கனவு மெய்ப்பட வைத்த கவுர்!
    கனவு மெய்ப்பட வைத்த கவுர்!       1973 முதலே பெண்களுக்கான கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் நம் இந்திய கிரிக்கெட் அணி கவனம் பெறத்தக்க வகையில் விளையாடி வருகின்றது. இரண்டு முறை உலக கோப்பையை நெருங்கி நெருக்கடிகளில் சிக்கி கை தவறவிட்டிருக்கிறது இந்திய அணி.     இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உலக அளவில் பெரும் கவனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். கிட்டத்தட்ட   இருபது ஆண்டுகள் விளையாடிய அவர் பல சாதனைகளை   செய்திருந்தாலும் உலக்கோப்பையை வெல்ல முடியவில்லை! உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அவர் கனவு. கடந்த 2022ல் அதே நோக்குடன் தான் அவர் உலக கோப்பையில் களமிறங்கினார். ஆனாலும் லீக் சுற்றோடு திரும்ப வேண்டிய சூழல்.     அப்போது இப்போதைய கேப்டன் கவுர், மற்றும் மந்தனா. இன்று நாம் தோற்றிருக்கலாம். ஆனால் அடுத்த உலக கோப்பை நமக்குத்தான். அதை வென்று உங்கள் கையில் கொடுப்போம் என்று சொல்லி ஆறுதல் தந்திருக்கின்றனர். அன்று   அவர்கள் சொன்னது இன்று நிஜமாகி இருக்கிறது.     இந்த உலக கோப்பைய...