இன்று மஹா சிவராத்திரி
மகா சிவராத்திரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிவராத்திரி இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
|
சிவராத்திரி விரதம் வகைகள்
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
- மகாசிவராத்திரி
- யோகசிவராத்திரி
- நித்திய சிவராத்திரி
- பட்ஷிய சிவராத்திரி
- மாத சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்
- முதல் யாமம் - பஞ்ச கவ்விய அபிஷேகம், பொங்கல், நிவேதனம், வில்வத்தினால் அர்ச்சனை.
- இரண்டாம் யாமம் - பஞ்சாமிர்த அபிஷேகம், பாயாச நிவேதனம், தாமரை மலரால் அர்ச்சனை.
- மூன்றாம் யாமம் - தேன் அபிஷேகம், நெய்யும் மாவும் கலந்து நிவேதனம், நந்தியாவட்டை மலர்களால் அர்சனை.
- நான்காம் யாமம் - கருப்பஞ்சாறு அபிஷேகம், வெண்பொங்கல் நிவேதனம், நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை.
இவ்விரத்தின்போது திருமுறை ஓதல் மிகச்சிறப்பானதாகும். குறிப்பாகத் தேவாரத்தில் திருவண்ணாமலைப் பதிகங்களும் சிவபுராணமும் ஓதுதல் சாலச் சிறந்தது.
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார். நன்றி விக்கிப்பீடியா
Comments
Post a Comment