Posts
Showing posts from November, 2018
தேன்சிட்டு மின்னிதழ் தீபாவளி மலர். புதிய வடிவமைப்பில்!
- Get link
- X
- Other Apps
எனது இனிய நண்பர் திரு க.கமலக்கண்ணன் அவர்களின் அயராத பணிகளுக்கு இடையேயும் எனக்காக இரவுநேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி மூன்றே நாளில் வணிக இதழ்களுக்கு நிகராக தேன்சிட்டினை வடிவமைத்து தந்துள்ளார். அவரது உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்! நட்புக்கு பெருமிதம் கொள்கிறேன்! நன்றி சொல்ல வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்கிறேன்! படித்து மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் இயன்றால் நண்பர் திரு கமலக்கண்ணன் வாட்சப் எண் +91 98400 75598 ல் அவருக்கு பாராட்டுக்களை பகிருங்கள்! நன்றி!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
- Get link
- X
- Other Apps
தளிர் ஹைக்கூ கவிதைகள்! பற்றவைத்ததும் பூத்தது மகிழ்ச்சி! பட்டாசு! சத்தம் போட்டு எழுப்பியது பட்டாசுகள்! தீபாவளி அதிகாலை! கரியான காசுகள் ஒளியேற்றின வாழ்க்கையை! சிவகாசிபட்டாசு தொழிலாளர்கள்! பூத்து கொட்டியது தொடுக்க முடியவில்லை! தீபாவளி மத்தாப்புக்கள்! அடங்கிப் போன பறவைகள்! பறந்து கொண்டிருந்தன! தீபாவளி வாணங்கள்! வெடிக்க கட்டுப்பாடு! பிடிக்க வில்லை! காற்று மாசு! தொலைத்த பால்யம்! மீண்டது தீபாவளி வெடி! வாட்சப் வாழ்த்துக்களில் வதங்கிப் போனது நிகழ்கால தீபாவளி! வெடித்து சிதறிய பட்டாசுகள்! பிடித்து வைத்தது பட்டாசு தொழிலாளர் வாழ்க்கை! திணிக்க திணிக்க திளைத்துப்போனது வயிறு! தீபாவளி இனிப்புக்கள்! வெடிகளின் வெளிச்சம்! வெளிப்படுத்தியது மழலைகளின் மகிழ்ச்சி! இரண்டே மணி நேரம் சுருங்கிப் போனது பட்டாசு வியாபாரம்! அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
இந்த வாரம் இந்து மாயாபஜாரில் வெளியான எனது சிறுவர் கதை!
- Get link
- X
- Other Apps