ஏண்டா பொய் சொன்னே? பாப்பாமலர்!
“ஏண்டா பொய் சொன்னே?” கணேஷ் எட்டாவது படிக்கும் சிறுவன், அவனது குடும்பம் நடுத்தர குடும்பம். அவனது பள்ளி அவன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலலவில் இருந்தது. இத்தனை வருடமாக கணேஷ் பள்ளிக்கு நடந்துதான் செல்வான். பிறகு இலவச பயண சீட்டு வரும் அதன் மூலம் சென்று வருவான். இந்த வருடம் பள்ளி தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை! இலவச பயணச்சீட்டும் இன்னும் வழங்கவில்லை! “என்னால் பள்ளிக்கு நடந்து போக முடியாது” என்று அடம்பிடித்தான் கணேஷ். இது அவனது தாய்க்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தினமும் பஸ்ஸில் சென்று வருவதானால் பத்துரூபாய் தேவைப்படும். இது அவர்களை பொறுத்தவரை முடியாத காரியம் இல்லைதான். ஆனாலும் திடீரென கணேஷ் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறானே என்று யோசித்தாள் அவள். “ஏண்டா என்ன ஆச்சு! இத்தனை வருசம் பாஸ் கொடுக்கறவரை நடந்துதானே போனே? இப்ப என்ன திடீர்னு!” என்றாள் “அம்மா என்னால நடக்க முடியலை! கால் ரெண்டும் செமயா வலிக்குது தினம் பஸ்ஸிக்கு காசு கொடுத்தாதான் போக முடியும்” என்றான் பிடிவாதமாய் கணேஷ்! ...