அன்புடை நெஞ்சம்! குமுதம் கொன்றை இலக்கியச் சிறுகதைப் போட்டியில் பத்தாயிரம் ரூபாய் பரிசுபெற்ற என்னுடைய சிறுகதை
அன்புடை நெஞ்சம் ! புலர்ந்தும் புலராத அந்த அதிகாலைப்பொழுதில் ஏதோ சப்தம் கேட்டு கண்விழித்தாள் கமலி . வாசலில் குவாலிஸ் கார் வந்து நின்றிருந்தது . முகுந்தன் அப்போதே குளித்து உடை தரித்து தயாராக இருந்தான் . வெள்ளைக்கோட்டும் ஸ்டெத்தாஸ் கோப்பும் எடுத்து மாட்டியவாறு கிளம்பிய அவன் கமலி விழித்ததை பார்த்துவிட்டு , “ ஓ ! முழிச்சிக்கிட்டியா ! பை கமலி ! ஆஸ்பிடலுக்கு அவசரமா கிளம்பிட்டு இருக்கேன் .. அப்புறம் போனில் பேசறேன் ” என்று கிளம்பிவிட்டான் . இது எப்பொழுதும் நடப்பதுதான் ! ஏதாவது அவசரகேஸ் சமயம் அவளை எழுப்பாமல் நள்ளிரவில் கூட அவன் சென்றதுண்டுதான் . இருவரிடமும் தனித்தனி சாவிகள் உண்டு . எனவே அவன் வெளியே பூட்டிச்சென்றுவிட்டாலும் இவள் விழித்ததும் இவள் அன்றாடப்பணிகளை செய்வதில் எந்த சங்கடமும் இல்லை . ஆனால் இப்போது அவளுக்கு என்னமோ செய்தது . “ என்னமோ ஏதோ ? நம்மிடம் சொல்லாமல் செல்கிறானே ? ஊரெல்லாம் கொரானா பீதியாக இருக்கிறதே ! ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் அவசரமாக செல்கிறா...