வேலைக்கிடைச்சாச்சு!


வேலைக் கிடைச்சாச்சு!
    
ரமேஷ் அந்த தனியார் அலுவலகத்திலிருந்து சோர்வுடன் வெளியே வந்தான்.கடைசியாக இந்த இந்த இண்டர்வியுவை மிக்க நம்பிக்கையுடன் ‘அட்டெண்ட்’ செய்தும் பிரயோசனம் இல்லை. வேலை வேறு எவனுக்கோ சிபாரிசு மூலம் கிடைத்து விட்டது. ‘சாரி மிஸ்டர் ரமேஷ் உங்களை இழப்பதில் வருத்தமடைகிறோம் ஆனால்.... என்று நேர்முகத் தேர்வு நடத்துபவன் சொன்னது காதில் தேளாய் கொட்டியது.


     இந்த இண்டர்வியு வெறும் கண்துடைப்புக்குதானாம். இந்தவேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் எப்பொழுதோ சிபாரிசினால் வேறு ஒருவனுக்குச் சென்று விட்டதாம். வெறுப்புடன் வெளியே வந்தான். ‘ச்சே நாடு எவ்வளவு மோசமாகி விட்டது.தகுதி இருந்தும் தக்க சிபாரிசு இல்லாததால்வேலை இல்லாமல் போய் விட்டது.

       வயதோ நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. எத்தனை நாளைக்குத்தான் பெற்றோர்களுக்கு பாரமாய் இருப்பது.அவனுள் இயலாமையும் ஆத்திரமும் கரைபுரண்டு அழுகையாய் வந்தது.

சட்டென கண்ணைத்துடைத்துக்கொண்டு சாலையில் நடந்தான். வழியில் பிள்ளையார் கோயில் தென்பட கூட்டம் அதிகமாக இருந்தது. விநாயகா உனக்கு கூட என் மீது கருணை இல்லையே என்றவாறு சட்டைப்பையில் துழாவி இருந்த ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
    
ஒரு ரூபாயைஅர்ச்சகரின் தட்டில் போட்டுவிட்டு விபூதி வாங்கி இட்டுக்கொண்டு வெளியேவர ஒரே ரகளையாக இருந்தது. என்னவென்று விசாரித்தான். நடுத்தரவயதுடைய அந்த மனிதர் சொன்னார். ‘இங்கதான் தம்பி புதுச் செருப்பை விட்டுட்டு கோவிலுக்குள்ளே போனேன். திரும்பிவந்தா செருப்பைக் காணோம்.’  

   ‘இன்னிக்கு மட்டுமில்ல தம்பி தினமும் இதேமாதிரி நிறைய செருப்பு திருடு போவுது கோவில் நிர்வாகம் கண்டுக்கிறதே இல்ல’. அவர் சொல்லிக்கொண்டே போக ரமெஷுக்குள் ஒர் எண்ணம் தோன்றியது.விநாயகா எனக்குவேலை கிடைத்துவிட்டது.நன்றி விநாயகா! நன்றி! அங்கிருந்து புறப்பட்டான்.
     
        மறுநாள்காலை. இங்கே காலணிகளை விட்டுச் செல்லவும் கட்டணம் ரூ 1.00 என்ற போர்டுடன் பிள்ளையார் கோவில் வாசலில் பிசியாக இருந்தான் ரமேஷ்.

டிஸ்கி 1 கதை நல்லா இல்லேன்னாலும் படத்துக்காவது ஒரு வாட்டி படிப்பீங்க இல்லயா? அதுக்குத்தான்  ஜோதிகாவும் சரண்யாவும்.
டிஸ்கி 2 புடிச்சிருந்தாலும் இல்லேன்னாலும் உங்க கமெண்டையும் ஆலோசனைகளையும் கண்டிப்பா சொல்லுங்க

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2