பாச்சாஸ் ஃபன் கிளப்- பகுதி 2
பாச்சாஸ் ஃபன் கிளப் - பகுதி 2 தன் வீட்டு சோபாவில் ஹாயாக அமர்ந்து நியுஸ் சேனல் பார்த்துக் கொண்டிருந்தார் பாச்சா மாமா . கொரானா பாதிப்பினால் ஊரடங்கு அமலில் உள்ளதையும் மீறி சென்ற வாகன்ங்களை போலிஸார் பறிமுதல் செய்ததையும் பார்த்தவர் பொங்கி எழுந்தார் . பொறுப்பத்த போலிஸுங்க ! இப்படி வண்டியை பிடுங்கி அதுலே இருக்கிற ஒரு பார்ட்ஸ்கூட விடாம பிரிச்சு வித்துடுவானுங்க ! என்று சொல்லவும் இதைக் கேட்டுக்கொண்டே சமையல்கட்டிலிருந்து வந்த சச்சு மாமி ஓல்ட் மேன் என்ன சொன்னீங்க ? யூ ஹேவ் ஏ சென்ஸ் ? கர்ஃப்யூ போட்டிருக்கு வீட்டுல இருங்கன்னு சொன்னா கேட்காம இவனுங்க ஊர் சுத்துவானுங்க அவங்க பைக்கை போலீஸ் மேன்ஸ் பிடுங்க கூடாதா ? தே ஆர் டூயிங் அவர் ட்யூட்டி ? நீங்க எதுக்கு பொங்கறீங்க ? என்று போலீஸுக்கு ஆதரவாக பரிந்து கட்டினார் . சென்ஸ் இருந்தா “ நான்சென்ஸ் “ உன்னை கட்டியிருப்பேனா ? என்று மனதுக்கு முணுமுணுத்தார் பாச்சா . அங்க என்ன முணுமுணுப்பு ? உரக்க பேசறது ? சச்சு மாமி கு...