இன்று முதல் 8மணி நேரம் மின்வெட்டு! இருண்ட தமிழகம்!
பற்றாக்குறை அதிகரிப்பால் , மாநிலம் முழுவதும் , அறிவிக்கப்பட்ட மின்வெட்டு , 8 மணி நேரமாக , இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது . கோடைக்காலம் துவங்கும் நேரத்தில் , அதிகரிக்கப்பட உள்ள இந்த மின்வெட்டு , மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் . மின் பற்றாக்குறையால் , ஏற்கனவே தமிழகம் புழுங்கி வருகிறது . புதிய மின் திட்டங்கள் அமலாக , இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும் . செயலில் உள்ள திட்டங்களிலும் , சொல்லிக்கொள்ளும்படியாக உற்பத்தி இல்லை . ஆனால் , பயன்பாட்டு அளவு , நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது . உற்பத்திக்கும் , பயன்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஈடுகட்ட முடியாமல் , தமிழக மின் வாரியம் திணறி வருகிறது . இதை சமாளிக்கும் வகையில் , சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் , 1 மணி நேரம் , புறநகர் மற்றும் பிற நகர்ப்பகுதிகளில் , 3 மணி நேரம் , கிராமப்புறங்களில் , 6 மணி நேரம் என , மூன்று விதமாக , அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது . அறிவிக்கப்பட்டது தான் இவ்வளவே தவிர , பெரும்பாலான இடங்களில் , இதை விட...