சிரி தர்பார்! மன்னர் ஜோக்ஸ்!
புலவரே உங்கள் பாட்டில் கூர்மை இல்லை…!
மன்னா….! உங்களை புகழ்ந்து பாடி பாடி வரிகள் எல்லாம் மொக்கையாக போய்விட்டது மன்னா!
என்ன சொல்கிறீர் மந்திரியாரே…! ,மக்கள் தாங்களாகவே ஊரடங்கு செய்து கொண்டுள்ளார்களா? ஏன்?
வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த தாங்கள் நகர்வலத்துக்கு வரப்போவதாக அறிவித்தது தான் காரணம் மன்னா…!
புலவர்கள் அரசவையில் என்னைப்பற்றி புகழ்ந்து பாடவே
மாட்டேங்கிறாங்களே ஏன் அமைச்சரே..?
அரசவையில் பொய் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறீர்களே அரசே!
நம் மன்னருக்குப் பிடித்த உணவு எது சொல் பார்க்கலாம்?
குழிப் பணியாரம்..தான்..!
தலை இருக்க வால் ஆடக்கூடாதா? என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே?
உங்கள் உடலில் தலை இருக்க வேண்டுமெனில் உங்கள் வாள் ஆடக்கூடாது என்று எதிரி மிரட்டி ஓலை அனுப்பியுள்ளான் மன்னா!
புலவரே…! என் புஜபல பாரக்கிரமத்தை போற்றும் பாடலை இயற்றிவிட்டீரா?
அதற்கான நேரம் “கைவர” மாட்டேங்கிறது மன்னா!
எதிரியை பார்த்ததும் மன்னர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்!
அப்போ அது அறைக்”கேவல்”னு சொல்லு!
எதிரி எல்லைகளை விரிவுப்படுத்தப் போகிறானாம் மன்னா!
அப்படியானால் நம் எல்லையை “பதுங்குக் குழியோடு” சுருக்கிக் கொள்ளவேண்டியதான் அமைச்சரே!
அரண்மனைப் புலவர் மீது மன்னர் ஏகக் கடுப்பாக இருக்கிறாராமே! ஏன்?
தூதுப்புறாக்கள் நானூறை சமைத்து விருந்து வைத்ததை “புறா நானூறு” என்று பாடல் இயற்றிவிட்டாராம்!
எதிரியின் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்!
அப்படியானால் “விரட்டலுக்குத் தயார்!” என்று பதில் ஓலை அனுப்பிவிடலாமா மன்னா!
அனைத்தும் ரசிக்கும் விதத்தில். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteஅனைத்தும் அருமை.
ReplyDeleteசுரேஷ், அனைத்தும் சிறப்பு - சிரிப்பு.
ReplyDelete