படித்த நரியும் முட்டாள் முதலையும்! பாப்பாமலர்!
படித்த நரியும் முட்டாள் முதலையும்! பாப்பாமலர்! வேணுவனம் என்னும் காட்டில் நதி ஒன்று ஓடியது. அந்த நதியில் முதலை ஒன்று தன் குட்டிகளுடன் வசித்துவந்தது. அந்த காட்டில் புத்திசாலியான நரியும் தன் மனைவியுடன் வசித்துவந்தது. நரி தன் தந்திரத்தால் பலரையும் வென்ற கதை அந்த காட்டில் பிரசித்தம். அதுவும் முதலைகளை முட்டாள்கள் ஆக்கிய செய்தியும் பிரசித்தமாக இருந்தது. எனவே முதலை தன் குட்டிகளை நரியிடம் பாடம் படிக்க அனுப்புவது என்று முடிவு செய்தது. அந்த முதலைக்கு ஏழு குட்டிகள். ஒருநாள் தனது ஏழு குட்டிகளுடன் நரியின் இருப்பிடத்திற்கு முதலை வந்தது. பொந்துக்குள் பதுங்கியிருந்த நரி நண்டுகளை சுவைத்துக்கொண்டு இருந்தது. முதலை தன் வீடு தேடி வந்ததை கண்ட நரி ஆச்சர்யம் அடைந்தது. ஆனாலும் அதை வெளிப்படுத்தாது, “நண்பா முதலையாரே! என்ன இத்தனை தூரம் இந்த சாமானியனைத் தேடி வந்து இருக்கிறீர்?” என்றூ வினவியது. “ நரி நண்பா! நீதான் காட்டில் அதிகம் படித்த புத்திசாலி! உன் திறமையால் சிங்கராஜாவுக்கே மந்திரியாக இருக்கிறாய்! எங்கள் குடும்பம் படிப்பறிவு இல்லாமல் அசிங்கப்பட்டுக் கொண்டு இருக்க...