நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 30
நொடிக்கதைகள்! பகுதி 30 1.விதை: உங்க “செமன்”ல போதுமான உயிரணுக்கள் இல்லை! டெஸ்ட் ட்யுப் பேபிதான் முயற்சிப்பண்ணனும் என்று டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ந்தான் .விதையில்லா பழங்களை இறக்குமதி செய்யும் வியாபாரி. 2. ஏமாற்றம்: இடைத்தேர்தல் ரத்தாகாமல் நல்லபடியாக நடந்து முடிந்ததும் ஏமாற்றம் அடைந்தனர் தொகுதி வாசிகள்! 3. சாட்டிங்க்! இப்ப பேசறதுக்கு நேரம் இல்லை! உன் வாட்சப் நம்பர் சொல்லு! சாட்டிங்க்ல வரேன்! என்று அவசர அவசரமாக நம்பரை ஸ்டோர் செய்து கொண்டு நகர்ந்தான் சதிஷ்! 4.சுமை! மலைக்கோயிலில் சுமக்க முடியாமல் சுமந்து வந்த சுமையை இறக்கி வைத்து பெருமூச்சு விட்டனர் டோலி சேவகர்கள்! 5. வரன்! “வயசு கூடிக்கிட்டே போவுது! இன்னும் கல்யாணம் குதிர்ந்த பாடில்லை! வந்த வரனெல்லாம் தட்டிக்கிட்டே போவுது! தலையிலும் லேசா நரை விழ ஆரம்பிச்சிருச்சு! என் மகனுக்கு சீக்கிரம் ஒரு பொண்ணை தேடிக்கொடு தெய்வமே! கோயிலில் புலம்பிக்கொண்டிருந்தாள் அந்த தாய். 6. ஓட்டு! ”மறக்காம நம்ம சின்னத்துக்கு ஓட்டு போட்டுடுங்க! உங்க...