புத்தியா சொல்றே? பாப்பா மலர்
புத்தியா சொல்றே? கணேஷ் ஆர்வமாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் நண்பன் ராஜா அங்கு வந்து அவனருகில் அமர்ந்தான். என்ன கணேஷ்! ரொம்ப மும்முரமா படிச்சிகிட்டு இருக்கே? அரையாண்டு தேர்வுகள் நெருங்கிடுச்சே! அதுக்கு தயார் ஆகிறாயா? என்று வினவினான் ராஜா. ஆமாண்டா! அதுக்குத்தான் முழுவீச்சில் படிச்சிகிட்டு இருக்கேன்! இந்த முறை உன்னை விட அதிக மதிப்பெண் வாங்கிடனும்னு உறுதியா இருக்கேன்! ரொம்ப சந்தோஷம்டா! படிப்பில இப்படி போட்டி இருந்தாத்தான் நல்லா படிக்கணுங்கிற உத்வேகம் வரும். யாரு முதல் மதிப்பெண் எடுக்கிறதுன்னு ஒரு சவால் இருக்கும். ஆமா! நீ எந்த சப்ஜெக்ட் இப்ப படிச்சிகிட்டு இருக்கே! நானும் ரிவிசன் பண்ண உதவறேனே! என்றான் ராஜா. கணேஷ் ராஜாவை மிதப்புடன் பார்த்தான். ராஜா! நீ நினைக்கிறா மாதிரி நான் இப்ப எந்த சப்ஜெக்டையும் படிக்கலை ஆனா அதை விட முக்கியமான ஒண்ணை படிச்சிகிட்டு இருக்கேன்! அப்படி என்ன முக்கியமானது அது! இதுதான்! என்று கணேஷ் நீட்டிய புத்தகத்தை வாங்கி பார்த்தான் ராஜா! அது பரிட்சையில் முதல் மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற...