Posts

கபீஷ் படக்கதை- குழந்தைகள் தின ஸ்பெஷல்.

Image
  989- 90 களில் எனது பொழுது போக்கு கிரிக்கெட் விளையாடுவது. அதை விட்டால் புத்தகம் படிப்பது, கோகுலம், ராணிகாமிக்ஸ், அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, என ஏகப்பட்ட சிறுவர் இதழ்கள் அப்போது வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் என்னை மிகவும் கவர்ந்தது. வாண்டுமாமா ஆசிரியராக இருந்து வழி நடத்திய பூந்தளிர் சிறுவர் இதழ்தான். இதில்தான் படக்கதைகள் அதிகம் வரும். சிறுவர்களை ஈர்க்கும். இந்த உத்தியை அறிந்து நிறைய படக்கதைகள், அறிவுப்பூர்வமான தகவல்கள் என பூந்தளிர் மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. அதில் கபீஷ் படக்கதை என்னை மிகவும் கவர்ந்திழுத்து வாசிக்க வைத்த ஒன்று. பூந்தளிர் வீட்டுக்கு வந்தவுடனே யார் முதலில் படிப்பது என்று எனக்கும் என் தங்கைகளுக்கும் போட்டியே நடக்கும். கடைசியில் நானே வென்று ஒரு அரை மணி நேரத்தில் வாசித்துவிட்டு அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். ஆனால் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருப்பேன் அடுத்த இதழ் வரும் வரை. பூந்தளிர் இதழ் 90 களில் இருந்து வாங்கினாலும் பல இதழ்கள் சேமிக்கவில்லை. மீதமிருந்த இதழ்களில் கபீஷ் படக்கதைகளை தொகுத்து சேமித்து வைத்திருந்தேன். அந்த புத்தகம் இன்று எ...

அரச மரத்தின் அவசர புத்தி.

Image
    அரச மரத்தின் அவசர புத்தி.    நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு திருப்பாதிரி புலியூர் என்ற கிராமத்தின் ஏரிக்கரையையின் மீது ஓர் அரசமரம் ஓங்கி வளர்ந்து இருந்தது. அதன் கிளைகள் நன்கு அடர்ந்து விரிந்து கரையோரம் நிழலாக விழுந்து சாலையில் செல்பவர்களுக்கு இளைப்பாறும் இடமாகவும் இருந்தது.   அந்த அரச மரத்தின் அடியில் விநாயகர் சிலை ஒன்று இருந்தது. ஏரிக்கரைபிள்ளையார் என்று அப்பிள்ளையாரை மக்கள் அழைத்தனர். ஊர்மக்கள் அந்த வழியாக செல்லும் போது அந்த பிள்ளையாரை வணங்கி வழிபட்டு செல்வது வழக்கம்.   குறிப்பாக முக்கியமாக ஏதாவது காரியத்தில் வெற்றிபெற வேண்டுமெனில் அந்த பிள்ளையாருக்கு தோப்புகரணம் போட்டு வணங்கிவிட்டுச்செல்வர். அப்படி வணங்கிவிட்டு சென்றால்அவர்கள் செல்லும் காரியம் ஜெயமாகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.   இப்படி அந்த மக்கள் பிள்ளையாரை வணங்கிச்செல்வதை   அங்கு வளர்ந்திருந்த அரசமரம் தன்னைத்தான்   வணங்கிவிட்டுச் செல்கிறார்கள் என்று தவறாக நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டது. நான் தான் இவ்வூரிலேயே பெரியவன். எனவே   இவ்வூர் மக்கள் எல்லோரும் என்னை தினமும்...

கனவு மெய்ப்பட வைத்த கவுர்!

Image
    கனவு மெய்ப்பட வைத்த கவுர்!   1973 முதலே பெண்களுக்கான கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் நம் இந்திய கிரிக்கெட் அணி கவனம் பெறத்தக்க வகையில் விளையாடி வருகின்றது. இரண்டு முறை உலக கோப்பையை நெருங்கி நெருக்கடிகளில் சிக்கி கை தவறவிட்டிருக்கிறது இந்திய அணி.   இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உலக அளவில் பெரும் கவனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். கிட்டத்தட்ட   இருபது ஆண்டுகள் விளையாடிய அவர் பல சாதனைகளை   செய்திருந்தாலும் உலக்கோப்பையை வெல்ல முடியவில்லை! உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அவர் கனவு. கடந்த 2022ல் அதே நோக்குடன் தான் அவர் உலக கோப்பையில் களமிறங்கினார். ஆனாலும் லீக் சுற்றோடு திரும்ப வேண்டிய சூழல்.   அப்போது இப்போதைய கேப்டன் கவுர், மற்றும் மந்தனா. இன்று நாம் தோற்றிருக்கலாம். ஆனால் அடுத்த உலக கோப்பை நமக்குத்தான். அதை வென்று உங்கள் கையில் கொடுப்போம் என்று சொல்லி ஆறுதல் தந்திருக்கின்றனர். அன்று   அவர்கள் சொன்னது இன்று நிஜமாகி இருக்கிறது.   இந்த உலக கோப்பைய...

சாளக்கிரம கற்களின் தாய்- கண்டகி நதி

Image
 கண்டகி நதி புராணம் "   சாளக்கிராம கற்களின் தாய்*  தாசி குலப் பெண்ணான #கண்டகி என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. அது என்னவென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான். உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது. அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால்...

தேன்சிட்டு மலர்ந்த கதை!

Image
    தேன்சிட்டு மலர்ந்த கதை !   வருடம் 1993. அப்போது ப்ளஸ் டூ முடித்து இருந்தேன் . சிறுவனிலிருந்து இளைஞனாக மாறும் காலம் . அதுவரை சிறுவர்களுக்கான இளந்தளிர் என்ற கையெழுத்து பத்திரிக்கை ஒன்றை நடத்திவந்தேன் . இளைஞனாக மாறும் காலம் வந்ததால் இளைஞர்களுக்கான கையெழுத்து பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது .    தோழன் ஜெயேந்திர குமாருடன் ஆலோசித்தேன் . ஆரம்பிக்கலாம் . ஆனா தொடர்ந்து நடத்த முடியுமா ? ன்னு கேட்டான் . ஏனெனில் நான் மாதமிருமுறை இதழாக நடத்த வேண்டுமென்றேன் . அது முடியுமா ? என்றான் . முடியும் என்று சொன்னேன் . அப்போது நான் பி . காம் கரஸ்பாண்டெட் கோர்ஸ் சேர்ந்திருந்தேன் . அதனால் வீட்டில் வெட்டியாக நிறைய பொழுதை செலவழித்தேன் . அதனால் கொஞ்சம் உபயோகமாக பொழுதை கழிக்க உத்தேசித்து இதழ் தயாரிக்க முடிவெடுத்தேன் .   16 பக்கங்கள் . முன்று மூன்று பக்கங்களில் இரண்டு சிறுகதை . ஒரு இரண்டு பக்கத்திற்கு கவிதை . இரண்டு பக்கத்திற்கு ஜோக்ஸ் ,   கடைசிப்பக்கம் என்று ஒரு பக்கம் சிறு கட்டுரை . ஒரு மூன்று பக்கத்திற்குத் தொடர்கதை என்று முடிவு செய்தோம் . மீதமுள்ள பக்க...

தேன்சிட்டு தீபாவளி மலர் 2025

  தேன்சிட்டு தீபாவளிமலர் 2025    இந்த லிங்கை சொடுக்கி தேன்சிட்டு தீபாவளி மலர் 2025 ஐ வாசித்து மகிழவும் 41 சிறுகதைகள், 20 கட்டுரைகள், 35 கவிதைகள், ஏராளமான ஜோக்ஸ், சிறுவர் பகுதி என 360 பக்க மின் மலர்.   வாசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!   வருகைக்கும் வாசிப்புக்கும் என் அன்பு நன்றிகள்!

தேன்சிட்டு தீபாவளி மலர்- 2025 பக்கம் பக்கமாக புரட்டி வாசிக்கலாம்