Posts

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 61

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 61 அன்பார்ந்த வலைப்பூ அன்பர்களே! வணக்கம்! சென்ற வாரம் நமது பகுதியை நன்கு படித்து பின்னூட்டங்களில் உங்களின் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி! இந்த வாரம் நாம் பார்க்க படிக்க இருப்பது சாரியை.    சாரியை என்பதை பகுபத உறுப்பிலக்கணம் எழுதும் சமயம் படித்திருப்போம் எழுதியிருப்போம். அதை இன்று விரிவாக பார்ப்போம். சாரியை என்றால் என்ன?    தனியாக வந்தால் பொருள் பெறாது. பொருள் பெறுவதற்காக மற்றவற்றோடு சார்ந்து வருவதால் சாரியை என்று பெயர். தனிச்சொல்லையோ சொற்றொடரையோ நாக்கு கூறுமிடத்து எங்கு கடினப்படுகிறதோ, துன்புறுகிறதோ அவ்விடங்களில் எளிமைக்காக மென்மைக்காக வேறு ஓர் உறுப்பினை சேர்த்துக் கொள்ளும். அந்த உறுப்பிற்கு பெயர் சாரியை என்று பெயர்.    வேறு வேறு சொற்கள் தம்மோடு சார்தற்பொருட்டு இரண்டு சொற்களின் இடையே இயைந்து நிற்கும். இஃது இன்னொன்றின் மீது சார்ந்து வரும். அப்போதுதான் இந்த சாரியைக்கு பொருள் உண்டு. தனித்து வந்தால் பொருள் இல்லை. சாரியைகள் பின் வருவன:    இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு...

வைரத்திருட்டு! பாப்பா மலர்!

Image
வைரத்திருட்டு!  பாப்பா மலர்!    காலை வேளை! இன்ஸ்பெக்டர் பரசுராம் தமது உடுப்பை மாட்டிக்கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்பத் தயார் ஆன போது போன் மணி அடித்தது.  “வீட்டில கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்களே!” என்றபடி அவரது மனைவி நிர்மலா ஹார்லிக்ஸ் டம்ளரோடு வந்து நின்றாள்.    “போலீஸ்காரனுக்கு எப்பவும் டியுட்டிதான்!” என்று சிரித்தபடி கூறிய பரசுராம் ரீசிவரை எடுத்து காதில் வைத்தார். “அடடே! அப்படியா! ஒண்ணும் கவலைப்படாதீங்க! கண்டுபிடிச்சிடலாம்! நான் உடனே வரேன்!” என்று சொல்லி போனை வைத்தார்.     அப்போதுதான் உள்ளே நுழைந்த அவரது மகன் வளவன்,  “என்னப்பா! எதைக் காணோம்! கண்டுபிடிச்சிடலாம்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க!” என்றான்      “அதெல்லாம் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க முடியாது ஆபிஸ் சம்பந்தப்பட்ட விஷயம்!”     “அபிஷியல் கேஸ்னா ஸ்டேஷனுக்குத்தானே போன் வரும்! உங்ககிட்ட போன் பண்ணி இருக்காங்களே!” வளவன் மடக்கினான்.     “உன் கிட்ட சொல்லாம இருக்க முடியாது! எப்படியும் மடக்கி கேட்டுடுவே!” என்றார் பரசுராம...

என் கேள்விக்கு என்ன பதில்?

Image
என் கேள்விக்கு என்ன பதில்? வலைப்பூ அன்பர்களிடம் கொஞ்ச நாள் முன்பு வரை ஒரு தொற்றுவியாதி சுற்றிசுற்றி வந்தது. ஆனால் அந்த வியாதி ஒருவரையும் தீங்கு விளைவிக்கவில்லை! ஆனாலும் என்ன காரணமோ அந்த வியாதி திடீரென்று மறந்து மறைந்து போய்விட்டது.     பதிவர்கள் வலைப்பூவை  மறந்து பேஸ்புக், டிவிட்டர் என்று சென்றுவிட்டதால் அந்த வியாதி கிட்டத்தட்ட வலைப்பூவை விட்டே ஒழிக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும் என்ற நிலையில் அமெரிக்க வலைப்பதிவர் திரு மதுரைத் தமிழனுக்கு அந்த நோய் தொற்றிக்கொண்டது. தொற்று வியாதி என்பதால் அந்த வியாதி இப்போது வலைப்பூ எங்கும் தொடர்ந்து வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.    மதுரைத்தமிழனின் வலைப்பூவை வாசித்த சொக்கன் சுப்ரமணியம் அவர்களுக்கு பிடித்த இந்த தொற்று அவரைமட்டுமின்றி அவரது நண்பர்கள் வட்டத்தில் பத்து பேரை தொற்றிக்கொண்டது. அதில் நானும் ஒருவன். என்னை பிடித்த இந்த வியாதி இன்னும் சிலரையும் தொற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்த வியாதியே ஒரு மருந்து. இது தொற்றிக் கொண்டால் வலைப்பூக்கள் இன்னும் சிறப்பாக பூக்கும். இனி வியாதிக்குள் நுழைவோமா? மதுரைத்தமிழன் தொடங்கி வைத்த...

நாச்சியார் கோவில்! கல் கருடன்!

Image
   நாச்சியார் கோவில்! கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர்.    திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள். ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.    கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீவாசுதேவனாக திருமணக் கோலத்தில் ஸ்ரீ வஞ்சுளவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பெருமாளைவிட தாயார் சற்று முன்னே எழுந்தருளி இருப்பதை காணலாம்.இங்கு சகல மரியாதைகளும் முதலில் நாச்சியாருக்குத்தான். பெருமாளும் நாச்சியாரும் ஒரே சன்னதியில் எழுந்தருளி இருப்பது மற்றொரு தனிச்சிறப்பு ஆகும்.  ...