Posts

பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் – ஜெ., அறிவிப்பு

Image
சென்னை, ஆகஸ்ட் 26 : அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஓர் ஆண்டில் மூன்று முறை தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மூன்று பருவத் தேர்வுகள் மதிப்பெண்கள் மூலம் கூட்டு மதிப்பீட்டு முறை பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டு மூலம் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் ஜெயலலதா இன்று அறிவித்தார்.     உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க அரசு சில திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதாக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். அதன்படி, 65 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 710 நடு நிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப் படுவதாக  தெரிவித்தார். மேலும் 9,735 பட்டதாரி ஆசிரியர்கள், 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டில் நிரப்பப் படவுள்ளதாக அவர் தெரிவித்தார். பள்ளிகளில் தொழ...

பட்டுச் சட்டை! பாப்பா மலர்!

Image
பட்டுச் சட்டை! முன்னொரு காலத்தில் விவேகபுரி என்ற சிற்றூரில் தையல் காரன் ஒருவன் வசித்துவந்தான்.அவனுக்கு ஒரே மகள் பெயர் கோமதி அந்த தையல்காரணுக்கு அவன் பெண்ணைத்தவிர வேறு சொந்தம் எதுவும் இல்லை. அவன் மனைவியும் சில வருடங்களுக்கு முன் இறந்து போனாள். அவனுக்கு மிகவும் வயது முதிர்ந்து விட்டது. தள்ளாமையால் அவதிப் பட்ட அவன் ஒரு நாள் தன் மகளை அழைத்துக் கூறலானான்.     மகளே! எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. இன்னும் சிறிது நாள்தான் உயிர் வாழ்வேன்.உனக்கும் பருவ வயது கடந்து போகிறது. எனவே என் வாழ்நாள் முடிவுக்குள் உனக்கு ஒரு திருமணம் செய்து முடித்துவிட்டால் நான் நிம்மதியாகப் போய் சேர்வேன்.நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டான்.      கோமதியும் தந்தையே நானும் திருமணமாகிப் போய்விட்டால் தங்களை யார் கவனித்துக் கொள்வார்கள் எனவேஎனக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்தாள். ஆனால் தையல் காரன், மகளே என்னை பற்றிக் கவலைப் படாதே! அதது காலா காலத்தில் நடக்க வேண்டும்.அப்பொழுதுதான் வாழ்க்கை இனிக்கும்.அதுவுமில்லாமல் உனக்கு திருமணம் செய்விக்க வேண்டியது என் கடமை. அதை என் சுயநலத்திற்காக தள்ளிப் போடு...

ஓடிப்போயிடலாமா? சிறுகதை

Image
ஓடிப்போயிடலாமா? சென்னை மெரினாக் கடற்கரை.கதிரவன் தன் காதலியைத்தேடி மறைந்துக் கொண்டிருக்க கடலலைகளின் பேரிரைச்சல் அங்கு துள்ளிவிளையாடிய வாண்டுகளின் முன்னால் தோற்றுக் கொண்டிருந்தது. சுண்டல்காரர்கள் பிஸியாக தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் என்று வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்க ஒர் படகு மறைவில் இளம் காதலர்கள் ரமேஷும் வந்தனாவும் அமர்ந்து இருந்தனர்.    “என்ன ரமேஷ் பீச்சுக்கு வர்ச்சொல்லிட்டு பேசாம உட்கார்ந்திருக்கீங்க? என்ன விஷயம்? சொல்லுங்க!’ என்றாள் வந்தனா.   ரமேஷ் சிறிது நேரம் மௌனித்து இருந்தான்.அவன் ஏதோ சிந்தனையாக இருக்க வந்தனா மீண்டும் பேச ஆரம்பித்தாள்.   “என்ன ரமேஷ் இது? இப்படி பேசாம உட்கார்ந்து இருக்கறதுக்காகவா பீச்சுக்கு கூப்பிட்டீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு? ஏதாவது பேசுங்களேன்!”   ரமேஷ் மெதுவாக சன்னமான குரலில் பேச ஆரம்பித்தான். “வந்தனா ஏன் இப்படி கத்தறே? இரு சொல்லிடறேன் எப்படி ஆரம்பிக்கிறதுன்னுதான் யோசிச்சிகிட்டு இருந்தேன்.நீதான் ரொம்ப அவசரப்படறியே”   “ரமேஷ்! ஸ்டைட்டா விஷயத்துக்கு வாங்க! சுத்தி வளைக்காதீங்க!”   “ஓகே! ஓகே! சொல்லிடறேன். எங்க வீட்ல எனக்கு...

சங்கர்ராமன் கொலை வழக்கு: நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் 'டீல்' பேசினாரா?-சிடியால் பரபரப்பு

Image
சென்னை: சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோ சிடி வெளியாகியுள்ளது. நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந் நிலையில் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயந்திரர், அவரது பெண் உதவியாளர், 2 இடைத்தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் அடங்கிய சி.டி. வெளியாகி உள்ளது. இதை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்து...

மாண்புமிகு அம்மாவுக்கு மண்ணாங்கட்டியின் கடிதம்!

Image
மாண்புமிகு அம்மாவுக்கு மண்ணாங்கட்டியின் கடிதம்! மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவுக்கு! மண்ணாங்கட்டியின் வணக்கமுங்க! இண்டர் நெட் இ.மெயிலுன்னு நீங்க மாடர்னா இருந்தாலும் தமிழ்நாட்டுல இன்னும் பல கிராமங்கள் தபால் ஆபிஸுக்கு கூட கதியில்லாமத்தான் கிடக்கு அப்படிப் பட்ட ஒரு கிராமத்தில இருந்துதான் இந்த கடிதத்த உங்களுக்கு எழுதறேன். எப்படியோ சூளுரைத்தபடி ஆட்சி அமைச்சு இன்னியோட 100 நாள கடந்துட்டீங்க. முதல்ல அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்.          உங்க முன்னோடிகள் ஆட்சி செய்யறப்பல்லாம் இந்தமாதிரி 100வது நாள் 200வது நாள் எல்லாம் சினிமா படங்களுக்குத்தான் கொண்டாடுவாங்க. என்னபண்றது நாங்க சினிமா காரங்களை இல்ல மாத்தி மாத்தி ஆட்சியில உக்கார வைக்கிறோம். அதனால இதையும் பழகிக்கிறோம்.   சீர்கெட்டு கிடந்த தமிழகத்தை 100 நாள்ல மாத்திட முடியாதுதான்! ஒத்துக்கறேன். ஆனா பங்காளிச் சண்டை மாதிரி இல்ல உங்க அரசாங்கம் செயல்படுது.மக்கள் உங்களை ஆட்சியில உக்கார வைச்சது நமக்கு ஏதாவது நாலு நல்லது பண்ணுவாங்கன்னுதான்.    நாலு நல்லது பண்ற ஆளுங்க யாரும் இப்ப தமிழ் நாட்டுல இல்லாத...

மீண்டும் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு! சட்டசபையில் ஜெ.அறிவிப்பு!

Image
சென்னை: கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ் புத்தாண்டு ரத்து செய்யப்பட்டு சித்திரை மாதம் முதல் நாளிலேயே தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த சட்டசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி மாறியதும் தி.மு.க., கொண்டு வந்த பல்வேறு திட்டங்களான கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச கலர் டி.வி., திட்டம் , இலவச வீடு வழங்கும் திட்டம் சமச்சீர் கல்வி (கோர்ட்டு போய் தப்பியது ) , புதிய தலைமை செயலகம் மாற்றம் ரத்து என உள்ளிட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தை மாதம் முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தி.மு.க., சட்டம் இந்நிலையில் இயற்றியது.இன்றைய சட்டசபையில் இன்று தமிழக அரசு ரத்து செய்தது. மீண்டும் சித்திரை முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று புதிய சட்ட மசோதாவை அவையில் அரசு தாக்கல் செய்தது. இதற்கு கம்யூ., கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க., எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. பல்லாண்டு காலம் நடைமுறையில் இருந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம் என தொல்லியல், வானிலை நிப...

ஸ்பெக்ட்ரம்: ராசாவோடு பிரதமரும், சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர்- கனிமொழி

Image
ஸ்பெக்ட்ரம்: ராசாவோடு பிரதமரும், சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர்- கனிமொழி டெல்லி : 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் விற்பனை செய்வதில்லை என்று அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவோடு சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் , அப்போதைய நிதியமைச்சர் ப . சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர் என்று திமுக எம்பி கனிமொழி சிபிஐ நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் . டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில் , இன்று கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தார் . மேலும் , இது தொடர்பாக ராசா , பிரதமர் , சிதம்பரம் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான ஆதாரத்தையும் (minutes of the meeting) அவர் நீதிமன்றத்தில் சமர்பித்தார் . இந்த விவகாரத்தில் எனக்குத் தெரியாமலேயே ராசா தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வரும் நிலையில் , கனிமொழி இன்று சமர்பித்த ஆதாரம் , அவருக்கு எதிராக அமைந்துள்...