உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 61
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 61 அன்பார்ந்த வலைப்பூ அன்பர்களே! வணக்கம்! சென்ற வாரம் நமது பகுதியை நன்கு படித்து பின்னூட்டங்களில் உங்களின் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி! இந்த வாரம் நாம் பார்க்க படிக்க இருப்பது சாரியை. சாரியை என்பதை பகுபத உறுப்பிலக்கணம் எழுதும் சமயம் படித்திருப்போம் எழுதியிருப்போம். அதை இன்று விரிவாக பார்ப்போம். சாரியை என்றால் என்ன? தனியாக வந்தால் பொருள் பெறாது. பொருள் பெறுவதற்காக மற்றவற்றோடு சார்ந்து வருவதால் சாரியை என்று பெயர். தனிச்சொல்லையோ சொற்றொடரையோ நாக்கு கூறுமிடத்து எங்கு கடினப்படுகிறதோ, துன்புறுகிறதோ அவ்விடங்களில் எளிமைக்காக மென்மைக்காக வேறு ஓர் உறுப்பினை சேர்த்துக் கொள்ளும். அந்த உறுப்பிற்கு பெயர் சாரியை என்று பெயர். வேறு வேறு சொற்கள் தம்மோடு சார்தற்பொருட்டு இரண்டு சொற்களின் இடையே இயைந்து நிற்கும். இஃது இன்னொன்றின் மீது சார்ந்து வரும். அப்போதுதான் இந்த சாரியைக்கு பொருள் உண்டு. தனித்து வந்தால் பொருள் இல்லை. சாரியைகள் பின் வருவன: இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு...