நைட்டி உலா அவசியமா?




இரவில் படுக்கைஅறையில் அணிந்துகொள்ள தயாரானதுதான் ‘நைட்டி’எனப்படும் நைட்டிரஸ் என்பது எனது தாழ்மையான கருத்து. புடவையோடு எக்கசக்க உள்ளாடைகள் அணிந்து பகல் முழுதும் அல்லல் படும் பெண்கள் இரவில் ரிலாக்ஸாக ‘நைட்டி’ அணிவதில் தவறில்லை. ஆனால்..
      இன்றோ பிறக்கும் குழந்தைகளிருந்து தள்ளாத மூதாட்டிவரை இந்த ‘நைட்டி’ அணிந்து உலாவருகையில் ‘உவ்வே’ என் குமட்டல்தான் வருகிறது.முதலில் ‘நைட்டி’ போன்ற உடைகளை நகரங்களில் மட்டும் அதுவும் ராப்பொழுதில் மட்டும் காணமுடியும்.ஆனால் இன்றோ அது தேசிய உடை போல தெருவெங்கும் உலா வரத்தொடங்கிவிட்டதுதான் காலத்தின் கொடுமை.
       உடல் பருத்த பெண்மணிகள் தமக்கு சற்றும் பொருத்தமில்லா இந்த ஆடையை அணிந்துகொண்டு தெருவில் நடமாடுவதும் காய்கறிவண்டிகாரனிடம் பேரம் பேசிக்கொண்டும் பிள்ளைகளை பள்ளி வேனில் ஏற்றிக்கொண்டும் உலாவரும் காட்சிகள் கொடுமையிலும் கொடுமை.
     இன்னும் சிலர் உள்பாவாடை வெளியே தெரிய ஆங்காங்கே கிழிந்து கந்தலான இதை சிறிதும் கூச்சமில்லாமல் அணிந்து நடமாடுவதை என்னவென்று சொல்வது. கடை ,வீதி, கோயில், வீடு, என்று எங்கெங்கு காணிணும் ‘நைட்டி’யடா என்று காண கண் போதவில்லை போங்கள்.


       இது போதாதென்று கோலங்கள் தேவயானி ஒரு குடும்பத்தலைவியா என்னைபெருமை கொள்ள வைப்பது ........ ‘நைட்டி’ தான் என்று விதவிதமான போஸில்  தொலைக்காட்சியில் வந்து ‘நைட்டி’க்கு இலக்கணம் வகுக்கிறார். இரவில் அணியும் ஓர் ஆடைக்கு விதவிதமான் மாடல்கள் வேறு.பாக்கெட் வைத்துக்கூட வந்து விட்டது.
     தங்களுக்கு சிறிதும் பொருத்தமில்லா இந்த ஆடையை சில பெண்கள் உள் பாவாடை வெளியில் தெரிய மேலே ஒரு துண்டை ஒப்புக்கு போட்டுக்கொண்டு இடுப்பில் ஒரு குழந்தயை ஏந்தி செல்லும் காட்சி என்னை அருவெறுக்கவைக்கிறது.ஏன் அம்மா இவ்வளவு கஷ்டம்.
     பெண்களே கொஞ்சம் யோசியுங்கள் ‘நைட்டி’ அணியுங்கள் ஆனால் வீட்டில் மட்டும்.


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2