”பாச்சா”ஸ் ஃபன் க்ளப்!
” பாச்சா ” ஸ் ஃபன் க்ளப் ! நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு . ” பாச்சா ” மாமா ! என்று எல்லோராலும் அழைக்கப்படும் பார்த்தசாரதிக்கு வயது 60 ஐ கடந்துவிட்டது . அவரது சகதர்மிணி ‘ சச்சு ” என்ற சரஸ்வதியிடம் வைத்த பயம் இன்னும் விலகவில்லை . கொரானா ஊரடங்கில் இப்போது ஊர் அடங்கியிருக்கிறது என்றால் இவர் ‘ சச்சுவின் கழுத்தில் தாலி கட்டியதுமே அடங்கிப்போனார் . கொரானாப் பொழுதுகளில் ஒரு நாள் கிழமை தெரியாத மத்தியான வேளையில் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்த பாச்சாவை எழுப்பினார் சச்சு மாமி ! “ ஏன்னா ! சித்தே எழுந்து மாடியிலே வடாம் காயப்போட்டிருக்கேன் ! போய் பார்த்துக்கங்க ! கையிலே மொபைல் எடுத்துட்டு போங்கோ ! உள் கதவை தாழ்ப்போட்டுக்கங்க ! நான் எங்க லேடிஸ் கிளப் செக்ரட்டரி வீடுவரை போய் வரனும் .” என்றாள் . மதிய தூக்கம் கெட்டுப்போன கண் எரிச்சலில் பாச்சா மாமா சற்று உச்சஸ்தாயியில் ‘ இப்போ எதுக்கு செகரெட்டரி வீ...