தினமணி கவிதை மணியில் என் கவிதைகள்!

தினமணி கவிதை மணி இணையப்பக்கத்தில் வாரம் தோறும் என் கவிதைகள் பிரசுரம் ஆவதை அறிந்திருப்பீர்கள்! போன வாரமும் இந்த வாரமும் பிரசுரம் ஆன கவிதைகள் உங்கள் பார்வைக்கு.  கவிதைக்கு வாரா வாரம் அவர்களே ஓர் தலைப்பு தருவார்கள். அந்த தலைப்பில் எந்த வகைமையில் வேண்டுமானாலும் கவிதைகள் அனுப்பலாம். சனிக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும். திங்களன்று பிரசுரம் ஆகும். சன்மானம் எதிர்பார்க்க முடியாது. நம் படைப்பு ஊடகத்தில் பிரசுரமாகும் என்ற திருப்தியே சன்மானம். ஆர்வமுள்ளவர்கள் தினமணி இணையப்பக்கத்திற்கு சென்று முயற்சிக்கலாம். வரும் வார தலைப்பு. கண்ணால் காண்பதும்.  அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: - askdinamani@dinamani.com

இனி என்னுடைய கவிதைகளை நீங்கள் படிக்கலாம்!


மழைநீர் போல:  நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 12th August 2017 04:02 PM  |   அ+அ அ-   |  
வான் சிந்தும் மழைத்துளிக்கு
நிறமில்லை! மனமில்லை! சுவையில்லை!
அது தான் சேரும் நிலத்தினைச்சார்ந்து
உவர்ப்போ கசப்போ இனிப்போ
என்று ஏதொவொரு சுவை பெறுகிறது!
கடலில் விழுந்தால் உப்பாகிறது!
செம்மண்ணில் விழுந்தால் செந்நீராகிறது!
களிமண்ணில் விழுந்தால் சகதியாகிறது!
மணலில் விழுகையில் நன்னீராகிறது!
கருவாகி உருவாகி பூமியில் உதிக்கையில்
குழந்தைக்கும் எந்த குணமும் இல்லை!
அதன் உள்ளமொ வெள்ளை!
உயர்வென்றும் தாழ்வென்றும் தீதென்றும் நன்றென்றும்
ஏதோன்றும் அறியாப் பிள்ளை!
வளர்ப்பினாலே சேரும் சிறப்பினாலே
நற்பெயரோ தீய பெயரோ பிற்காலத்தில்
பெறுகின்ற வகையில்
பிள்ளைகளும் ஒருவகையில் மழைநீரே!
மனதினிலே குழப்பங்கள் அகற்றி
நிர்மலமாய் இறைவனை தியானிக்கையில்
பேதங்கள் வாதங்கள் மறைந்திடுமே
கீழென்றும் மேலென்றும்
ஏழையென்றும் பணக்காரனென்றும்
தீயோன் என்றும் நல்லோன் என்றும்
பேதங்கள் பிரிக்காமல் அருள்கின்றவன்
அன்றோ ஆண்டவன்!
குணமின்றி சுவையின்றி, நிறமின்றி
கும்பிட்டவர்க்கும் அருளும் இறைவனும்
மழை நீராய் விளங்குகின்றான்!
மழை நீர் போல மனதினை
நிலை நிறுத்து!
நிர்மலமாய் மனதை செதுக்கு!
நிச்சயமாய் சிறக்கும் உன் வாக்கு!

என்ன தவம் செய்தேன்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 20th August 2017 02:54 PM  |   அ+அ அ-   |  
எத்தனையோ ஞானிகள் உருவாகி
உருவாக்கிய இம்மேதினியில்
ஓர் உயிராய் பிறக்க என்ன தவம் செய்தேன்?
புண்ணிய ஷேத்திரங்கள் புண்ணிய நதிகள்
ஓடும் பூவுலகில் பிறக்க
என்ன தவம் செய்தேன்?
விண்ணோரும் மண்ணோரும் விரும்பி
விரும்பி உலாவும் இப்பாரதத்தில்
உலாவ நான் என்ன தவம் செய்தேன்?
பல விருட்சங்கள் உயர் சிகரங்கள்
பலகோடி உயிர்கள் வாழும் பாரதத்தில்
பிறக்க என்ன தவம் செய்தேன்?
ஓரறிவு ஈரறிவும் மூன்றறிவு நான்கறிவு
ஐந்தறிவுப் பிறவிகள் இருக்கையில்
ஆறறிவாய் இந்த அவனியில் உதிக்க
என்ன தவம் செய்தேன்?
பெரும்கவிகள் மகாகவிகள் பெரும்புலமைகள்
பிறந்த பொன்னாட்டில்
சிறு கவியாய் உதிக்க என்ன தவம் செய்தேன்?
எத்தனையோ மொழிகள் பேசும் இந்த உலகில்
அத்தனைக்கும் மூத்த மொழி தமிழ்மொழி பேசும்
தாய்த் தமிழ் நாட்டில் பிறக்க என்ன தவம் செய்தேன்?
தாய்மொழியில் நம் தமிழை போற்றி புகழ்ந்து
கவியியற்றிட என்ன தவம் செய்தேன்?
என் தாய் வயிற்றில் கருவாகி உருவாகி
உயிர் பெற என்ன தவம் செய்தேன்?
எல்லோரும் வணங்கிடும் எம்பெருமான் இறைவனடி
தினம் தோறும் பூஜித்து சேவித்திட
என்ன தவம் செய்தேன்?
சீரோடும் சிறப்போடும் பெருங்கோயில்கள் கண்ட 
சிறந்த தமிழ் நாட்டில் பிறக்க 
என்ன தவம் செய்தேன்?
தேச விடுதலையில் தோயாது பணியாற்றி
தினம்தோறும் மணிமணியாய் செய்திகள் தரும்
தினமணி கவிதை மணியில் ஒரு கவிஞனாக
கவிதை வர என்ன தவம் செய்தேன்?
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

    Comments

    1. மழை நீர் அருமை. நீரின்றி அமையாது இவ்வுலகு. அது கடவுள் ஆனாலும் சரி குழந்தை ஆனாலும் சரி. சின்ன சின்ன ஆசை போன்று மேலும் பல மழை நீர் உவமைகள் சேர்த்திட வேண்டுகிறேன்.
      பாக்யாவில் தற்போது சிரிப்பு துணுக்குகள் எழுதுவது இல்லையா?
      நீண்ட நாட்களுக்குப் பின் வலையில் காண்பது மகிழ்ச்சி.

      --
      Jayakumar

      ReplyDelete
      Replies
      1. பாக்யாவில் சில மாத இடைவெளிக்கு பின் போனவாரம் முதல் மீண்டும் எழுதுகிறேன் சார்!

        Delete
    2. அருமை. வாழ்த்துகள்.....

      ReplyDelete
    3. அருமையான கவிதைகள் நண்பரே....

      இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post_21.html

      ReplyDelete
    4. பாராட்டுகள்


      நகைச்சுவை எண்ணங்கள் சில...
      http://www.ypvnpubs.com/2017/08/blog-post_22.html

      ReplyDelete
    5. அருமை சுரேஷ்...வாழ்த்துகள்!

      ReplyDelete
    6. தங்களது எழுத்துப்பணி தொடரவும், மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துகள்.

      ReplyDelete
    7. அருமையான வரிகள் தொடர்ந்து எழுதுங்கள். என்னுடைய கவிதைகளும் இடம் பெற்று வருகிறது.

      ReplyDelete
      Replies
      1. கே.அசோகன் என்பது தாங்கள்தானா? வாசித்து இருக்கிறேன்! மகிழ்ச்சி!

        Delete

    Post a Comment

    Popular posts from this blog

    தேவதை குழந்தைகள்!

    அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

    வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2