தினமணி கவிதை மணியில் என் கவிதை!

கண்ணால் காண்பதும்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 27th August 2017 03:25 PM  |   அ+அ அ-   |  
கண்ணால் காண்பதும் பொய்யாகும்
காட்சிகள் தெளிவில்லாத போது!
கயிறு கூட பாம்பாகத் தெரியலாம்
மனதில் தைரியம் இல்லாத போது!

கடவுளும் கூட கல்லாகலாம்
உள்ளத்தில் நாத்திகம் உருவெடுக்கும்போது!
நல்லவன் கூட தீயவனாகலாம்
நமக்கு பிடிக்காத போது!
மேதைகள் எல்லாம் பேதைகள் ஆகலாம்
மூளை மழுங்கும் போது!
பார்வைகள் குறைகையில் பார்க்கும் காட்சிகள்
சிறுக்கையில் காமாலை பீடிக்கையில்
காண்பவை எல்லாம் பொய்யாகலாம்!
எது பொய்? எது மெய்?
எது உண்மை? எது போலி?
பார்த்து அறிவதிலும் சில பாதிப்புக்கள்
இருக்கத்தான் செய்யும்!
நமக்குப் பிடித்தவன் தவறே செய்தாலும்
நல்லவனாய் காட்டும் கண்கள்!
நமக்கு வேண்டாதவன் நல்லதே செய்தாலும்
தீயோனாய் காட்டிவிடும்!
உள்ளம் நினைப்பதை ஒளிப்படமாய்
காட்டும் கண்கள்!
உள்ளம் வெண்மையானால்
உலகம் வெண்மையாக காட்டும்!
உள்ளம் கருத்தால் உலகமும்
இருண்டு போய்விடும்!
கண்ணால் காண்பதும் இருவகை!
புறக்கண்! அகக் கண் இரு பார்வை!
இரண்டும் வெளுத்தால்  
கண்ணால் காண்பதெல்லாம் நன்மை!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2