தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

இரவு நேரம்
இசை இனிக்கவில்லை!
கொசு!

பற்றிக் கொண்டதும்
பற்று அறுத்தது
நெருப்பு!

விளக்கேற்றி வைத்த போதும்
சூழ்ந்து கொண்டது இருள்!
நிழல்!

ஓசையோடு வாகனங்கள்!
அமைதி தொலைத்த சாலைகள்!
நள்ளிரவு

தழுவ மறுத்ததும்
கலைந்து போனது நித்திரை!
காற்று!

வண்ணமில்லா சித்திரங்கள்!
கருவில்லாமல் உருவாகின!
நீர்ச் சிதறல்!

புரட்டிப் பார்த்தது புத்தகங்களை
படிக்கவில்லை!
காற்று!

துரத்தி வந்தன
பிடிக்க முடியவில்லை!
வாகன முகப்பில் பூச்சிகள்!


முகவரி இழக்கும் முன்
முகம் ரசித்தது
தேன் சிட்டு!

கூந்தலில் பூச்சூடின
மரங்கள்!
மின்மினி!

குறும்புகள் பூக்கையில்
குதுகலமாகிறது வீடு!
குழந்தை!


சுண்ணாம்பு கட்டியில்லை
கரும்பலகையில் வளைகோடு!
பிறை நிலவு!

சுட்டெரிக்கும் சூரியன்!
தள்ளிப்போனது
காற்று!

பெரியவர்களான குழந்தைகள்!
புரியாமல் பூரிக்கும் பெற்றோர்
குட்டி சுட்டீஸ்!

பிஞ்சுகள் நஞ்சாக
பெற்றோர்கள் கொடுக்கிறார்கள் விலை!
தொலைக்காட்சி!

தாங்கி பிடித்தும்
தவிக்கவிட்டு சென்றனர்
துணி கிளிப்!

ஓலமிட்டன வண்டுகள்!
சூழ்ந்து கொண்டது
இருள்!டிஸ்கி} வேலைப்பளு, கணிணி பழுது காரணமாக தொடர்ந்து இணையம் வர முடியவில்லை. சிக்கல் சீரடைந்ததும் தளிர் நடை தொடரும்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. அருமை தோழர்
  ஹைக்கு மற்றும் நகைச்சுவை துணுக்குகள் உங்கள் பேட்டை.

  சும்மா அதிரடிக்கிறீங்க

  ReplyDelete
 2. அருமை அனைத்தும் சுரேஷ்!

  ReplyDelete
 3. வழக்கம் போலவே அனைத்தும் அருமை. ரசித்தேன்.

  ReplyDelete
 4. கைக்கூ அனைத்தும் அருமை ரசித்தேன்.

  ReplyDelete
 5. ஹைக்கூ உலகின் இன்னொரு நட்சத்திரம்..
  அருமையான கவிதைகள்
  தொடர்க தோழர்

  ReplyDelete
 6. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  ReplyDelete
 7. அதிகாலை குளிராய், அந்திமாலையின் தென்றலாய், நள்ளிரவின் அமைதியாய் மனதை வருடும் மயிலிறகு ஹைக்கூ பூக்கள் !

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
  http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!