Posts

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 1

Image
1.அந்த பேப்பர் கடைக்காரர் எதுக்காக உன்னை அடிச்சாரு? புளங் “காகிதம்” ஒரு குயர் கொடுங்கன்னு கேட்டேன்!                                  பொ.பிரபா. 2.தலைவரே சொன்னா கேளுங்க! இண்லேண்டுங்கிறது லெட்டர் எழுதற காகிதம் தான் அதைப் போய் வளைச்சி போடனும்னு சொல்றீங்களே?                             நா. செந்தமிழ் சீனிவாசன். 3.குடிச்சிட்டா அவர் குழந்தை மாதிரி ஆயிடிறாரா? எப்படி? ஊறுகாய்க்கு பதிலா மண்ணை அள்ளி திங்கறார்!                                      பி. மணி. 4.இந்த சி.பி.ஐ ரொம்ப மோசம்!   என்ன விசயம்? தலைவர...

சுயம்பாகம் சீனிவாச ஐயங்கார்!

Image
சுயம்பாகம் சீனிவாச ஐயங்கார்! இந்த பதிவை போன வாரமே எழுதி இருக்க வேண்டும்! வேலை நெருக்கடிகளால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் சீனிவாச ஐயங்கார்  இறந்து போனார். அவருடைய இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு வந்து அதை பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன். ஆனால் உடனடியாக எழுத முடிய வில்லை! கவிதை மாதிரி எழுதலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால் செயல்படுத்தவில்லை!    சீனிவாச ஐயங்கார் எனது மூத்த நண்பர் என்று சொல்லி இருந்தேன். அவருக்கு வயது இறக்கும் போது 83. எனக்கு இப்போதுதான் 38 ஆகிறது. என்னவொரு ஆச்சர்யம் பாருங்கள் 38ஐ திருப்பினால் 83 ஆகிறது. நான் என் தாய் வயிற்றில் இருக்கும் போது  சீமந்தம் விருந்துக்கு சமைக்க என் தாத்தாவின் சிபாரிசின் பேரில் வந்தவர் இந்த ஐயங்கார்.    சீமந்தம் முடிந்து நான் பிறந்த பத்து நாட்களுக்குள் எங்கள் வீட்டில் குடிவந்துவிட்டார். எங்களை பார்க்க என் அப்பா ஆசானபூதூர் வந்த சமயத்தில் இவர் வந்து எங்கள் வீட்டு திண்ணையில் குடியேறிவிட்டார். கூடவே இரு பசு மாடுகள். என் அப்பா திரும்பி வந்தால் ஐயங்கார் சாவகாசமாக திண்ணையிலேயே சமைத்துக் கொண்டு இருந்தார...

இளையராஜாவை அதிர வைத்த அண்ணன் தம்பிகள்!

Image
சினிமா உலகில் அண்ணன் தம்பிகளைக்கூட அடையாளம் காண முடியாமல் அசடு வழிந்த சம்பவம் உண்டு என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். பிரபல வார இதழ் ஒன்றில் கேள்வி பதில் பகுதியில் பதிலளித்துள்ள இளையராஜாவிடம் வாசகர் ஒருவர் நீங்கள் அசடு வழிந்த சம்பவங்கள் ஏதாவது உண்டா என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள இளையராஜா, சினிமாவில் இரண்டு பெரிய புள்ளிகள். இருவருமே பிரபலமானவர்கள். அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது பெரிய இயக்குநராக உள்ள அவர் முதல்முதலில் கன்னடப் படம் இயக்கினார். அதற்கு நான்தான் இசைஅமைத்தேன். பின்னர் பெரிய நிறுவனம் எடுத்த சிறிய படத்தில் அந்த புதுப்பையனுக்கு வாய்ப்பு தர உள்ளதாக தயாரிப்பாளர் கூறினார். கதையை கேட்டு விட்டு சரி என்று கூறிவிட்டேன். அதன்பின்னர் ஒரு படத்தின் பூஜைக்காக ஒரு பெரிய பைனான்சியர் வந்திருந்தார். அவரிடம் அந்த புதிய இயக்குநரின் பெயரைச் சொல்லி வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி சிபாரிசு செய்தேன். அதற்கு அவர், நீங்கள் வேண்டுமானால் என்னிடம் அனுப்புங்கள் என்று கூறினாரே தவிர அவன் என் தம்பிதானே? என்று என்னிடம் கூறவே இல்லை. அதேபோல் அந்த இயக்குநரிடம...

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: மங்கள வார்த்தை திருநாள்

Image
அருள்மிகப்பெற்றவரே வாழ்க! கடவுள் உம்முடனே இருப்பார். உன் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசிர்பெற்றவரே மங்கள வார்த்தை திருநாள்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்தவ முறைமைப்படி, கடவுள் மனித உருவில் மண்ணில் அவதரித்த நாளையே கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகிறார்கள். தற்போது, வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டார், குடில், கிறிஸ்துமஸ் மரம் போன்றவற்றால் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்து வருகிறார்கள். பைபிளில் கூறப்பட்டிருக்கும் வரலாற்று உண்மைகள் இருந்தாலும், குடில், மரம், ஸ்டார் போன்றவை இயேசு பிறப்பின் அடையாளச்சின்னங்களாக இன்றளவும் திகழ்கின்றன.இயேசு யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமில் பிறந்தார். கன்னி மரியாளுக்கு கடவுளின் தூய ஆவியானவர் தோன்றி " அருள் மிகப் பெற்றவரே வாழ்க! கடவுள் உம்முடனே இருப்பார். உன் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசிர் பெற்றதே.' என்று வாழ்த்தினார். தூய ஆவியானவரின் இந்த வாழ்த்துசெய்தி தான் "மங்கள வார்த்தை திருநாள்' என மார்ச் 25ல் கொண்டாடப்படுகிறது. அந்த நாளிலிருந்து 9 மாதங்கள் கழித்து, டிசம்பர் 25ல் இயேசு பிறந்தார். இயேசு பிறந...

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 21

Image
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 21 உங்கள் ப்ரிய “பிசாசு” முன்கதை: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதால் அருகில் உள்ள தர்காவில் சேர்க்கிறார்கள். அங்கு சென்றும் அவளை பிடித்துள்ள பேய் விலகாமல் பழி வாங்குகிறது. முகேஷின் நண்பன் ரவியை கண்டுபிடித்து தரும் அவனது சித்தப்பா சுவாமிஜி அவன் கொலை செய்திருப்பதாக கூறுகிறார். அவனை வைத்து ஏதோ பூஜைகள் செய்ய ரவியின் உடம்பில் உள்ள ஆவி பேசுகிறது. இனி முந்தைய பகுதிகள் படிக்க லிங்க்:       http://thalirssb.blogspot.in/2012/06/blog-post_3637.html  பகுதி  1 http://thalirssb.blogspot.in/2012/07/2.html  பகுதி  2 http://thalirssb.blogspot.in/2012/08/3.html  பகுதி  3 http://thalirssb.blogspot.in/2012/08/4.html   பகுதி  4   http://thalirssb.blogspot.in/2012/08/5.html   பகுதி  5 http://thalirssb.blogspot.in/2012/08/6.html     பகுதி  6 http://thalirssb.blogspot.in/2012/09/7.html     பகுதி  7 http://th...

தந்தை பெரியார் அரிய புகைப்படங்கள்!

Image
தந்தை பெரியாரின் நினைவு தினத்தில் அவரது அரிய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்வதில் மகிழ்கிறேன்! நன்றி கூகுள் இமேஜ். 

எம்.ஜி. ஆர் போட்டோ ஆல்பம்!

Image
தமிழ் திரை உலகிலும் அரசியல் வரலாற்றிலும் அசைக்க முடியாத மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அவரது அரிய புகைப்படங்கள் சிலவற்றை கூகூள் இமேஜ் உதவியுடன் பகிர்வதில்  மகிழ்கிறேன்!   படங்கள் உதவி நன்றி: கூகூள் இமேஜ்.