Posts

Showing posts from March, 2011

ஹை! ஹைக்கூ!

Image
குறிஞ்சி மலர் ரசக்கலி மசக்கலி   காக்ராச்சோளி என பூத்து குலுங்குமிடத்தில் அரிதாய் ஒரு தாவணி. வெள்ளைகாரிகள் கூட்டத்தில் மனதை கொள்ளை அடித்தவள் குங்கும பொட்டு தேவதை இடிந்து விழுந்த இல்லம் கைதட்டி ரசித்தன குழந்தைகள் கடற்கரை மணல் வீடு   கருப்புச் சேலையில்   சிவப்பு பொட்டுக்கள்   நட்சத்திரங்கள்   வியர்த்து வழிந்தன   புற்கள்   காலைப் பனி இரவுப்போதில் தூரத்தே கேட்கும் இசை தாலாட்டு   டிஸ்கி: இதெல்லாம் ஹைக்கூவான்னு நீங்க கேட்பது காதுல விழுது ஆனா வேற வழியே இல்ல தளத்துக்கு வந்துட்டீங்க படிச்சுட்டு போங்க ப்ளீஸ்!

வேலைக்கிடைச்சாச்சு!

Image
வேலைக் கிடைச்சாச்சு!      ரமேஷ் அந்த தனியார் அலுவலகத்திலிருந்து சோர்வுடன் வெளியே வந்தான்.கடைசியாக இந்த இந்த இண்டர்வியுவை மிக்க நம்பிக்கையுடன் ‘அட்டெண்ட்’ செய்தும் பிரயோசனம் இல்லை. வேலை வேறு எவனுக்கோ சிபாரிசு மூலம் கிடைத்து விட்டது. ‘சாரி மிஸ்டர் ரமேஷ் உங்களை இழப்பதில் வருத்தமடைகிறோம் ஆனால்.... என்று நேர்முகத் தேர்வு நடத்துபவன் சொன்னது காதில் தேளாய் கொட்டியது.      இந்த இண்டர்வியு வெறும் கண்துடைப்புக்குதானாம். இந்தவேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் எப்பொழுதோ சிபாரிசினால் வேறு ஒருவனுக்குச் சென்று விட்டதாம். வெறுப்புடன் வெளியே வந்தான். ‘ச்சே நாடு எவ்வளவு மோசமாகி விட்டது.தகுதி இருந்தும் தக்க சிபாரிசு இல்லாததால்வேலை இல்லாமல் போய் விட்டது.        வயதோ நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. எத்தனை நாளைக்குத்தான் பெற்றோர்களுக்கு பாரமாய் இருப்பது.அவனுள் இயலாமையும் ஆத்திரமும் கரைபுரண்டு அழுகையாய் வந்தது. சட்டென கண்ணைத்துடைத்துக்கொண்டு சாலையில் நடந்தான். வழியில் பிள்ளையார் கோயில் தென்பட கூட்டம் அதிகமாக இருந்தது. விநாயகா உனக்க...

நைட்டி உலா அவசியமா?

Image
இரவில் படுக்கைஅறையில் அணிந்துகொள்ள தயாரானதுதான் ‘நைட்டி’எனப்படும் நைட்டிரஸ் என்பது எனது தாழ்மையான கருத்து. புடவையோடு எக்கசக்க உள்ளாடைகள் அணிந்து பகல் முழுதும் அல்லல் படும் பெண்கள் இரவில் ரிலாக்ஸாக ‘நைட்டி’ அணிவதில் தவறில்லை. ஆனால்..        இன்றோ பிறக்கும் குழந்தைகளிருந்து தள்ளாத மூதாட்டிவரை இந்த ‘நைட்டி’ அணிந்து உலாவருகையில் ‘உவ்வே’ என் குமட்டல்தான் வருகிறது.முதலில் ‘நைட்டி’ போன்ற உடைகளை நகரங்களில் மட்டும் அதுவும் ராப்பொழுதில் மட்டும் காணமுடியும்.ஆனால் இன்றோ அது தேசிய உடை போல தெருவெங்கும் உலா வரத்தொடங்கிவிட்டதுதான் காலத்தின் கொடுமை.        உடல் பருத்த பெண்மணிகள் தமக்கு சற்றும் பொருத்தமில்லா இந்த ஆடையை அணிந்துகொண்டு தெருவில் நடமாடுவதும் காய்கறிவண்டிகாரனிடம் பேரம் பேசிக்கொண்டும் பிள்ளைகளை பள்ளி வேனில் ஏற்றிக்கொண்டும் உலாவரும் காட்சிகள் கொடுமையிலும் கொடுமை.      இன்னும் சிலர் உள்பாவாடை வெளியே தெரிய ஆங்காங்கே கிழிந்து கந்தலான இதை சிறிதும் கூச்சமில்லாமல் அணிந்து நடமாடுவதை என்னவென்று சொல்வது. கடை ,வீதி, கோயில், வீ...

இன்று மஹா சிவராத்திரி

Image
மகா சிவராத்திரி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ( சிவராத்திரி இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)   மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்".     1 சிவராத்திரி விரதம் வகைகள் 2 நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்   சிவராத்திரி விரதம் வகைகள் சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். மகாசிவராத்திரி யோகசிவராத்திரி நித்திய சிவராத்திரி பட்ஷிய சிவராத்திரி மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக...

150 ரூபாய் நாணயம்... on Twitpic

150 ரூபாய் நாணயம்... on Twitpic

+2 tips

Image
#தேர்வுக்கு முதல் நாள் நள்ளிரவு வரை படிக்க வேண்டாம் அதிகாலையில் எழுந்து படியுங்கள். #நன்கு தெரிந்த பாடங்களை படித்த பின் எழுதி பாருங்கள். இது வரை படிக்காத பாடங்களை புதிதாக படித்து நேரத்தை வீணாக்கவேண்டாம். #தேர்வு காலங்களில் உங்கள் உடல் நிலையில் கவனம் வையுங்கள். #குறைந்தது அரைமணி நேரத்திற்குமுன்பு தேர்வு மையத்திற்கு சென்று விடுங்கள். #உங்களுக்கு நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். #தேர்வு மையத்தில் பதட்டம் அடைய வேண்டாம் .எங்கும் கவனத்தை சிதற விடாதீர்கள் #தேர்வு கால்ங்களில் தெளிவாக திட்டமிட்டு படியுங்கள் உங்கள் ஆசிரியர் பெற்றோர் கூறிய அறிவுறைகளை மனதில் நினைத்து நன்றாக முயற்சி செய்து படியுங்கள்.எழுதுங்கள். #எல்லாம் எழுதி முடித்த பின் பிழை உள்ளதா என நிதானமாக பாருங்கள்.கேள்வி எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என சரி பாருங்கள். #தேர்வுக்கு புதிய பேனா பயன்படுத்துவதை தவிர்த்து ஏற்கனவே பயன்படுத்தியபேனாவை பயன் படுத்தினால் கையெழுத்து சிறப்பாக அமையும். #வெற்றி பெற வாழ்த்துக்கள்!                நன்றி : தினமலர். +...