தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்! இரவு நேரம் இசை இனிக்கவில்லை! கொசு! பற்றிக் கொண்டதும் பற்று அறுத்தது நெருப்பு! விளக்கேற்றி வைத்த போதும் சூழ்ந்து கொண்டது இருள்! நிழல்! ஓசையோடு வாகனங்கள்! அமைதி தொலைத்த சாலைகள்! நள்ளிரவு தழுவ மறுத்ததும் கலைந்து போனது நித்திரை! காற்று! வண்ணமில்லா சித்திரங்கள்! கருவில்லாமல் உருவாகின! நீர்ச் சிதறல்! புரட்டிப் பார்த்தது புத்தகங்களை படிக்கவில்லை! காற்று! துரத்தி வந்தன பிடிக்க முடியவில்லை! வாகன முகப்பில் பூச்சிகள்! முகவரி இழக்கும் முன் முகம் ரசித்தது தேன் சிட்டு! கூந்தலில் பூச்சூடின மரங்கள்! மின்மினி! குறும்புகள் பூக்கையில் குதுகலமாகிறது வீடு! குழந்தை! சுண்ணாம்பு கட்டியில்லை கரும்பலகையில் வளைகோடு! பிறை நிலவு! சுட்டெரிக்கும் சூரியன்! தள்ளிப்போனது காற்று! பெரியவர்களான குழந்தைகள்! புரியாமல் பூரிக்கும் பெற்றோர் குட்டி சுட்டீஸ்! பிஞ்சுகள் நஞ்சாக பெற்றோர்கள் கொடுக்கிறார்கள் விலை! தொலைக்காட்சி! தாங்கி பிடித்தும் தவிக்கவிட்டு சென்றனர் துணி கி...