தச்சூர்க்கூட்டுசாலை! பேக்கரி ஒன்றில் கடைக்காரரும் இளைஞரும்!
என்னப்பா..! கடையை மூடிட்டு இப்படி நடுத்தெருவுலே வியாபாரம் பண்றே?
நானாவது நடுத்தெருவுலே வியாபாரம் பண்றேன்! நீயெல்லாம்…இப்படி நக்கல் பண்ணிட்டு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கே ..!
அண்ணே கோச்சுக்காதேண்ணே! மில்க் பிஸ்கட் இருக்கா?
மாரி பிஸ்கெட் இருக்கு!
எண்ணே மில்க் கேட்டா மாரி இருக்குன்னு சொல்றே?
விரும்பினதை சாப்பிடற காலம் மாறி கிடைச்சதை சாப்பிடற காலம் வந்துருச்சுன்னு சொல்றேன்! வேணும்னா வாங்கு! இல்லே கிளம்பு
இளைஞர் முறைத்தபடி நகர்கிறார்.
பொன்னேரி மளிகை கடை ஒன்றில் கடைக்கார்ரும் பொருள் வாங்க வந்தவரும்
50 சன்ரைஸ் ஒரு சரம் கொடுங்க! சன்ரைஸ் இல்லே! ப்ரு போட்டுடலாமா?
சரி போடுங்க! ஹமாம் சோப் ஆறு! சர்ப் எக்செல் 6 போடுங்க!
சர்ப் எக்செல் இல்லே! ரின் இருக்கு போடவா?
சரி போடுங்க!பில்ஸ்பெரி ஆட்டா அரைகிலோவுல ஒரு டசன்!
பில்ஸ்பெரி இல்லே! நாகா இருக்கு போடலாமா?
சரி போடுங்க!எவ்ளோ ஆச்சு? இந்தாங்க என்று ஒரு பை நிறைய சில்லரையை கொடுக்கிறார்!யோவ் சில்லரையை யார் எண்ணறது? நோட்டா கொடு!
நோட்டு இல்லே..! சில்லரைதான் இருக்கு! நான் கேட்ட பொருளை கொடுக்காம மாத்தி கொடுத்தா நான் வாங்கிட்டேன் இல்லே அதே போல நீங்களும் நோட்டுக்கு பதில் சில்லரை வாங்கிக்க பழகுங்க!
கடைக்காரர் பேந்த பேந்த முழிக்கிறார்.
பண்டிகாவனூர் ரேசன் கடையில் ஊழியரும் ரேசன் வாங்க வந்த பெண்ணும். (கொரானா லாக்டவுன் பீரியட்டில்)
அண்ணே…! இந்த மாசம் ஆயிரம் ரூபா கொடுக்கலையா?
”ஆயிரம் போதுமா?”
போதாதுதான்..! பத்தாயிரம் கொடுத்தாக்கூட எங்க ஊட்டுக்காரன் குடிச்சே தீர்த்துடுவான்!
ரூபா எவ்ளோ கொடுத்தாலும் போதாதுன்னுதான் சொல்வே! அதான் ஃபிரியா ரேசன்பொருள் கொடுக்கறாங்க!
ஆமா! புழுத்துப்போன அரிசியும்! முளைச்சுபோன கோதுமையும் வாங்கி என்னா பண்றது?
அப்ப எடத்தை காலிப்பண்ணு!
தோடா! நா வாங்காம உட்டா நீ கொள்ளையடிக்கலாம்னு பாக்கிறியா!
ஆமா இதுல கொள்ளையடிச்சுதான் கோடீஸ்வரன் ஆகப்போறேன்! ஃபிரியா கொடுத்தா பெனாயிலைக் கூட வாங்கற பரம்பரையாச்சே..உங்க பரம்பரை வாங்கிட்டு போ..!
கவர்மெண்ட்டு வேலை இப்படி பேச்ச்சொல்லுது! முகத்தை நொடித்தபடி வாங்கிச்செல்கிறார் பெண்மணி.
பெரியபாளையம் கூட்டுச்சாலையில் டாஸ்மாக்கில் இரு குடிமகன்கள்
என்ன மாப்ளே… ஒரே சோகமா இருக்கே..?
பாரெல்லாம் மூடிட்டாங்க! “கட்டிங்” கிடைக்க மாட்டேங்குதே மச்சான்!
சொல்றேன்னு கோச்சுக்காதே! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி “கட்டிங்” கேட்டு பார் வாசல்ல நின்னுகிட்டிருப்பே..குவார்ட்டர் வாங்கி அடி மாப்ளே..!
“அதுக்கெல்லாம் வசதியில்லே மாப்ளே…! ஒரு கட்டிங்” கொடேன்..!
“உன்னையெல்லாம் “கொரானா” கொண்டுபோவ மாட்டேங்குதே… அப்படி துட்டு சேர்த்து என்னடா பண்ணப்போறே?
ஏம் பேசமாட்டே நீ கவர்மெண்ட் ஸ்டாஃபு! நான் கூலித்தொழிலாளி…
அட அட… அப்படியே நம்ம பிரதமர் மாதிரியே பேசறியே … சரி வந்து தொலை உன்னை விசாரிச்ச பாவத்துக்கு ஒரு கட்டிங்க் கொடுத்து அழறேன்..!
இருவரும் வண்டியில் கிளம்புகின்றனர்.
காது கொஞ்சம் நீளம் - ரசித்தேன் - மதுபிரியர்களைத் தவிர மற்றதை!
ReplyDelete