகில் இருந்தவர்களிடம் ""இவரை மருத்துவமனையில் சேர்க்க யாராவது உடன் வருகிறீர்களா,'' எனக் கேட்டனர். பொதுமக்கள் யாரும் முன் வரவில்லை. உடனே ஊழியர்கள் ஆம்புலன்சை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். இரக்க குணம் படைத்த சிலர், மூதாட்டியை தூக்கி, நிழலில் படுக்க வைத்தனர...

கோவில்களில்கொள்ளையும்! பக்தர்கள் வேதனையும்!

Image
அறநிலையத் துறை : முதல்வர் கவனிப்பாரா ? ஆர் . ரங்கராஜன் , மதுரையிலிருந்து எழுதுகிறார் : " ராமேஸ்வரம் கோவிலில் மோசடி ' என்ற தலைப்பில் , மதுரை அன்பர் ஒருவர் , இப்பகுதியில் , எழுதியிருந்த கடிதம் படித்தேன் . தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற கோவில்கள் அனைத்திலுமே , அர்ச்சனைத் தட்டில் துவங்கி , ஆராதனை வரை , இதுபோன்ற மோசடிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன . ஆனால் , கேரளக் கோவில்களில் , இப்படிப்பட்ட நிலை இல்லை . அண்மையில் , என் பேத்திக்கு அன்னப்பிராஸனம் செய்யவும் , துலாபாரம் அளிக்கவும் , குடும்பத்துடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்றோம் . கோவிலுக்குரிய ஆசார அனுஷ்டானங்களை , பூஜா நியமங்களை ஒன்றுவிடாமல் அங்கு அனுசரிக்கின்றனர் . பக்தர்களுக்கு , எந்த அசவுகரியமும் இல்லாத அளவுக்கு , போதுமான ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர் . பாதுகாப்பு ஏற்பாடுகள் அருமை . கோவிலுக்குள்ளும் சரி , வெளியிலும் சரி , எவரும் எங்களை ஏமாற்றவில்லை . ஆட்டோ டிரைவர்கள் கூட , நம்பமுடியாத அளவுக்கு , நியாயமான வாடகையே வசூலித்தனர் ; பண்பாகவும் பேசுகின்றனர் . பால் பாயச...

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5

Image
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5 உங்கள் ப்ரிய “பிசாசு” முன்கதை சுருக்கம். பஞ்செட்டியில் உள்ள முகேஷின் நண்பன் ரவிக்கு பேய் பிடித்துக் கொண்டு வினோதமாக நடந்து கொள்கிறான். திடீரென ஓடி இரண்டுகிமீக்கு அப்பால் மயங்கிவிழும் அவனை ஒரு பெரியவர் உதவியுடன் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறான் முகேஷ். அப்போது உடன் வந்த பெரியவரைக் காணவில்லை. நத்தம் வரும் ராகவனின் நண்பன் வினோத் தன்னுடன் செல்வி என்னும் பெண்ணை அழைத்து வருகிறாள்.அந்த பெண்ணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறாள். அவளும் ஓட அவள் பின்னால் சென்ற வினோத்தை காணவில்லை!    செல்வி அந்தம்மாவிடம் இருந்து கையை உதறிய சமயம் தெருவில் ஒரே கூட்டமாய் மக்கள் ஓடினார்கள். என்னடா இது எங்கே ஒடுகிறார்கள் என்று ஒரே ஆச்சர்யமாக போய் விட்டது ராகவனுக்கு என்ன இது இன்று காலையில் இருந்து நடப்பது எல்லாம் வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு ஓடுபவர்களை மறித்து எங்கே ஓடறீங்க? என்ன விசயம் என்றான்.     நம்ம ஏரிக்கரையோரமா ஏதோ பிணம் கிடக்காம்! போலிஸ் வந்திருக்கு அதான் போறோம். என்று சொல்லிவிட்டு சென்றான் ஒருவன்.   இது என்னடா ப...