ரன் எக்ஸ்பிரஸ்! மிதாலிராஜ். பகுதி 4.
ரன் எக்ஸ்பிரஸ் ! மிதாலிராஜ் . பகுதி 4. 2017 உலககோப்பை போட்டியில் இந்திய பெண்கள் அணி இளம் வீர்ர்களோடு களம் இறங்கியது . மிதாலிராஜ் அனுபவ வீராங்கணையாக ஜொலித்தார் . முதல் சுற்றில் முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட இந்திய அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது . கடைசி சுற்றுப் போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராக மிதாலி 109 ரன்களை விளாச இந்தியா 265 ரன்களை குவித்த்து . பதிலுக்கு நியுசிலாந்து வெறும் 79 ரன்களில் சுருண்டுவிட 187 ரன்கள் வெற்றி உலக கோப்பையில் பெரும் வித்தியாசத்திலான வெற்றி என்ற சாதனையுடன் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கத் தயாரானது இந்தியா . 2005 ல் இறுதிப்போட்டியில் தோற்ற வடு இன்னமும் இருக்க இந்தப் போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற முனைப்பில் இறங்கியது இளம் இந்திய அணி . ஆஸ்திரேலிய அணியோ நாம் வென்ற அணிதானே இது ! வழக்கம்போல வெற்றி பெற்று பைனலுக்கு செல்லப்போவது நாம்தான் என்று கெத்தாக களம் இறங்கியது . அவர்களின் கண...