Posts

Showing posts from March, 2021

சிரி தர்பார்! மன்னர் ஜோக்ஸ்!

Image
  புலவரே உங்கள் பாட்டில் கூர்மை இல்லை…! மன்னா….! உங்களை புகழ்ந்து பாடி பாடி வரிகள் எல்லாம் மொக்கையாக போய்விட்டது மன்னா!    என்ன சொல்கிறீர் மந்திரியாரே…! ,மக்கள் தாங்களாகவே ஊரடங்கு செய்து கொண்டுள்ளார்களா? ஏன்?   வெளிநாட்டில் இருந்து   திரும்பி வந்த தாங்கள் நகர்வலத்துக்கு வரப்போவதாக அறிவித்தது தான் காரணம் மன்னா…! புலவர்கள் அரசவையில் என்னைப்பற்றி புகழ்ந்து பாடவே மாட்டேங்கிறாங்களே ஏன் அமைச்சரே..? அரசவையில் பொய் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறீர்களே அரசே! நம் மன்னருக்குப் பிடித்த உணவு எது சொல் பார்க்கலாம்? குழிப் பணியாரம்..தான்..! தலை இருக்க வால் ஆடக்கூடாதா? என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே? உங்கள் உடலில் தலை இருக்க வேண்டுமெனில் உங்கள் வாள் ஆடக்கூடாது என்று எதிரி மிரட்டி ஓலை அனுப்பியுள்ளான் மன்னா! புலவரே…! என் புஜபல பாரக்கிரமத்தை போற்றும் பாடலை இயற்றிவிட்டீரா? அதற்கான நேரம் “கைவர” மாட்டேங்கிறது மன்னா! எதிரியை பார்த்ததும் மன்னர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்! அப்போ அது அறைக்”கேவல்”னு சொல்லு! எதிரி எல்லைகளை விரிவுப்படுத்தப் போகிறானாம் மன்னா! அப்படியானால் நம் எல்லையை “பதுங்குக் க

காது கொஞ்சம் நீளம்!

Image
  தச்சூர்க்கூட்டுசாலை!  பேக்கரி ஒன்றில்  கடைக்காரரும் இளைஞரும்!      என்னப்பா..! கடையை மூடிட்டு இப்படி நடுத்தெருவுலே  வியாபாரம் பண்றே?  நானாவது நடுத்தெருவுலே வியாபாரம் பண்றேன்! நீயெல்லாம்…இப்படி நக்கல் பண்ணிட்டு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கே ..!   அண்ணே கோச்சுக்காதேண்ணே! மில்க் பிஸ்கட் இருக்கா?    மாரி பிஸ்கெட் இருக்கு! எண்ணே மில்க் கேட்டா மாரி இருக்குன்னு சொல்றே? விரும்பினதை சாப்பிடற காலம் மாறி கிடைச்சதை சாப்பிடற காலம் வந்துருச்சுன்னு சொல்றேன்! வேணும்னா வாங்கு! இல்லே கிளம்பு இளைஞர் முறைத்தபடி நகர்கிறார்.      பொன்னேரி மளிகை கடை ஒன்றில் கடைக்கார்ரும் பொருள் வாங்க வந்தவரும்   50 சன்ரைஸ் ஒரு சரம் கொடுங்க!  சன்ரைஸ் இல்லே! ப்ரு போட்டுடலாமா? சரி போடுங்க! ஹமாம் சோப் ஆறு! சர்ப் எக்செல் 6 போடுங்க! சர்ப் எக்செல் இல்லே! ரின் இருக்கு போடவா? சரி போடுங்க!பில்ஸ்பெரி ஆட்டா அரைகிலோவுல ஒரு டசன்! பில்ஸ்பெரி இல்லே! நாகா இருக்கு போடலாமா? சரி போடுங்க!எவ்ளோ ஆச்சு? இந்தாங்க என்று ஒரு பை நிறைய சில்லரையை கொடுக்கிறார்!யோவ் சில்லரையை யார் எண்ணறது? நோட்டா கொடு! நோட்டு இல்லே..! சில்லரைதான் இருக்கு! நான் கேட்ட பொ

கவர்ச்சிக்கு மரியாதை! ஒரு பக்க கதை!

Image
  கவர்ச்சிக்கு மரியாதை!          நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. கண்ணன் தன் மனைவி கோதையுடன் பக்கத்து டவுனுக்கு பைக்கில் சென்று  கொண்டிருந்தான். வீட்டுத்தேவைக்காக சில அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும்  என்று கோதை நச்சரித்தமையால் அவளையும் அழைத்துக்கொண்டு சென்றான்.   அழகான கிராமத்து சாலையின் ஓரத்தில்  . ஒரு முலாம்பழத்தோட்டத்தில் பழங்களை பறித்து சாலையோரம் குவித்து வைத்திருந்தார்கள். அங்கே சிறியதும் பெரியதுமாய் அடுக்கியிருந்த  பழங்களைப் பார்த்ததும், என்னங்க! முலாம் பழம் தோட்டத்துலே பழுத்தது விக்கிறாங்க!  வெயிலுக்கு ஜுஸ் போட்டு குடிச்சா உடம்புக்கு நல்லது. ஒண்ணு வாங்கிகிட்டு போலாங்க!  என்றாள் கோதை.   வண்டியை நிறுத்திவிட்டு பழங்களில் ஒரு பெரிய பழத்தை பொறுக்கி எடுத்து எவ்வளவுப்பா?  என்றாள். அறுபது ரூபா கொடும்மா!    ”என்னது இந்த பழம் அறுபது ரூபாயா? நாற்பது ரூபாய்க்கு கொடு!”  “கட்டுப்படியாகாதும்மா!  அஞ்சு ரூபா கொறைச்சு கொடுங்க!”    “நாற்பதுன்னா கொடு! இல்லேன்னா வேணாம்!”   ” வராதும்மா!”   ” கொட்டிக்கிடக்குது பழம்! குறைச்சு கொடுக்க அவனுக்கு மனசே வர மாட்டேங்குது வண்டியை எடுங்க போகலாம்!” டவுனுக்கு சென்று வா