ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்!
ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்! நம்மை எல்லாம் படைத்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு விதவிதமான அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது நமது மரபு. அதிலும் முழுநிலவு நாளில் இறைவனுக்கு மிகவும் உகந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திரம் பவுர்ணமியோடு சேர்ந்து வரும் தினம் விஷேசமாக கடைபிடிக்க படுகிறது. ஐப்பசி மாதம் துலா மாதம் என்று விஷேசமாக கூறப்படுகின்றது. இந்த மாதத்தில்தான் துலா ஸ்நானம் என்ற காவேரியில் முழுகி முன்னோரை வழிபடும் சிறப்பும் இருக்கிறது. இந்த மாதத்திலே அஸ்வினி நட்சத்திரத்தோடு வரக்கூடிய பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இத்தகைய அன்னத்தினால் ஆன அபிஷேகம் சிவபெருமானுக்கு மட்டுமே செய்விக்கப்படுகிறது. சிவபெருமான் லிங்கத் திருமேனி உடையவர். அவருக்கு அபிஷேகம் செய்யப்படும் அன்னமும் லிங்க உருவம் உடையது. அன்னத்தால் ஆன சிவனை அன்னாபிஷேக தினத்தன்று தரிசித்து சேவிப்பது கோடி சிவனை வணங்கியதற்கு சமம் என்று புராணங்கள் கூறுகின்றன. எவ்வளவுகொடுத்தாலும் போதாது என்று சொல்பவன் கூட போதும் என்று சொல்லக்கூடியது அன்னம். ...