Posts

தென்னை மரம் ஏற நவீன கருவி: கோவை இளைஞருக்கு அங்கீகாரம்

Image
பெ.நா.பாளையம்:தென்னை மரம் ஏற, நவீன கருவி கண்டுபிடித்த, கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் இளைஞருக்கு, தனது படைப்பை டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த கண்காட்சியில், ஜனாதிபதி முன் பார்வைக்கு வைக்கும், வாய்ப்பு கிடைத்தது. தென்னை மரம் ஏற, புதியதாக மேம்படுத்தப்பட்ட கருவியை, கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வெங்கட் என்ற ரங்கநாதன், கடந்த 2008ம் ஆண்டு வடிவமைத்தார். இக்கருவியின் வாயிலாக, மிக உயரமான தென்னை மரத்திலும், விரைவில் ஏற முடியும். காயம் ஏற்படாது: தென்னை மரம் ஏற, ஏற்கனவே பல வடிவங்களில் கருவிகள் உள்ளன. ஆனாலும், அதைப் பயன்படுத்துவதில், நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டன. உதாரணமாக, தென்னை மரம் ஏறும் கருவியில் பல் சக்கரம் பயன்படுத்தப்பட்டதால், மரங்களின் மேல்பகுதியில், சேதம் ஏற்பட்டது. நாளடைவில், மரங்களுக்கு பாதிப்பு உண்டானது. அடிப்பகுதியில் அகலமாக உள்ள தென்னை மரங்களில், அது போன்ற கருவிகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மரத்தின் சுற்றளவுக்கு ஏற்ற வகையில் மரம் ஏறும் கருவியை நீட்டிக்க செய்யும் வசதியும் இல்லை. ஆனால், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவியால், மரங்களுக்கு காயம் ஏற்ப...

டேய் குண்டு பூசணி! பாப்பா மலர்!

Image
டேய் குண்டு பூசணி! பள்ளிக்குள் மணி நுழைந்ததுமே மாணவர்கள் டேய் குண்டு பூசணி வருதுடா! வழி விடுங்கடா! இல்லேன்னா இடிச்சி நசுக்கிடும்டா! என்று ஆளுக்கு ஆள் கேலி பேசி சிரித்தார்கள். மணிக்கு அவமானமாக இருந்தது.வாய் பேசாமல் தனது இருக்கையில் போய் அமர்ந்தான். டேய் பார்த்து உட்காருடா! பெஞ்ச் உடைஞ்சிடப் போவுது ஒருவன் குரல் கொடுக்க மற்றவர்கள் ‘ஓ’வென்று கூச்சலிட்டனர். மணி கூசிப் போனான். அப்படியே தலை கவிழ்ந்து அமர்ந்து கொண்டான்.     மணி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.அவனது உடல் மிகவும் பருத்து குண்டாக இருப்பான்.வகுப்பிலேயே அவன் தான் குண்டு.குண்டு நபர்கள் மற்றவர்கள் கேலிக்கு ஆளாவது இயல்புதானே! அவ்வழியில் உடன் படிக்கும் மாணவர்கள் அவனை கிண்டல் செய்து மகிழ்ந்தனர். ஆனால் மணிக்குத் தான் மிகவும் வருத்தமாக இருந்தது. இறைவன் ஏன் நம்மை இப்படி படைத்தானோ என்று வருந்துவான்.    மற்ற மாணவர்களின் கிண்டலை கேட்டு கேட்டு மணிக்கு தன் மீதே வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. ச்சே குண்டாக பிறந்துவிட்டோமே! அனைவரின் கேலிக்குரிய பொருளாகிவிட்டோமே! என்ன பாவம் செய்தேனோ இப்படி ஒரு பிறப்பு எடுத்துவிட்டேன்...

துணிகளில் எண்ணெய் கறை நீக்குவது எப்படி? டிப்ஸ்!

Image
இப்ப வீட்ல இருக்கிற துணிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனா அப்படி இருக்கிற துணிகளை நிறைய பேருக்கு பத்திரமா அழகா வெச்சுக்க தெரியவில்லை. அப்படி தெரியாத அவர்கள், மேலும் மேலும் நிறைய துணிகளை வாங்கி அதையும் ரொம்ப நாள் வெச்சுக்கத் தெரியாம அடுக்கி வெச்சுக்கிறாங்க. அப்படி இருக்கிறவங்களுக்கு துணிகளை அழகா வெச்சுக்க இதோ சில டிப்ஸ்... 1. துணிகளை அலசி நீலம் போடும் போது, நீலம் ஒன்று போல் தண்ணீரில் பரவ சிறிய முடிச்சுகளில் நீலத்தைக் கட்டி நீரில் கலந்து துணிகளை அலசினால் துணியானது வெண்மையாக, அழகாக காணப்படும். 2. பட்டுப் புடவைகளை துவைக்கும் போது அதனுடன் பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் பூச்சி வெட்டாமலும் சாயம் போகாமலுமிருக்கும். மேலும் ஸ்வெட்டர் போன்றவைகளை பேப்பரில் மடித்து வைத்தால் பூச்சி வெட்டாது. 3. துணிகளில் படும் டீக்கரையைப் போக்க சர்க்கரையை உபயோகிக்கலாம். மேலும் வெள்ளைத் துணிகளில் படும் கரையைப் போக்க ப்ளீச்சிங் பவுடரை தண்ணீரில் கரைத்து உபயோகிக்கலாம். 4. வெள்ளை நிற சட்டைகளை நீலநிற டிஷ்யூ பேப்பரில் அல்லது நீலநிறத் துணியில் சுற...

சகாயம்! ஆஸ்ரா கார்க் மாற்றம்! சில சுவாரஸ்ய தகவல்கள்!

Image
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் மற்றும் எஸ்.பி. அஸ்ரா கார்க் ஆகியோருக்கு இடையே தொடங்கிய ஈகோ யுத்தம்தான் இப்பொழுது இடமாற்றம் வரைக்கும் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை உளவுத்துறை மூலமாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு அஸ்ரா கார்க் கொண்டு சென்றதாகவும் இதைத் தொடர்ந்தே சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டு கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை ஆதீனம் விவகாரத்தில், மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மதுரை ஆதீன மீட்பு குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் மனு அளித்தனர். அதன் மீது விசாரணை நடத்த சகாயம் உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும், நித்தியானந்தாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற போது, அது குறித்து காவல்துறை தலைமையிடம் அஸ்ரா கார்க்கும், சகாயமும் விவாதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் இருவரும் இணைந்து செயல்படாமல் ஒருவருக்கொருவர் இஸ்டத்துக்கு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் மதுரையைச் சுற்றியுள்ள அமைச்சர்கள் சிலர் சொல்வதை சகாய...

வீருவா! தோனியா? விறுவிறு போட்டி!

Image
எலிமினேட்டர் ஆகுமா டெல்லி! சென்னையுடன் விறுவிறு போட்டி! ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அரையிறுதி போன்ற போட்டியில் இன்று டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை. இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே சென்னைக்கு சறுக்கல்தான். வெல்வதும் தோற்பதும் வாடிக்கையாக இருந்தது. ப்ளே ஆப் போட்டிற்கும் அதிர்ஷ்டத்தால் உள்ளே நுழைந்தது. ஆனால் அந்த போட்டியில் மும்பைக்கு எதிராக அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் உழைக்கவும் செய்தது சென்னை.    வாழ்வா சாவா போன்ற போட்டிகளில் இதுவரை சென்னை அணி சிறப்பாக செயல்பட்டுவந்துள்ளது. 2010 பஞ்சாப், 2011ல் பெங்களூரு இந்த ஆண்டில் மும்பை என முக்கியமான அணிகளை முக்கிய போட்டிகளில் வீழ்த்தி தன் திறமையை நிருபித்து காட்டியுள்ளது. இந்த வருடம் சென்னையில் ஐபிஎல் பைனல் நடக்க இருப்பதால் தங்கள் அணி பைனலில் இருக்க வேண்டும் என்ற நினைப்பு சென்னை ரசிகர்களுக்கு உள்ளது. அதுபோல  ஒட்டுமொத்த ரசிகர்களும் சென்னை அணிக்கு பக்கபலமாக உள்ளனர். கொல்கத்தா தாதா கங்குலி மட்டுமே இந்த முறை கொல்கத்தா அணி சாம்பியன் ஆகும் என்று கணித்துள்ளார்.      இந்த நிலை...

விவேகானந்தா ஈஸ் நவ் நித்யானந்தா! டிராபிக் ராமசாமி காமெடி கும்மி!

Image
சென்னை: சுவாமி விவேகானந்தரும், நித்தியானந்தாவும் ஒன்று என்று கூறியுள்ளார் டிராபிக் ராமசாமி. டிராபிக் ராமசாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சென்னையைச் சேர்ந்தவரான டிராபிக், பல நல்ல பொது நலன் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மக்களுக்கு பல பேருதவிகளைச் செய்தவர். இவர் மீது எப்போதும் கொந்தளிப்புடனும், கொதிப்புடனும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு மற்றவர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டவர், ஆனாலும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அப்படியாப்பட்ட டிராபிக் ராமசாமி தற்போது நித்தியானந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் மதுரை ஆதீன மடத்திற்கு விசிட் அடித்த அவர் அங்கு நித்தியானந்தாவை புகழ்ந்து பேசியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டால், விவேகானந்தவர் மிகவும் தைரியமானவர். அவருக்குப் பிறகு அந்தத் தைரியத்தை நித்தியானந்தாவிடம்தான் பார்க்கிறேன். 100 இளைஞர்களைக் கொடுங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறியவர் விவேகானந்தர். அதேபோல நித்தியானந்தவிடம் ஆயிரக்கணக்கான இளைஞர...

கார்களில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான டிரைவிங் டிப்ஸ்

Image
எகிறி வரும் எரிபொருள்களின் விலை உயர்வால், குதிரை வாங்கியும், சாட்டை வாங்காத குறையாக பலர் காரை வாங்கி வீட்டில் அழகு பொருளாக நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக கருதப்பட்ட கார்கள் இன்றைக்கு அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. எரிபொருள் விலை உயர்வு அதிகரித்தாலும், அலுவலகம், வர்த்தக தேவைகள், சுற்றுலாக்களுக்கு காரை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, காரில் செல்லும்போது சில எளிய நடைமுறைகளை கடைபிடித்தால், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். எரிபொருள் சிக்கனத்திற்கான சில டிரைவிங் டிப்ஸ் 1. தேவையில்லாமல் கிளட்சை அடிக்கடி மிதிப்பதை தவிர்க்க வேண்டும். கியரை மாற்றும்போது மட்டும் கிளட்சை மிதிக்க வேண்டும். கிளட்சை அடிக்கடி பயன்படுத்துவதால் கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதை நினைவில் கொண்டு டிரைவிங் செய்யவும். 2. நிறுவனங்கள் கூறியுள்ளபடி, வேகத்திற்கு தக்கவாறு சரியான கியரில் காரை இயக்க பழகிக்கொள்ள வேண்டும். சிலர் கார் ஓட்டுவதில் நான் சூரப்புலி என்பதை காட்டுவதற்காக வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் உடனுக்குடன் கியரை மாற்றி வேகமெடுத்து திறமையை ...