ஹை! ஹைக்கூ!

குறிஞ்சி மலர்

ரசக்கலி மசக்கலி
 காக்ராச்சோளி
என பூத்து குலுங்குமிடத்தில்
அரிதாய் ஒரு தாவணி.

வெள்ளைகாரிகள்
கூட்டத்தில் மனதை
கொள்ளை அடித்தவள்
குங்கும பொட்டு தேவதை

இடிந்து விழுந்த
இல்லம்
கைதட்டி ரசித்தன
குழந்தைகள்
கடற்கரை மணல் வீடு

 கருப்புச் சேலையில்
 சிவப்பு பொட்டுக்கள்
 நட்சத்திரங்கள்

 வியர்த்து வழிந்தன
 புற்கள்
 காலைப் பனி

இரவுப்போதில்
தூரத்தே கேட்கும்
இசை
தாலாட்டு

 டிஸ்கி: இதெல்லாம் ஹைக்கூவான்னு நீங்க கேட்பது காதுல விழுது ஆனா வேற வழியே இல்ல தளத்துக்கு வந்துட்டீங்க படிச்சுட்டு போங்க ப்ளீஸ்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2