நம்பிக்கை! ஒரு பக்க கதை

 

நம்பிக்கை! 
 ஒருபக்க கதை!
 நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. 


 காலை வேளையில் வாட்சப்பில் மூழ்கியிருந்த கணவன் கோபியிடம், “என்னங்க நம்ம பொண்ணுக்கு காலேஜ்ல அவ கேட்ட கோர்ஸ் கிடைக்கணும்னு கோயிலுக்குப் போய் சாமிகிட்டே வேண்டிகிட்டு வருவோம்! சீக்கிரம் குளிச்சு ரெடியாகுங்க!” என்றாள் ரேவதி.

 “என்ன இது சுத்த பேத்தலா இருக்கு! சாமியா கோர்ஸை அலாட் பண்ணப் போறார்?” தோ பார்! நீ வேணா இதையெல்லாம் நம்பிகிட்டு கோயில் குளம்னு சுத்து! என்னைக் கம்ப்பெல் பண்ணாதே!” 

 ”என்னங்க இது! நம்ப பொண்ணுக்கு அவ விரும்புன கோர்ஸ் கிடைக்கணும்னு ஒரு வேண்டுதல் பண்ணா என்ன குறைஞ்சா போயிருவீங்க? இப்படி நாத்திகம் பேசிக்கிட்டு இருக்கீங்க?”
 “பின்னே! அந்த கடவுள் என்ன காலேஜ் ப்ரின்சியா? நாம வேண்டின உடனே கோர்ஸ் அலாட் பண்ண? “ எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை!”இதெல்லாம் வீண் வேலை! “

 ”வாட்சப்லே ஒரு மேசேஜ் வருது இதை பத்து பேருக்கு பார்வேர்ட் பண்ணா நூறு ரூபா ரீசார்ஜ் ஆகும். லெப்ட் பக்கம் இருக்கிற பூ ரைட் பக்கம் மாறும்னு” அதை பார்வேர்ட் பண்றீங்க இல்லே?”

 ”ஆமா அதுக்கென்ன இப்ப?” ”எந்த நம்பிக்கையிலே அதை பண்றீங்க? சொல்லப் போனா இது நடக்காதுன்னு உங்களுக்குத் தெரியவே தெரியும். தெரிஞ்சிருந்தும் எதாவது நடந்துடாதான்னு ஒரு ஆர்வத்துலே பண்றீங்க இல்லையா? அது போலத்தாங்க கடவுள் நம்பிக்கையும்! 

நம்ப தலையெழுத்துன்னு ஒண்ணு இருந்தாலும் அதையும் மீறி ஏதாவது நல்லது நடக்கட்டும்னு சாமி கும்பிடறோம்! நம்ம நம்பிக்கையை கடவுள் செவி சாய்ப்பார்னு ஒரு நம்பிக்கை!”

 வாட்சப் பேக் மெசெஜ் மேல வைக்கிற ஒரு நம்பிக்கையை ஒரு வாட்டி கடவுள் மேலேயும் வைச்சுப் பாருங்களேன்! நம்ம பொண்ணுக்காக! ”ரேவதி சொல்லவும் கோபி தெளிவடைந்தவனாக குளிக்க எழுந்தான்.

Comments

  1. இந்த வருஷம் நல்ல மழை. அதனாலேதான் தளிர் மீண்டும் புதிய துளிர்களை விடுகிறது. மீள்வருகைக்கு மகிழ்ச்சி. தேன்சிட்டுவும் துடரட்டும். 

    Jayakumar

    ReplyDelete
  2. மிகவும் நன்று பாராட்டுகள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. மிகவும் நன்று பாராட்டுகள் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நல்லதொரு தெளிவு... அருமை...

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. கதை சிறப்பு. நம்பிக்கை தானே எல்லாம்.

    ReplyDelete
  6. சரி தான், அவரவர் நம்பிக்கை அவர் அவருக்கு 👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!